Tuesday 29 May 2012

இல்லறமும் நல்லறமும்

இல்லறமும் நல்லறமும் - பசும்பொன் தேவரின் சீரிய சிந்தனைகள்

ஆண்மையில் பெண்மையும் பெண்மையில் ஆண்மையும் கொண்டது தான் மனிதப் பிறவி. ஒன்றையொன்று விலக்கிக் கொண்டதோ ஒன்றையொன்று தழுவாமல் தனிப்பட்டதோ அல்ல ஆண்மையும் பெண்மையும். இதற்கு அடையாளம் தான் அர்த்தநாரீஸ்வரர்.

ஆண்களுக்கு இடப்பக்கம் பெண் வடிவமாகவும், பெண்களுக்கு இடப்பக்கம் ஆண் வடிவமாகவும் அமைந்திருக்கிறது என்பது சாத்திரம். இவ்விரண்டில் விரும்பியவர்கள் விரும்பிய பக்தியை ஏற்று அனுசரிக்கலாம். அதாவது இல்லறத்தை விரும்புகிறவர்கள் அதை அனுசரிக்கலாம்.

துறவறத்தை விரும்புகிறவர்கள் அதைச் சாரலாம். ஆக இரண்டு அறங்களும் தரம் ஒன்றேயன்றி இரண்டல்ல. ஏற்றத்தாழ்வுமல்ல. இல்லறத்தை அனுபவிக்கிறவர்களுக்கு அவர்களுக்குரிய பலனை கொடுப்பதற்காக ஆண் - பெண் இணைப்பு மூலம் புத்திரன் என்ற பெயரால் அவர்களுடைய காலம் நிறைவேற்றப்படுகிறது.




இதே போல் துறவறம் பூனுகிறவர்களுக்கு இந்த பாசம் இடகலை - பிங்கலை என்ற நாடிகள் சூரியநாடி சந்திரநாடிகள் என்ற பேதத்தின் மூலம் சீடன் என்ற பெயரால் ஒரு புத்திரன் கிடைக்கிறது. அதன்மூலம் துறவிகளின் காலம் வளர்கிறது.




இல்லறத்திலும் துறவறத்திலும் சிறிது பெரிது பார்ப்பது பேதமை.  இரண்டும் ஒரே நிறையையும் தகுதியையும் கொண்டது தான். இதில் பெரிது சிறிது பேசுகிறவர்கள் இரண்டும் விளங்காத நபர்களாகத் தான் இருக்க முடியும்.

இல்லறம் இல்லையேல் உத்தமர்கள் பிறக்க வழியில்லை. துறவறம் இல்லையேல் மனநெறியை சாதிக்கும் மகாயோகிகள் தோன்ற வழியில்லை.

ஆகவே இல்லறமும், துறவறமும் வெவ்வேறல்ல. அது அவரவர் மனப்போக்கிற்க்கும் பிராணத்துவ தர்மத்திற்கும் தக்கவாறு உண்டாக்கப்பட்ட காரியமாகும்.

பசும்பொன் தேவரின் சீரிய சிந்தனைகள் பக்கம்-92

Saturday 11 February 2012

பசும்பொன் தேவர் திருமகனாரின் எழுச்சியுரை

"பல மறைக்கப்பட்ட உண்மைகளை தமிழ் கூறும் நல்லுலகிற்கு (அரசியலை மட்டும்) பதியும் எண்ணம் உண்டு. விரைவில் செய்வோம்." என்று சொல்லியிருந்தேன். அன்றைய சூழ்நிலைகளை பசும்பொன் தேவர் திருமகனாரின், அவர்களே விளக்கும் மதுரை தமுக்கம் "ஜனநாயக காங்கிரஸ் மாநாடு" பேச்சு உங்களுக்கு இன்றும் உண்மையின் உரைகல்லாக இருப்பது அதை கேட்கும் போது புரியவரும். நம் நாடு நடந்து வந்த பாதை பற்றிய தெளிவு கிடைக்கும்.

இன்றும் ஏன் காங்கிரசும், பாரத நாட்டு அரசியலும், பொருளாதாராமும் தடுமாறிக் கொண்டிருக்கிறது? அதன் மூலம் என்ன? எப்படி எல்லாம் அதற்கு அன்றே சதி செய்யப்பட்டது? அதன் உலக அரசியல் என்ன? அன்றைய தலைவர்களின் கோழைத்தனமான துரோகம் என்ன? வீரியங்கள் எல்லாம் எப்படி இரண்டாம் பட்சமாக ஆக்கப்பட்டது? இன்றும் பாகிஸ்தானில், இலங்கையில், முல்லைபெரியாரில், கூடங்குளத்தில் அதற்கான எதிரொலி என்ன? என்பதை அரசியம் தெரிந்தவர்கள் பசும்பொன் தேவர் திருமகனின் பேச்சை கேட்கும்போது மேலும் புரிந்து கொண்டு தெளிவு சேர்த்து கொள்ளமுடியும்..

அவர் பேசிய அந்த உலக, பாரத, தமிழக அரசியல் வீரிய பேச்சின் சாரம் என்னவென்றால்

ஆங்கிலேய மனோபாவம்
மவுண்ட் பேட்டன் பிரபு
காங்கிரஸ்
வெள்ளையர் வரலாறு பாரத தமிழர் வரலாறாக
ஆகஸ்ட் புரட்சி
புதிய ஆட்சி சதி
துரோகம்
அரசாட்சி யார் செய்ய வேண்டும்
படித்தவன் நிலை
வீரன் நிலை
மெய்ஞானி யார்
அவலட்சணம்
அகிம்சை யார் பேசலாம்
கோழைத்தனம் எப்போது மாலை போட்டுக்கொள்ளலாம்
மகாத்மா யார்
ஞானி யார்
திருவள்ளுவர் அரசியல்
மதம் வாழ சதி
காட்டிகொடுத்தது  -  சீக்கியர் துரோகம்
கும்பெனியார் ஆட்சி
குதிரை 1:சுதேசிகளை பிரிக்க சூழ்ச்சி
குதிரை 2: காங்கிரஸ் - உண்மையில் சுதந்திர விதை போட்டவர்கள் யார்
குதிரை 3: மெசபடோமியா சண்டைக்கு அகிம்சாவதி செல்வது - பஞ்சாப் படுகொலை பரிசு
அகிம்சாவாதிகளின்  ரத்தம்
உலக அரசியல் - யுத்தம்
குதிரை 4: இந்திய அரசு - மஞ்சள் பெட்டி தேர்தல்
மக்கள் அகிம்சைக்கு தயாராக இல்லை
இந்திய ராணுவம் முன்னேற்றம்
இந்திய சேனையின் வீரம்
வேவல் திட்டம்
ஜின்னா - முஸ்லிம் பிரதிநிதித்துவம்
அகிம்சை - சந்தர்ப்பவாதம்
வீரமுமில்லை சாதுவாகவுமில்லை
ராணுவ பட்ஜெட் எதற்க்காக
பாதுகாப்பு மந்திரி
காமராஜ் - முத்தையா செட்டியார் - கிருஷ்ணாமாச்சாரி - பதவி
1930ன் வீரம் 1957ல் காண்கிறேன்
சிம்லா செக்ரட்ரியெட்
பாகிஸ்தான்
எப்படியும் பிழைத்தால் போதும் என்ற சர்க்கார்
திரைமறைவு நாடகம்
தமிழ் மாகாண தரித்திரம்
துரோகியுடன் கூட்டணி - காட்டிக்கொடுத்த கம்யூனிஸ்டுடன்
போராளிகளை கூலிகள் என்றதால்
ராஜாஜி தேவர் பிரிவினால் காமராஜர் தலைவரா?
பின்னர் காமராஜர் ஏன்?
தாயும் மறுத்த காலம்
நீதிக்கட்சிக்கு எதிராக
காமராஜரை கொலை செய்ய
லட்ச லட்சமாக செலவு செய்தவர்களின் நாடார்களின் செயல்
ஏன் ஊமையானேன்
தகப்பனாரே எதிரியாக
காமராஜர் ஜாதிப்பற்று
எல்லா வழக்குகளிலும் முதல் எதிரி
உங்களைவிட வெள்ளைக்காரன் ஆயிரம் மடங்கு நல்லவன்
கொன்று எரித்த அவலம்

Wednesday 4 January 2012

உயர்தனிச்செம்மொழி தமிழ் மைந்தனின் ஆவணப்படங்கள்

பொதிகை தமிழ் தொலைக்காட்சியில் ஐயா பசும்பொன் திரு.உ. முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் பற்றிய ஆவணப்படம்.



பசும்பொன் திரு.உ. முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் பற்றிய சிந்தனை ஊற்றுக்கள்! ஆய்வுச் சிந்தனைகள்!



எளிமை, ஆன்மீகம், வீரியம், வெற்றி - பசும்பொன் திரு. உ. முத்துராமலிங்கத்தேவர் அவர்கள்



வீரியக்கலைகள் இன்றும் பசும்பொன் தேவர் திருமகன் பெயரில் - "உடலை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே"வென்ற  திருமூலர் வாக்குப்படி

 



வீரியக்கலைகள் உயிர்ப்போடு இன்றும் பசும்பொன்னில் ...

 


"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" - தமிழ் மறைக்கு எடுத்துக்காட்டாய் ஒரு தீரத்தமிழனுக்கான முதல் மரியாதை இங்கே!



"மன்னன் மக்கட்கு இறை" என்ற வள்ளுவன் வாக்கிற்கேற்ப நல்லோரை வல்லோரை தமிழ் மண் என்றும் போற்றும்!  எப்பொழுதும் புகழும்! அதற்கு ஒரு சான்று திருச்சிராப்பள்ளியில்..



நல்லவை போற்றுவோம்!
நல்லவர்களை போற்றுவோம்!
இம்மண்ணில் நல்லவை தானாய் நடக்கும்!