Showing posts with label தேசியம் - அரசியல். Show all posts
Showing posts with label தேசியம் - அரசியல். Show all posts

Saturday, 15 October 2011

நாடாளுமன்றத்தில் பசும்பொன் தேவரின் முழக்கம்

1957ல் நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தேர்தலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெற்றி...

அதன்பின் முதுகுளத்தூர் சட்டப்பேரவை இடைத் தேர்தல்... இமானுவேல் கொலை... கீழத்தூவல் படுகொலை... 1957 ஜனவரி 28 நள்ளிரவு கைது... தொடர் சிறை வாழ்க்கை... 1959 ஜனவரி 7ல் விடுதலை... அதன்பின் தமிழகம் முழுவதும் தொடர் முழக்கம்... அதனால் நாடாளுமன்ற உறப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் இரண்டாண்டு கழித்துத்தான் நாடாளுமன்றத்தில் பசும்பொன் தேவரின் முழக்கம் ஒலித்தது....

1959 பிப்ரவரி 13... இன்றுதான் பசும்பொன் முத்துராமலிங் தேவர் நாடாளுமன்றத்தில் முழங்க நேரம் ஒதுக்கப்பட்டது... பின் 16 ஆம் தேதியாக அது மாற்றப்பட்டது... இறுதியில் 17ஆம் தேதியின் அந்த வாய்ப்பு பசும்பொன் தேவருக்கு கிடைத்தது. அதுவும் மாலை 4.45க்கு... மாலை 5 மணிக்கு நாடாளுமன்றம் முடிந்துவிடும்... இந்த இடைப்பட்ட கால் மணி நேரத்தில் தமது கருத்து முழுவதையும் பசும்பொன் தேவர் வெளியிட வேண்டும். எழுந்தார் பசும்பொன் தேவர்... ஆங்கிலத்தில் தொடர்ந்தார் முழக்கத்தை... அதுவரை கேட்டறியாத பசும்பொன் தேவரின் ஆங்கில முழக்கத்தை கேட்டு வடமாநிலத் தலைவர்கள் விழிகள் மூட மறந்தன.

மறுநாள் வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸின் டெல்லிப் பதிப்பு.
"Mr. Muthuramalinga Thevar the last speaker of the day, held the attention of the house with his fiery oratory" என்று தேவரின் நாடாளுமன்ற முழக்கம் பற்றி குறிப்பிட்டது.

இனி, நாடாளுமன்றத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் முழக்கம்... தமிழில் தந்திருப்பது ஏ.ஆர். பெருமாள்.  

ஜனாதிபதியவர்களின் தலைமையுரை மீது பேச வேண்டிய இவ்வேளையில், நமது வெளிநாட்டுக் கொள்கை, காமன்வெல்த் தொடர்பு முதலியவை பற்றி இடையே கொஞ்சம் விவரிக்க விரும்புகிறேன் - விவரிக்க வேண்டியது அவசியமும் கூட. காமன்வெல்த் என்பதன் பெயரால் நாம் ஒரு கூட்டுறவில் பிணைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், நாம் பிணைக்கப்பட்டுள்ள காமன்வெல்த் என்ற கூட்டுறவின் பங்காளிகள், நமது நாட்டையும், செல்வத்தையும் சேர்த்துப் பங்குரிமை கொள்ள ஆசைப்படுகிறார்கள். பொதுச் சொத்து என்றும் கருதுகிறார்கள். ஆனால் நமது சுயாதிக்கத்தை அவர்கள் மதிப்பதே இல்லை. நமது நாட்டையும் செல்வத்தையும் அவர்கள் நேசிக்கிற அளவுக்கு நமது சுயாட்சியை நேசிக்கவில்லை என்பதால் இது ஓர் அபாயகரமான கூட்டுறவு என்றே குறிப்பிடலாம்.  

மேலும், நாம் சாதிக்கும் ஒவ்வொரு சாதனையையும் அஹிம்சா முறையில் சாதித்துவிட்டதாக ஒரு அபிப்பிராயத்தை உலகெங்கும் உண்டாக்கி விட்டிருக்கிறோம். ஆனால் அகிம்சை என்ற தத்துவம் சிந்திப்பதிலும், பேசுவதிலும் உள்ள எளிமை, அதை நடைமுறைப்படுத்துவதில் இல்லை என்பது அநேகமாக நம் எல்லோருக்கும் தெரியும். அகிம்சை என்பது அரசியல் ரீதியான செல்பாடுகளுக்கு ஒத்தியங்க அல்லது உடன்படுத்தி இயக்க இயலாத ஒரு தத்துவம்! அதைப் பேசலாம் - எழுதலாம், ஆனால் அரசியலில் அதைச் செய்ய முடியாது என்பது கண்கூடு.
 

எல்லா நாடுகளிலும் - எல்லாப் பகுதிகளிலும், இரண்டு கட்சிகள் உண்டு. ஒன்று வலதுசாரிக் கட்சி - மற்றொன்று இடதுசாரிக் கட்சியாக இருக்கும் - இருந்து வருவதை நாமும் அறிவோம். இரண்டு கட்சிகளும் ஒன்றை ஒன்று வேறுபடுமேயன்றி தேசியத்தை - தேச நலனைப் பற்றிய துறையில் வேறுபடாது. இரண்டு தேச பக்தக் கட்சிகள் தான். இரண்டுக்கும் மக்கள் ஆதரவு உண்டு, இரண்டு கட்சிகளுமே நாட்டுக்கான கடமையைச் செய்து வருகின்றன. அதேபோல இந்த நாட்டிலும் வலதுசாரி - இடதுசாரி என்ற முறையில் இயங்கினர் - இயங்குகின்றனர்.  

தேச விடுதலைக்காகப் பல பயங்கரப் புரட்சிகளைச் செய்த நமது நாட்டு இடதுசாரிகளில், பகவத் கீதையைக் கையில் வைத்துக்கெண்டே அந்நியரின் தூக்கு மேடையில் பலியானோரும், அந்தமான் தீவுகளில் ஆவி துறந்தோரும் கொஞ்சமல்ல, அவர்கள் தேசத்திற்காகவே கடமையைச் செய்து உயிரை இழந்தவர்களாக இருந்தாலும், காந்தீயர்களாக இருக்கவில்லை என்றே கருதப்பட்டார்கள். இதனால் அவர்கள் அடியிட்ட சுதந்திர இந்தியாவில் அவர்களுக்குரிய சிறப்புக்கு இடமில்லாது போய்விட்டது. அதாவது, ஒருவன் தேசத் தியாகியாக மட்டும் இருந்தால் போதாது ? அவன் தேசபக்தன் - தியாகி - என்பதை விட காந்தீயன் - காந்தி பக்தக் கூட்டத்தில் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள் : போகட்டும்!
 
'அகிம்சை' என்ற கொள்கை நாம் அடிமைகளாக இருந்தபோது ஓரளவுக்குச்சரி, ஆனால் நாம் இப்பொழுது ஒரு குடியரசை நிர்மாணித்திருக்கிறோம். நமது சர்க்கார் கோடானுகோடி ரூபாய்களைக் கொண்டும் ராணுவச் செலவைச் செய்கிறது. போர்ச்சுகலும், எல்லைப் புறங்களில் பாகிஸ்தான் புரிகிற கொடுமைகளைப் பற்றி, பேசும்போது கூட அகிம்சையைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளத் தவறுவதுமில்லை.
 
கொள்கையோ அகிம்சை; வருமானத்தில் பெரும்பகுதி செலவிடுவதோ ராணுவத்துக்கு! அதே சமயம் அந்நியர்களின் அக்ரமத்திற்கு முன்னே அகிம்சைப் பேச்சு - ஆனால், அதே சமயம் நாகா மலை ஜாதியினர் மீது பாய ராணுவத்தை ஏவிவிடுகின்றோம் - நமது அரசியல் எதிர்ப்பாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகளைச் சாய்க்கத் துப்பாக்கிகளின் வாய்களைத் திறந்துவிட அனுமதிக்கிறோம்! இது எந்த ரக அகிம்சாவாதம் என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.
 
எந்தக் கொள்கையும், எந்தச் சமயத்திலும் செயலோடு சம்பந்தப்பட வேண்டும். செயலோடு சம்பந்தப்படும் கொள்கையைத்தான் உருவாக்கவும் வேண்டும். பேசுவதற்குக் கொள்கை, செய்வதற்கு வேறு முறை என்றால் அக்கொள்கை வெறும் பிரச்சார அந்தஸ்தோடு நின்றுவிடும். அதற்குச் சாகாத்தன்மையும் ஏற்படாது என்பதைக் கூறிக்கொள்கிறேன்.
 
யுத்த முடிந்த ஆரம்பகாலத்தில் எல்லோருமே அமைதி - சமாதானம் பற்றிப் பேசினார்கள். அதற்காக ஐ.நா. சபையும் உண்டாக்கப்பட்டது. ஆனால், சமாதான சாத்தியத்திற்காக உண்டாக்கப்பட்ட உலகப் பொதுச் சபைக்கு ஐக்கிய நாடுகள் சபை என்று பெயர்தான் வைக்கப்பட்டதேயன்றி, அதன் நோக்கமெல்லாம் ஐக்கியத்தைப் பிளப்பதாகவே இருக்கிறது. அது பேசுகிற சமாதனாப் பேச்சு, செயலை நெருங்கவே அனுமதிக்கப்படவில்லை....

பசும்பொன் தேவரின் எழுச்சியுரை கேளுங்கள்

பசும்பொன் தேவரின் எழுச்சியுரை கேளுங்கள்

ஆங்கிலேய மனோபாவம்
மவுண்ட் பேட்டன் பிரபு
காங்கிரஸ்
வெள்ளையர் வரலாறு பாரத தமிழர் வரலாறாக
ஆகஸ்ட் புரட்சி
புதிய ஆட்சி சதி
துரோகம்
அரசாட்சி யார் செய்ய வேண்டும்
படித்தவன் நிலை
வீரன் நிலை
மெய்ஞானி யார்
அவலட்சணம்
அகிம்சை யார் பேசலாம்
கோழைத்தனம் எப்போது மாலை போட்டுக்கொள்ளலாம்
மகாத்மா யார்
ஞானி யார்
திருவள்ளுவர் அரசியல்
மதம் வாழ சதி
காட்டிகொடுத்தது - சீக்கியர் துரோகம்
கும்பெனியார் ஆட்சி
குதிரை 1:சுதேசிகளை பிரிக்க சூழ்ச்சி
குதிரை 2: காங்கிரஸ் - உண்மையில் சுதந்திர விதை போட்டவர்கள் யார்
குதிரை 3: மெசபடோமியா சண்டைக்கு அகிம்சாவதி செல்வது - பஞ்சாப் படுகொலை பரிசு
அகிம்சாவாதிகளின் ரத்தம்
உலக அரசியல் - யுத்தம்
குதிரை 4: இந்திய அரசு - மஞ்சள் பெட்டி தேர்தல்
மக்கள் அகிம்சைக்கு தயாராக இல்லை
இந்திய ராணுவம் முன்னேற்றம்
இந்திய சேனையின் வீரம்
வேவல் திட்டம்
ஜின்னா - முஸ்லிம் பிரதிநிதித்துவம்
அகிம்சை - சந்தர்ப்பவாதம்
வீரமுமில்லை சாதுவாகவுமில்லை
ராணுவ பட்ஜெட் எதற்க்காக
பாதுகாப்பு மந்திரி
காமராஜ் - முத்தையா செட்டியார் - கிருஷ்ணாமாச்சாரி - பதவி
1930ன் வீரம் 1957ல் காண்கிறேன்
சிம்லா செக்ரட்ரியெட்
பாகிஸ்தான்
எப்படியும் பிழைத்தால் போதும் என்ற சர்க்கார்
திரைமறைவு நாடகம்
தமிழ் மாகாண தரித்திரம்
துரோகியுடன் கூட்டணி - காட்டிக்கொடுத்த கம்யூனிஸ்டுடன்
போராளிகளை கூலிகள் என்றதால்
ராஜாஜி-தேவர் பிரிவினால் காமராஜர் தலைவரா?
பின்னர் காமராஜர் ஏன்?
தாயும் மறுத்த காலம்
நீதிக்கட்சிக்கு எதிராக
காமராஜரை கொலை செய்ய
லட்ச லட்சமாக செலவு செய்தவர்களின், நாடார்களின் அன்றைய செயல்
ஏன் ஊமையானேன்
தகப்பனாரே எதிரியாக
காமராஜர் ஜாதிப்பற்று
எல்லா வழக்குகளிலும் முதல் எதிரி
உங்களைவிட வெள்ளைக்காரன் ஆயிரம் மடங்கு நல்லவன்
கொன்று எரித்த அவலம்







உணர்வுடன்..,

Friday, 19 August 2011

Pasumpon Muthuramalingam Thevar’s speech

Pasumpon Muthuramalingam Thevar’s speech:

“There is a group contesting the elections with the call, ‘Tamil love is important; Tamil Nadu must live’. It is essential to have love for Tamil. But, see how these fellows display their love? In their meetings, they keep telling, ‘North Indians, South Indians; North land, South land” and attempt to divide us. They say, the next meeting is at ‘Jinnah Park’. The one after that is at ‘Robinson Park’. They have no problem using these names.

At the same time, if it is going to be in ‘Tilak Ghat’, they get angry to use his name. They say, ‘North Indian ---- Father ground’.

(Sarcastically, Thevar, switches to English):

In what way Jinnah is not a North Indian? How is the names Jinnah and Robinson so sweet to you Sir? How is the name of poor Tilak so bitter to you Sir? I am not able to understand.

This exposes that you came from ‘Justice Party’ whose primary job was bootlicking the Whites. Further, these fellows say that, ‘North Indian, swindles Dravidian land. North Indian name must not be here. If present, we will agitate to change it’. Very happy.

You agitated to change the name ‘Dalmiapuram’. But, you did nothing to change ‘Harvypatti’. Why not? White’s name can be there. That will make you happy. But, you will want the name ‘Dalmiapuram’ to go. Will any fellow with sense agree?

In Harvey mill, பட்டிவீரன்பட்டி Soundara Pandiyan’s family has stocks. He is a founding father of DMK. So, your party won’t get money, if you ask for the name to be changed. So, it will be pointless to hide the truth from the Tamils, by harping about the language. Understand this. This is the secret.

In addition, they keep shouting ‘Dravida nadu’. How dare you ask for this? If you had fought for freedom from the British, by fighting along with the people when the Britishers were keeping us as slaves, we may say, you qualify to ask for this.

n addition, they keep shouting ‘Dravida nadu’. How dare you ask for this? If you had fought for freedom from the British, by fighting along with the people when the Britishers were keeping us as slaves, we may say, you qualify to ask for this.

How can you demand ‘Dravida nadu’ today when we were fighting for independence, you took money from the British and conducted ‘war propaganda’ in their favor? Like the ‘secret agreement’ that resulted in the formation of Pakistan, you may also be the ‘fifth columnist’ for the Whites. We are not mad to be cheated like that.

‘We want Tamil. No to Hindi’, is what they say. In the 1937 anti-Hindi agitation, I told Rajagopalachariyar’s ministry, not to impose Hindi. This is history. ‘If our party comes to power, we will have the name ‘Tamil State’. We are not against removing the name ‘Residuary Madras State’. But, by misusing the Tamil language name and posing as preserver of Tamil people’s rights, if you are going to bring in ‘agitation to spoil Tamil Culture’ and ‘atheism in the name of creating a rift between, Brahmins and non-Brahmins’, we won’t allow.

How do you protect non-Brahmins, by writing stories like ‘Romapuri Rani’? By writing such stories, how many school boys have you spoiled? In addition to ‘Romapuri Rani’, you have also written ‘Thangaiyin Kadhal’,in which you have written that, ‘a brother falls in love with his sister’. Next, why can’t the son marry the mother? What else? Is this, Tamil culture?

My request to all of you is not to support these parties which will ruin the lives of school going children thereby take our country in the path of destruction.

தலித் மக்களுக்காக தேவர்



சூரியனையும், சந்திரனையும், மி்ன்மி்னிப்பூச்சிகளைப்
பாவித்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது பாரதி, வ.உ.சி., தேவர், அம்பேத்கார் போன்ற தேசியத்தலைவர்களை சாதியத் தலைவர்களாகச் சொல்வது...

தலித் மக்களுக்கான ஆலயப் பிரவேசம் நடத்த ராஜாஜி மந்திரிசபை சுதந்திரப் போராட்டவீரர் வைத்திய நாதய்யர் வழியாக முயன்றபோது, வெளியில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. செய்வதறியாது திகைத்துப் போயிருந்த அய்யரவர்களுக்கு "தேவரை அணுகுங்கள்" என்கிற ஆலோசனை ராஜாஜியிடமி்ருந்து கிடைத்தது. அப்பொழுது தேவரவர்களுக்கும் ராஜஜிக்கும் அரசியல் ரீதியாக முரண்பட்டு இருந்தாலும், இக்காரியத்தில் தேரரவர்கள் உதவ முன் வந்தார். "உங்களின் எதிர்ப்பைக் கைவிடாமல் மேலும் கெடுதல் செய்தால் நானே பல்லாயிரக்கணக்கான ஹரிசனங்களையும் மற்றுமுள்ளவர்களையும் படையாகத் திரட்டி தமி்ழகம் முழுக்க ஆலயப் பிரவேசம் செய்வேன்" - என்று சானாதனிகளைப் பார்த்து தேவரவர்கள் கடுமையாக எச்சரித்ததும் சானாதனிகள் பணிந்தனர்.

இதனைத் தேவரவர்களே தமி்ழக சட்டமன்றத்திலும் தனது சொற்பொழிவில் தெரிவித்திருக்கிறார்

1952 ல் மீண்டும் ராஜாஜி மந்திரிசபை அமைந்தபோது "குலக் கல்வித்திட்டம்" என்ற வர்ணாஸ்ரம அடிப்படையிலான திட்டம் கொண்டுவந்தபோது இதை வன்மையாக எதிர்த்து இவ்வாறு கூறினார்"ராஜாஜி கொண்டு வந்த ஆலயப் பிரவேசத்தை முன்பு ஆதரித்த நாங்கள், குலக்கல்வியை எதிர்க்கிறோம்" என்று தலித்களுக்காகக் குரல் கொடுத்தார்

மேலும் அதே சபையில் பலமுறை பேசும் போதும் குலக் கல்வித்திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். "தகப்பன் தொழிலை மகன் செய்யத்தான் வேண்டும் மென்ர ஒரு சூழ்னிலை ஒரு சமுதாய அமைப்பு கல்வி முறை முன்பு இருந்ததது. அதை நான் மறுக்க வில்லை. ஆனால் இன்றைக்கு எந்த ஜாதியில் பிறந்தவனாக இருந்தாலும் கூட, தன்னுடைய திறமைக்கேற்ப எந்தத்தொழிலையும் செய்யலாமென்ற ஒரு சூழ் நிலை ஏற்பட்டுவிட்டது என்பது கணம் முதலமச்சரப் போன்ற அறிவாளிக்குத் தெரியாமலிருக்க முடியாது"

தலித் மக்களுக்காக 1954 மார்ச் 24 ல் அவர் ஆற்றிய உரை:
"இந்த ஹரிசனம், அதில் முன்னேற்றம் என்று சொல்லப் படுகிற விவகாரம்... இந்திய தேசத்திற்கும், சிறப்பாக இந்து மதத்திற்கும் ஒரு பெரும் களங்கம் என்று சொன்னால் அது மி்கையாகாது - இந்த(சாதி) பழக்கமானது மக்களைச் சின்னாபீன்னப்படுத்திவிட்டது. இது பரிதாப வளர்ச்சி, பிற்போக்கான வளர்ச்சியுங்கூட அதே போல சதோதரர்களாக வாழ்ந்த சமூகத்தால் தொழிலின் காரணமாக வகுப்பப்பட்ட பொழுது தீண்டாமை என்கிற இழிவான நிலைக்கு ஆகிவிட்டார்கள்" - என தீண்டாமைக்கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.

அது மட்டுமல்ல தலித் மக்களின் வாழ்வு உயரச் செய்ய வேண்டியது என்ன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

"ஹரிசனங்கள் பணக்காரர்களாக இருப்பார்களானால் அவர்களோடு கைகோர்த்து கலந்து வாழவும், சம்பந்தம் செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள் என்பதைப் பழக்கத்தில் பார்க்கிறோம்... செய்யவேண்டியது என்னவென்று கேட்டால், பெரும்பாலான நிலங்கள் வீணாகக் கிடக்கின்றன. அந்த பெரும்பாலான நிலங்களை தர்காஸ்து கொடுக்கிறபோது பழைய அரசாங்கத்தின் பழக்கப்படியே உயர்ந்தவர்கள், வேண்டியவர்கள் என்பவர்களுக்குத்தான் கொடுக்கப்படுகிறதே தவிர, அந்த ஏழைகளுக்கு ஏன் சலுகை காட்டவில்லை...பெரும்பாலான ஹரிசனங்கள் உழுதுகொண்டே வாழ்வோர்களாக சர்க்கார் ஆக்குமானால் பிறருக்கு கை கட்டி வாழ்கிற இழிவான நிலைமையிலிருந்து மாறி ஹரிசனங்கள் நல்ல விவசாயிகளாவார்கள். அந்த முறையில் ஹரிசனப் பிரச்சினையை 60% செளகரியமாகத் தீர்க்கலாம்"

சித்தாந்தங்களையும் இந்துமதக் கோட்பாடுகளையும் நன்கு உணர்ந்த தேவரவர்கள் எல்லோரையும் சமமாகவே பாவித்தார். சகோதரர்களாகவும், இறைவனின் திருவுருவாகவும் கண்டார். "மனித தெய்வங்களே" என அனைவரையும் அழைப்பார்

"உயர்வு தாழ்வு அற்றது தான் மனித உலகம். உயர்வும் தாழ்வும் மனிதனாகக் கற்பித்துக் கொண்டவை. மனிதன் தன் உடலில் உண்டாக்கிக் கொண்ட உயர்வு தாழ்வில் ஒரு உறுப்பை உயர்வாக எண்ணி, இன்னொரு உறுப்பைத்தாழ்வாக நினைக்கக்கூடாது. கரம் கூப்பி வணங்கும் போது இரு கைகளும் இணைந்துதான் வணங்க வேண்டும்" என்று கூறி உயர்வு தாழ்வு கூடாது, சாதி வேறுபாடுகள் கூடாது என்றார்

நிறம், சாதி பார்த்தா மனிதனை இறைவன் படைத்தான். அனல் நிறம் கொண்ட சிவனையும், அட்டக்கரி நிறம் கொண்ட கண்ணனையும் நாம் நிறம் பார்த்து வணங்குவதில்லை. மனிதர்கள் சாதி வித்தியாசம் பார்க்கக் கூடாது என்பதற்கு அரன் மகன் குமரனையும், குறமகள் வள்ளியையும் தம்பதியாக்கிக் காட்டுகிறது நமது புராணம். "சாதி என்பது பச்சை அநாகரிகம் சாதியையும் நிறத்தையும் பார்ப்பவன் அரசியலுக்கு லாயக்கில்லை சாதி பார்ப்பவன் தெய்வத்தை வணங்குவதில் அர்த்தமி்ல்லை சாதிக்காக எதையும் செய்பவன் அரசியலில் புகுந்தால அரசியல் கெடும். சாதியும், நிறமும் அரசியலுக்குமி்ல்லை ஆன்மீகத்துக்குமி்ல்லை" என மனிதனுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் பூஜை" என்று கூறினார்.

தாழ்த்தப் பட்டவர்களும், ஆதி திராவிடர்களும் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றமடைய கல்வி மி்க முக்கியம் என உரைத்தார்"ஒரு சாதி ஆதிக்கத்திலுள்ள பள்ளியில் மற்றொரு சாதி மாணவருக்கு இடம் கிடைக்காத நிலையா" என் மனம் நொந்தார்.

சமுதாயத்தில் தாழ்த்தப் பட்ட நிலையில் உள்ளோர் தங்கள் தொழிலை தூக்கி எறிந்து விட்டு வாழ்க்கையின் முன்னேற்றமான தொழிலை செய்து பொருளாதார வசதிகளை பெருக்கி அதன் மூலம் தங்கள் குழந்தைளின் கல்வி வளர்ச்சியில் கவனம் அதிகம் பெற வேண்டும்-என்ற கேட்டுக்கொண்டார்.

பெரும் பணக்காரர்களே நிலங்களை வாங்கி குவித்து கொண்டிருப்பதை அறிந்து ஏழை மக்களும் குறிப்பாக தாழ்த்தப் பட்ட மக்களுக்கு அரசு நிலங்களைப் பகிர்ந்து கொடுங்கள். அவர்களை சொந்த நிலமுள்ள விவசாயிகளாக ஆக்குங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். தாங்களும் மற்றவர்களுக்கு இணையானவர்கள் என்ற நிலை வர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

தாழ்த்தப் பட்டவர்களுக்காகக் கட்டப் படும் குடியிருப்புகள் ஊரை விட்டு தொலைவிலில்லாமல் ஊருக்குள்ளேயே கட்டவெண்டுமென்றார். பஸ்ஸிலோ, ரயிலிலோ சம அந்தஸ்த்தோடு பயணம் செய்ய வேண்டும்; மக்களோடு மக்களாக இணைந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

வெறும் பேச்சளவில் போலிவேடமி்ல்லாமல் தமது சொத்துக்களை தனது ' ம ர ண சா ச ன த் தி ல்' கூட ஆதிதிராவிட மக்களுக்காக தனது நிலத்தின் பெரும் பகுதியை எழுதிவைத்துவிட்டு இறந்தார்.

சமபந்தி உணவுமுறையைத் தானே முன்னின்று நடத்திக் காட்டினார்.

தனது கண்காணிப்பிலேயே பல ஆதி திராவிடச் சிறுவர்களை தனது இல்லத்திலேயே வளர்த்து அவர்களை படிக்க வைத்து வாழ்க்கையில் உயர்வடையச் செய்தார்.

நேரிடையாக தேவரிடம் மோதி வெற்றி பெற முடியாத காங்கிரஸ் கட்சித்தலைவர்கள்...மறைமுகமாக தேவரவர்களைப் பலிதீர்த்துக் கொண்டார்கள்.
1957 ல முதுகுளத்தூர் கலவரத்தை வெகு நேர்த்தியாக திட்டமி்ட்டு உயிர் சேதங்களை மட்டுமல்ல இன்றுவரைக்கும் தலித்துகளுக்கும் தேவரினத்துக்கும் குரோதத்தை மூட்டிவிட்டு மன ஊனங்களை ஏற்படுத்திய பெருமை காங்கிரஸாரையே சாரும்.


விரும்பத்தகாத அந்த சம்பவத்தால் மனம் நொந்த தேவரவர்கள் "பரம்பரை பரம்பரையாக அரிசனங்களும், தேவர்களும் தோளோடு தோள் இணைந்தவர்கள். அவர்களைத்தாக்குவதும் துன்புறுத்துவதும் என் ரத்தத்தைச் சிந்தவைப்பதுபோலாகும்" "அரிசன மக்கள் என் சகோதரர்கள் அவர்களைத்தாக்காதீர்கள். அவர்களைத்தாக்க வேண்டுமென்று நினைத்தால் முதலில் என்னைக் கொன்று விட்டு அப்புறம் அவர்களிடம் போங்கள்"என்று 10.09.1957 பொதுக்கூட்டத்தில் உரைத்தார்.

தேவரவர்கள் அனைத்து வகுப்பினருக்கும் பா.பிளாக் கட்சியில் முக்கியத்துவம் கொடுத்திருந்தார்; தலித் களுக்கும் பொறுப்புக்களையும்,எம்.எல்.ஏ., போன்ற பதவிகளையும் கொடுத்திருந்தார்

"எனக்கு வகுப்புவாதி என்று பெயரிட்டுப் பார்த்தார்கள். நான் எல்லோருக்கும் பொதுவான தேசிய வாதியாக இல்லாமல் வெறும் வகுப்புவாதியாக மட்டும் இருந்திருந்தால் நான் தேர்தலில் ஜெயித்திருக்கவே முடியாது. ஏனெனில் என் தொகுதியில் 18 ஆயிரம்பேர்தான் நான் சார்ந்துள்ள வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால் நான் இரண்டு லட்சம் ஓட்டுக்களுக்கும் மேல் ஒவ்வொருதடவையும் வாங்குகிறேன்" வாழ் நாளின் கடைசி பொதுக் கூட்டத்தில் பேசும்போது தேவரவர்கள் ஆற்றிய சோக உரை இது.


தேவரவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டதும் 1962 ல் நடந்த அருப்புக்கோட்டை பாராளுமன்றத்தேர்தலிலும், முதுகுளத்தூர் சட்டமன்ற தேர்தலிலும் அமோக வாக்குளைப் பெற்று வெற்றி பெற்றார். அமோக வாக்குகள் தலித் மக்களேல்லொரும் சேர்ந்தளித்த வாக்கு ....... அவர் மேலிருந்த கலங்கம் துடைக்கப் பட்டது. ஆனால் அவரது உயிரையுமல்லவா எடுத்துக்கொண்டுபோய் விட்டது 55 வயதிலேயே.

ஒரு எம்.பி -ஐ, ஒரு தேசியத்தலைவரை, விடுதலைப் போராட்ட வீரரை, ஆங்கிலத்திலும் தமி்ழிலும் சரளமாகச் சொற்பழிவு நிகழ்த்துகின்ற அபூர்வத் தலைவரை....... குற்றவாளி இல்லையெனச் சொல்ல எடுத்துக்கொண்ட காலங்களில் திட்டமி்ட்டே அவரது உடல் நலத்தைச் சீர்குலைத்து... துன்பத்தைக் கொடுத்து..இறுதியில் மரணத்தையும் கொடுத்தார்கள்


***
இம்மானுவேல் கொலைவழக்கில் அவரது மைத்துனரும், பரமக்குடி தேவேந்திர குல் வேளாளர் பண்பாட்டு மையத்தின் தலைவர் ஜி.பாலச் சந்திரன் கூறுகிறார் "தேவர் சட்ட மன்றத்திலும், தனது சொந்த வீட்டிலும் பள்ளர் இன மக்களை சமமாகப் பாவித்து நானே நேரில் பார்த்துள்ளேன். மறவர், பள்ளர் இடையே நல்லுறவை வளர்த்தவர் தேவர். அவர் இம்மானுவேல் கொலைக்கும் காரணமாக இருந்தார் என்பதில் நம்புவதிற்கில்லை"

***

தமிழச்சி என்று சொல்லிக் கொல்பவருக்கு,

தமிழச்சி என்று சொல்லிக் கொல்பவருக்கு,

FYI wrt --> http://tamizachi.com/index.php/sa/ar/142-2011-07-11-19-22-29.html

///தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, காமராசர் போன்ற தலைவர்களின் பிறந்த தினமும், நினைவு தினமும் தமிழ்சொற்களால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்க, தேவர் பிறந்த தினமும், நினைவு தினமும் ´ஜெயந்தி´ என்ற சமஸ்கிருத வார்த்தையால் சொல்லப்படுவதன் அரசியல் என்ன? ///

நீ சொல்கிறாயே பெண்ணை பேதையாகப் பார்க்கும் மனோபாவம், அது இல்லாமல் பெண்ணை பராசக்தியாக பார்த்து அவளை வணங்கியவர் தேவர்.
பர்மாவில் பெண் கூந்தலில் நடந்து செல்லும் மரியாதையை (உன் பார்வையில் சொல்ல வேண்டுமானால் மூடநம்பிக்கையை) மறுத்து எங்கள் மண்ணின் நடைமுறை வேறு என்றவர். மூவாசை துறந்தவர், ஆன்மீக மூலம் அனைவரையும் ஒன்றாய் பார்த்த விவேகானந்தரையும் வள்ளலாரையும் பின்பற்றுபவர்.

ஆதலால் இந்த கலி காலத்தில் தனக்கென வாழாது பிறர்க்காக தன் வாழ்வு, வளம், சுகம், துக்கம் அனைத்தையும் துறந்ததால் தேவர் தெய்வமானார்.



///பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்துவதாக வீராப்பு பேசும் கருணாநீதி ´தேவர் ஜெயந்தி´ அன்று குடும்பத்தோடு மாலை போட ஓடுகிறார். ஜெயலலிதா தேவர் சமுகத்தை சேர்ந்த சசிகலாவை இழுத்துக் கொண்டு ஒடுகிறார். வை.கோ தன் பங்குக்கு ஜால்ரா அடிக்கிறார். இவர்களுக்கு தெரியாதா தேவரின் யோக்கியதை? தேவரின் மறுபக்கம் இருண்ட பக்கமல்ல. தேவரின் ஒவ்வொரு வன்முறையும் அப்பட்டமான வெளிச்சத்தில் இருக்கின்றன. இருப்பினும் தேவர் குறித்து தமிழ்சமூகம் கருத்துச் சொல்ல அஞ்சுகிறது. தமிழ்நாட்டின் பெரும்பான்மையான ஓட்டுக்கள் தேவர் சமுகத்திடம் இருப்பதால் குழைந்து கூத்தாடி தேவர் சமுகத்தினரின் காலை நக்கும் அரசியல் செய்கிறார்கள்.///

உனக்கு அரைகுறை அறிவு தான் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். உண்மையில் ஐயாவின் தொகுதியில் கூட தாழ்த்தப்பட்டவர்கள் வாக்குகள் தான் அதிகம். பின்னால் கொடுத்திருக்கும் கட்டுரையை ஊன்றிப்படி, புரியும்!



///1995,1996-இல் தென்மாவட்டப் பகுதியில் பேருந்து நிலையத்திற்கு தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த ´தலித் தளபதி சுந்தரலிங்க´த்தின் பெயரை வைத்ததற்காக பேருந்துக்களில் ஏறமாட்டோம் என்றும், பள்ளரின் பெயரை நீக்கு என்றும் கலவரங்களில் ஈடுபட்ட போது முக்குலத்து சாதி வெறியர்களுக்கு பயந்து தமிழக அரசு தலித் தளபதி சுந்தரலிங்கத்தின் பெயரையே தூக்கிவிட்டு முக்குலத்தாருக்கு ஆதரவாக செயல்பட்டதும், ///

அடிப்படை ஞானம் கூட தெரியாத மூடமதி கொண்ட பெண்ணே, இந்த கருணாநிதியின் வஞ்சகம் உனக்கு புரியவில்லை. வரியை பின்பு கட்டிக்கொள்கிறேன் என்றும், தனது கணக்குப் பிள்ளை வீட்டு திருமணத்திற்க்காக வெள்ளையர் தானியக்கிடங்கு (காவலனைக் கொன்றுவிட்டு )
கொள்ளையடிக்கப்பட்டதற்கு மன்னிப்புக் கோருவதற்கும் பதினேழு நாட்கள் வெள்ளையனுக்கு பின்னால் அலையோ அலையோவென அலைந்து திரிந்தவனுக்கு சிலைகள், நினைவுச் சின்னங்கள், போக்குவரத்துக்கழகப் பெயர் என்று பலதும் செய்யப்பட்டது. கடைசியில் ஆங்கிலேயருக்கு எதிராக ஓடோடி, திருச்சி அதிகாரியிடம் சரணடைந்தால் உயிர் பிழைக்கலாம் என்று காட்டில் பதுங்கி ஒரு கொள்ளையனாக கைது செய்யப்பட்டு தூக்கிலடப்பட்டவன் கட்டபொம்மன் என்ற நாயக்கன். பெரியார் இனம். வந்தேறிக் கூட்டம்.

ஆனால் அவனது பகுதியில் இருந்த ஒரே காரணத்திற்க்காக அவனுக்காக சமரில் சண்டையிட்டு அழிந்தவர்கள் தளபதி வெள்ளையத் தேவனும், போர்வீரன் சுந்தரலிங்கமும்.


இந்த கொலைஞர் என்ன செய்தார் என்றால் கொள்ளையன் கட்டபொம்முவுக்கும், படைவீரனான சுந்தரலிங்கத்திற்கும் போக்குவரத்து பெயர்கள் வைத்து விட்டு, மண்ணின் மைந்தனான வெள்ளையத்தேவனை மறந்து போனார் கிழட்டு கயவர். எங்கேயிருந்து வந்தவன் வேண்டும், படைவீரன் வேண்டும், படைத்தளபதி மட்டும் வேண்டாமா? ஏன் இந்த ஓரவஞ்சனை? என கருணாநிதியின் கயமைக்கு வேட்டு வைக்கப்பட்ட நிகழ்வுகள் தான் நடந்தவைகள் எல்லாம். நீ மேற்சொன்னவைகள் எல்லாம். உன்னை போல் அரைகுறை அறிவு கொண்டு பிதற்றுபவர்களுக்கு இதெல்லாம் கண்டிப்பாக தெரியாது. புரியவும் புரியாது. உனக்கும் உண்மைக்கும் தான் நெடுந்தூரம் ஆச்சே.


///அதே தமிழக அரசு மதுரை விமானநிலையத்திற்கு பசும்பொன் முத்து இராமலிங்க தேவரின் பெயரை வைத்து விசுவாசத்தை காட்டிக் கொண்டதும், ///


இன்னும் அந்தப் பெயரை விமான நிலையத்திற்கு வைக்கவில்லை பெரியார் கண்ட உண்மை மட்டும் பேசும் தலிலசியே. அதுவாய் வந்த இந்தப் பெயர் கூட உன் பிரதிபலிப்பாய் உண்மையைக் கூறுகிறது. உனது நிகழ்கால ஞானம் பெரியாரைப் போலவே உள்ளது. தெரிந்தால் சொல். இல்லை என்றால் அமைதியாக இரு. மேதாவியை போல புலம்பினால் கெட்டபெயர் தான் ஏற்படும். ஏற்கனவே கெடுத்துக் கொண்ட பெயர் தானே! அதனால் உனக்குப் பிரச்னை இல்லை போலும்.


///தேவர் நூற்றாண்டு விழாவின் போது பசும்பொன் தேவரின் தபால்தலையை வெளியிட்டு தமிழக அரசு தன் ஒருபக்க சாதி ஆதரவை காட்டிக் கொண்டதும், ///

நாட்டுக்காக, மக்களுக்காக சட்டமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், ஆன்மிகம் வளர்த்த பெரியவருக்கு வைக்காமல் உனக்கா வெளியிடுவார்கள் தபால் தலை!!! போ போய் புள்ள குட்டிகள் நல்லதா நாலு படிக்க வை. அடுத்த தலைமுறையாவது திருந்தட்டும்.


///அவர் வாழ்ந்த காலங்களில் அவர் மீது எத்தனையெத்தனை கொலை வழக்கு இருந்தன என்பதை கவனிக்க வேண்டும்.///

மறுபடியும் அதே வெட்டிப் பேச்சு. அதை பட்டியலிட்டு சொல்லேன் கேட்போம், படிப்போம்.
ஆங்கிலேயனுக்கு கூஜா தூக்கியவனுக்கா கொலை குற்றம் சுமத்துவார்கள்?
கோழைக்கு எதிரி இருக்கமாட்டான். வீரனுக்கும் சமுதாயத்தின் உண்மை போராளிக்கும் தான் எதிரியாய் இருப்பான்கள் சில கேனைப்பயல்கள்.


///பார்வர்டு பிளாக்´ மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இடதுசாரி கட்சிக்களாக இருக்க தேவர் தமிழகத்தில் ஜாதி கட்சியாக நடத்திக் கொண்டிருந்தார்.///
ஆறுமுகம் என்ற தாழ்த்தப்பட்டவர் பார்வர்ட் பிளாக் சட்டமன்ற உறுப்பினராக தமிழகத்தில் இருந்தது உனக்கு தெரியுமா?
பெருமாள் என்ற தாழ்த்தப்பட்டவர் தான் தமிழக சட்டமன்றத்தில் பசும்பொன் ஐயாவின் திரு உருவப்படத்தை திறந்து வைக்க காரணமானவர் என்பது உனக்கு தெரியுமா?
ஆண்டியப்பக் கவுண்டர் எட்டு ஆண்டுகள் பார்வர்ட் பிளாக் தமிழகத் தலைவராக இருந்தது உனக்கு தெரியுமா?
தன்னை சாயல்குடியில் விவேகானந்தர் பற்றி பேச வாய்த்த செட்டியாரை கமுதியில் நிற்கவைத்து வெற்றிபெற வைத்தவர் என்பது தெரியுமா?
ஐயாவின் வாழ்க்கை வரலாற்றினை எழுதி, கடைசி வரை ஐயாவின் கட்சியில் இருந்தவர் எ.ஆர். பெருமாள் என்ற நாயக்கர் என்பது தெரியுமா?
குமாரசாமி ராசாவுக்கு எதிரான தனது நியமனத்தை, தலைமைக்கு கட்டுப்பட்டு விட்டுக்கொடுத்து அவரை பதிவியில் உட்கார வைத்தது தெரியுமா?
காமராசரை தமிழக காங்கிரஸ் தலைமைக்கு உட்கார வைத்து அழகு பார்த்தவர் பசும்பொன் ஐயா தெரியுமா?
சானார் (நாடார்) இனத்தை சேர்ந்த பலரும் பார்வர்ட் பிளாக் கட்சியில் இருந்து பணி செய்தது உனக்கு தெரியுமா?
பார்வர்ட் பிளாக் கட்சியில் இருந்த பலரும் தன்னுயிரை மயிரெனக் கருதி உன்னை போன்ற சாதாரண மக்களுக்காவும், உம் விடுதலைக்காகவும் போராட நேதாஜி படை சென்றது உனக்கு புரியுமா?
நாடர்களின் கொள்ளை வியாபாரத்தை எதிர்த்து பாரதமாதா கூட்டுறவு அங்காடியை திறந்து எல்லோருக்கும் நியாயமான விலை கிடைக்க செய்த கூட்டுறவுத் தலைவர் அவர் என்பது தெரியுமா?(அதை தான் இன்றைய அரசு கூட்டுறவு அங்காடி (ரேஷன் கடை) என்ற திறந்து வைத்திருக்கிறது. அதை அன்றே செய்தவர் பசும்பொன் ஐயா).
தனது சொத்தை இரண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதிந்து கொடுத்த, அவர்கள் தம் உழைப்பை மதிக்கத் தெரிந்த, ஒரு பண்பாளர் பற்றி உனக்கு எப்படி புரியும்?

என்ன தெரியும் உனக்கு? புண்ணாக்கு தான் தெரியும் உனக்கு!


///இச்சம்பவம் தமிழக்ததில் பெரிய கலவரத்தை உருவாக்கிய போதும் பெரியாரின் உதவியோடு துணிந்து நின்று போராடினார் கமாராசர்.///
கிழிச்சார்!! இதைப் படி முதல்ல, அப்புறம் தெரியும் யார் அமைதிக்காக போராடினார்கள் என்று!
http://uravukkalam.blogspot.com/2010/02/3.html


///சொல்லுங்கள் துரோகிகளே!

சொல்லுங்கள் புரட்டு கதை பேசும் புரட்டர்களே!!! ///
இப்பவும் சொல்றேன் உனக்கு உண்மை தெளிதல்கள் மிகக்குறைவு. அமைதியாக இருந்து பலவற்றை நல்லவற்றை தெரிந்து கொண்டு எழுது. உன் உணர்வு எல்லோருக்கும் நன்மை பயக்கும்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்க்கு
உள்ளத் தனைய துயர்வு - தமிழ் மறை.

வாழ்க வளமுடன்!!!

பசும்பொன் பெருமகனார் மீது காமராஜ் நாடாருக்கு வெறுப்பு தோன்றக் காரணம்

பாலபாடத்தை மனப்பாடம் செய்து படிக்கும் பல பச்சை பிள்ளைகளுக்கு உண்மையாக நடந்த வரலாறு தெரிய வாய்ப்பில்லை. ஆதலால் இங்கே அது…

பசும்பொன் பெருமகனார் மீது காமராஜ் நாடாருக்கு வெறுப்பு தோன்றக் காரணம்:

1. மாநில எல்லை சீரமைப்பில் காமராஜ் நாடார் அவர்களின் இனப்பற்று வெளிப்படையாகவே தெரிந்து போனது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து நாகர்கோயில், கன்னியாகுமரி, பத்மநாபபுரம் ஆகிய வியாபாரி நாடர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளை சென்னை மாகாணத்தோடு இணைப்பதில் காட்டிய அக்கறையினை கேரள இடுக்கி மாவட்டத்திலுள்ள பீர்மேடு, தேவிகுளம், முல்லைப் பெரியாறு, தேக்கடி, குமுளி, மூன்று போன்ற நாடார் இன மக்கள் வசிக்காத மூப்பனார், நாயக்கர், தேவமார், அரிசன், இஸ்லாமியர் வாழும் பகுதிகளை இணைப்பதில் அக்கறை கட்டவில்லை. இன்று வரை இப்பகுதி வாழ் தமிழ் மக்கள் காமராஜ் நாடார் மீது பெரும் மனக்குறையுடன் தான் கேரளா மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அன்றே… இப்பகுதி இணைப்பு குறித்து எதிர்க்கட்சிகளும், எல்லாப் பத்திரிக்கைகளும், எவ்வளவோ எழுதியும் காமராஜ் நாடார் கண்டு கொள்ளதவராகவே இருந்து விட்டார்.

2. 1954-ல் மொழிவாரி மாநிலம் பிரிந்த பிறகு தமிழ்நாடு முதன் மந்திரி பதவி மீது காமராஜ் நாடாருக்கு ஆசை ஏற்பட்டது. அதற்கு மற்றக் கட்சி தலைவர்களிடமும், சுய மரியாதை இயக்கத் தலைவர்களிடமும், ஆதரவு கேட்டுப் பெற்ற காமராஜ் நாடார் பசும்பொன் பெருமகனாரிடம் ஆதரவு கேட்க, ஸ்ரீ வரதராஜுலு நாய்டு வீட்டில் சந்திப்பு நடக்கிறது. அவரிடம் காமராஜ் மாகாண காங்கிரஸ் தலைவர் பதவியோடு இருப்பது நல்லது என்றும் “உங்களைப்பற்றித் தெரியும் (காமராஜ் நாடார் இனப்பற்று மிக்கவர்) இந்தப் பதவிக்கு ஆசைப்படக் கூடாது என்றும் பசும்பொன் பெருமகனார் மறுத்துவிட காமராஜ் நாடாருக்கு தேவர் மீது வெறுப்பு தோன்றுகிறது.

3. இதற்கு முன்னரே பசும்பொன் பெருமகனார் பற்பல கூட்டங்களில் விருதுநகர் வியாபாரிகள் பற்றிப் பேசி வந்தார்.

“நிலத்தில் எடுக்கப்படும் இரும்பு, தங்கம், வெள்ளி, நிலக்கரி, பெட்ரோல் பெருட்கள், புகையிலை, கரும்பு, உலோகம் மற்றும் தாதுப் பொருட்கள் முதலான விலைப் பொருட்களை அரசே எடுத்துக் கொண்டு, அதற்குரிய விலையை நிர்ணயம் செய்கிறது.

ஆனால் தரமாக விளையக்கூடிய பொருட்களை விவசாயிடமிருந்து வாங்கி, அதைத் தரம் பிரித்து வணிகம் செய்து, தரமில்லாத பொருட்களை கலப்படம் செய்து விற்று, அதை உண்ண வைக்கிறார்கள்”.

“வயலில் இடுப்பொடிய விவசாயம் செய்கிறான் நம் விவசாயி. உடப்பில் உப்புப்பரிய பருத்தி எடுக்கிறாள் எம் பெண் மக்கள். ஆனால் அதற்கு விலை வைப்பதோ விருதுநகர் வியாபாரி. இது எந்த வகை நியாயம்! இதையெல்லாம் அரசாங்கம் நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு உரிய தொகை கிடைக்க செய்ய வேண்டாமா? என்று மேடையில் பேசினார்.

விருதுநகர் வியாபாரிகள் கலப்படம் செய்து, தரமில்லாத பொருட்களை விற்கிறார்கள். வியாபாரம் தர்மத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்கிறார்கள் என்று பல கூடங்களில் பேசி வந்தார்கள்.

அன்றைய சினிமாவிலும், நாடக மேடைகளிலும் கலப்படம் பற்றிய பாட்டுக்கள் பல வந்துள்ளன. உதாரணமாக ஒரு பாட்டு….

“இருந்தா முக்காலணா
இல்லேன்னா காலணா! லேபிள்
இருந்தா முக்காலணா
இல்லேன்னா காலணா!
பழைய புட்டி, பழைய டப்பா….
டப்பா….டப்பா….என்ன டப்பா!

என்ற பாட்டு அப்போது மிகவும் பிரபலம். இது விருதுநகர் நாடார் வியாபாரிகளுக்கேன்றே எழுதப்பட்டது போலிருக்கும்.

அப்போது கார்லிக்ஸ் டப்பா டின், பால்பவுடர் டப்பா, முகப்பவுடர் டப்பா, காப்பித்தூள் டாப்பா, டின்கள் இவைகளின் லேபிள் கிழியாமல் இருந்து கொடுக்கப்படும் டப்பா, மற்றும் டின்களுக்கு கூடிதல் காசும், லேபிள் இல்லாமலும், கிழிந்தும் இருக்கும் டப்பா மற்றும் டின்களுக்கு குறைந்த காசும் கொடுத்து விலைக்கு வாங்கினார்கள், கூடை வியாபாரிகளான நாடார் வியாபாரிகள். இவைகள் அன்று கலப்படம் செய்து விர்ப்பதர்க்கு பயன்பட்டன.

இப்படியெல்லாம் பசும்பொன் பெருமகனார் பேசியதனால் தூத்துக்குடி நாடார் வியாபாரி ஒருவர் கோபம் கொண்டு “இவரை வெட்டிப் போட்டுவிட்டு ஜெயிலுக்கு போனால் தப்பில்லை” என்று பேசியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட பெருமகனாரும்….

“என் ஒருவனைக் கொள்வதனால்; அவர்களுக்கு திருப்தி எனில், என்னை கொன்று விட்டுப் போகட்டும். நான் இறந்தாலும்; என் போன்ற ஆயிரமாயிரம் முத்துராமலிங்கத்தைப் பெற்றெடுக்கும் சக்தியுள்ளவள் என் பாரத மாதா!” என்று பேசினார்.

4. பசும்பொன் பெருமகனார், காமராஜ் நாடார் கள்ள நோட்டு அடிப்பவர்களுக்கு உடந்தையாக இருக்கிறார் என்று பல மேடைகளில் பேசினார். இது பற்றி திரு.கே.ஆர்.நல்லசிவம், எம்.எல்.ஏ. அவர்கள் 1957 அக்டோபர் மாதம் 29ந் தேதி சென்னை மாகாண சட்டசபை கூட்டத் தொடரில் ஒரு கேள்வி எழுப்பிகிறார்.

“ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் திரு. காமாராஜ் நாடார் அவர்கள் கள்ள நோட்டுகளை அச்சிட்டு விநியோகிப்பதற்கு உடந்தையாக உள்ளார்கள் எனக் குறிப்பிட்டதாகச் செய்தி வந்தது. நாட்டிலும் இது பற்றி அநேகப் பேச்சுக்கள்!

குறிப்பாக….
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் வந்திருக்கிறது. விலைவாசிகள் உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது. சர்க்கார் ஒரு பங்கு அதாவது 500 கோடி ரூபாய்க்கு நூறுகள் வெளியிட்டார்கள் என்றால்…. அதைபோல் வெளியில் இருப்பவர்கள் இன்னொரு மடங்கு 500 கோடி ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சிட்டார்கள் என்று நான் சந்தேகப்படுகிறேன்” என்று பேசுகிறார்.

அதற்கு காமராஜ் நாடரின் பதில்…

திரு. காமராஜ் (தமிழக முதல்வர்): நான் கள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகிக்கிறேன் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா! அச்சிட்டு விநியோகிக்க நான் உடந்தையாக இருக்கிறேன் என்பது போலவே பேச்சு இருக்கிறது. அதை நீங்கள் நம்புகிறீர்களா?

திரு.கே.ஆர்.நல்லசிவம், (எம்.எல்.ஏ): உண்மையிலேயே அவர் அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தினார் என்று தான் கேள்விப்பட்டேன். செல்வாக்குள்ள பத்திரிக்கைகளில், பத்தாயிரம், இருபதாயிரம் பிரசுரமாகிற பத்திரிக்கைகளில் இதைப் பற்றி எழுதியிருந்தார்கள். ஆகவே இது பொய் என்பதை நிரூபிப்பதற்காகவாவது ஏன் அப்போதே முதல் மந்திரி அவர்கள் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் பேரில் வழக்கு தொடரவில்லை என்று தான் கேட்கிறேன்.

உண்மையில் அந்தக் குற்றச்சாட்டிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றால் நாட்டுமக்கள் உண்மையை அறிந்து கொள்ள, அந்தக் குற்றச்சாட்டைச் சுமத்திய ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவர் பேரில் வழக்கு நடத்தியிருக்கவேண்டும். அவர் என்ன சாதாரணமானவரா? ஒரு பொறுப்புள்ள அங்கத்தினர். பாராளுமன்ற உறுப்பினர்.

இந்தக் கேள்விகளுக்கு காமராஜ் நாடார் பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தார்.
(“சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு” பக்கம் 85-86 )

5. பசும்பொன் பெருமகனார், சென்னை திருவல்லிக்கேணி கூட்டத்தில் காமராஜ் நாடார் கள்ள நோட்டு அடிக்கத் துணை போகிறார் என்று பேசியதைக் கேட்ட ஐ.ஜியின் நடவடிக்கையால் நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டுக்களுடன் விருதுநகர் நாடார் வியாபாரி நாராயணசாமி கைது செய்யப்படுகிறார். ஆனால் அவரை காமராஜ் நாடார் சிபார்சு செய்து, வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க இயலாதவாறு செய்து விடுவிக்கப்படுகிறார்.

அந்த விருதுநகர் வியாபாரி மீது நடவடிக்க எடுக்கப்பட்டதா என்று சட்டசபையில் கேள்வி கேட்டபோது திரு. காமராஜ் நாடாருக்குப் பதிலாக திரு.கே.சி.சுப்பிரமணியம் பதில் கூறுகிறார்.

“இந்த கேஸை மேற்கொண்டு நடத்த முடியவில்லை!” என்று கூறுகிறார். ஏனெனில் காமராஜ் நாடார் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கும். அதனால் மூடி மறைத்துவிட்டார்கள்.
(“தேவரின் மேடை பேச்சு” பக்கம் 64 )

6. அப்போது காமராஜ் நாடாரின் மந்திரி சபையில் மந்திர்கள் லஞ்சம் வாங்கியது சம்பந்தமாக பசும்பொன் பெருமகனார் குற்றம் சாட்டிப் பேசினார். காமராஜ் நாடாரின் சக மந்திரி ஒருவர் லஞ்சமாக பணம் பெற்றுக் கொள்ளாமல், ஒருவரிடம் “ப்ளாங்க் செக்’ வாங்கிய விவகாரம் அப்போது பிரபலமாகப் பேசப் பட்டது. அம்மாதிரி பெயர் பி.பரமேஸ்வரன். அவருக்கு அடுத்த தேர்தலில் சீட் கொடுக்கப் படவில்லை.

7. 1955-ல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வில் (Tண்Pஸ்C) சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு செய்ததில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாடார் இன மக்களாகவே காமராஜ் நாடரின் சிபாரிச்களால் தேர்வு செய்யப்பட்டார்கள். கள்ள நோட்டு அச்சிட்டதாக அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. வான தேனி தியாகராஜன் அவர்கள் மீது வதந்திகளும், கோயம்புத்தூர் கிருஷ்ணன் (மில் அதிபர்) மீது நூறு ரூபாய் கள்ள நோட்டு வழக்கும், நடந்த செய்தி தமிழகம் மற்றும் இந்தியாவையே உலுக்கியது.

8. உண்மையான காங்கிரஸ்காரர்களும், காமராஜ் நாடாரால் மனம் நொந்து போன தேசியவாதிகளும் சேர்ந்து, பசும்பொன் பெருமகனார் தலைமையில் சீர்திருத்தக் காங்கிரஸ் போன்ற கட்சியை தோற்றுவித்து, 1957 தேர்தலில் 80 இடங்களில் போட்டியிட்டு 26 இடங்களில் வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றிகளினால் அதிர்ச்சியடைந்த காமராஜ் நாடாருக்கு, அடுத்த தேர்தலில் சீர்திருத்த காங்கிரஸ் ஜெயித்து வந்து ஆட்சியைப் பிடித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் தோன்றத் தொடங்கியது. இதனால் காமராஜ் நாடார் பசும்பொன் பெருமகனாரின் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று துடிக்கிறார்.

9. 1955-ல் பார்வர்டு பிளாக் கட்சியின் அகில இந்தியச் செயலாளர் சீலபத்ரயாஜி மூலம் காங்கிரஸ் கட்சியில் பார்வர்டு பிளாக் கட்சியை இணைக்க நடந்த முயற்சியை பசும்பொன் பெருமகனார் தடுத்து விட்டதோடு, நேரு நடத்திய இணைப்பு நாடகத்தை போலி என்று மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கியது நேருவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

10. இரண்டாம் முறை பர்மா சென்று வந்த பசும்பொன் பெருமகனார் “நேதாஜி உயிருடன் இருக்கிறார். அவரை பார்த்து விட்டு தான் வருகிறேன். இப்போது அவர் யுத்த முனையில் இருக்கிறார்” என்று கல்கத்தாவில் பத்திரிக்கை நிருபர்கள் கூட்டத்தில் பேசியது; நேதாஜி இறந்து விட்டார் என்று நம்ப வைக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்த நேருவுக்கு மிகுந்த கோபத்தோடு தலைவலியைக் கொடுத்தது.

“உண்மையான சுதந்திரம் 1937லிலேயே வந்திருக்க வேண்டும். பத்து வருட கால தாமததிருக்கு காரணமே, அப்போதுள்ள காங்கிரஸ்காரர்கள் தான்” என்றும்

மேலும் “நாம் அடைந்துள்ள இந்த சுதந்திரமானது முழுச் சுதந்திரமல்ல. மூளிச் சுதந்திரம். மவுண்ட் பேட்டனின் பிரித்தாளும் தந்திர முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.

பாரதத் தாய் கைகளுக்கு இரட்டை விலங்கு போடப்பட்ட நாள் தான் ஆகஸ்ட் 15ம் நாள். மேலும் மூன்றாவது உலகப் போர் தொடங்கும் காலத்தில் நேதாஜி சுபாஸ் பாபு தக்க நேரத்தில் தனது சேனையோடு பாரதத்திற்குள் பிரவேசிப்பார். அக்காலத்தில் நமக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கச் செய்வார்” என்று பசும்பொன் பெருமகனாரது ஆணித்தரமான பேச்சும்,

“இந்தியாவின் வீரமகனான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் தலையை அடமானமாக வைத்துதான் பிரிட்டிசாரிடம் சுதந்திரம் பெற்றது காங்கிரஸ். இது கேவலமான சுதந்திரம்” என்றும் பேசியது நேருவுக்கு எரிச்சலை ஊட்டியது.

1937லிருந்து தொடர்ந்து எம்.பியாகவும், எம்.எல்.ஏவாகவும் இருப்பவரை எப்படியாவது பாராளுமன்றத்திற்கு வரவிடாமல் செய்து விடுங்கள் என்று காமராஜ் நாடாருக்கு நேரு கட்டளை இடுகிறார்.

மேலே நேருவுக்கு நேதாஜி சம்பந்தமாக பசும்பொன் பெருமகனரால் பெரும் தலைவலி, நெருக்கடி, கீழே தமிழ்நாட்டில் காமாராஜ் நாடாருக்கு தன் இனமக்கள் பிரச்சனைகளைப் பேசியதால் இடைஞ்சல் ஆகியவை தனி மனிதரான பசும்பொன் பெருமகனாரை நேரிடையாக சந்திக்க முடியாமல்…

இரண்டு அரசுகளின் மூலம் ஒரு சதித் திட்டம் தீட்டப்படுகிறது. அதுதான் இராமநாதபுரம் ஜாதிக் கலவரம். அதற்கு பகடைக் காயாகப் பயன்படுத்தப் பட்டு பலிகடாவாக ஆக்கப்பட்டவர்தான் காங்கிரசின் பிரதிநிதியான திரு. இம்மானுவேல் அவர்கள்.

அப்போதைய முதல் மந்திரியான காமராஜ் நாடாரின் ஆலோசனையின் பேரில், அரிசன நலத்துறை மந்திரியான கக்கன் அவர்களும் இம்மானுவேலுக்கு கட்சியில் பல பதவி தருவதாகக் கூறினார். அரிசனங்களின் ரிசர்வ் தொகுதிகளில் தேர்தலுக்கு நிற்பதர்க்கான தகுதி இந்து-அரிசனுக்குத் தான் உண்டு. ஆகவே கிறிஸ்தவரான இம்மனுவேலுவை இந்து மதத்திற்கு மாற்றி இம்மானுவேல் சேகரன் என்று பெயர் மாற்றம் செய்தார்கள். ஆனால் கக்கன் அவர்கள் எவ்வளவோ முயற்சித்தும், காமராஜ் நாடார் எந்த பதவியும் அவருக்குத் தராமல் காலதாமதம் செய்தார். இதை அப்போதைய அரிசன மக்கள் நன்கு உணர்ந்து கொண்டிருந்தனர்.

மேற்கூறியவைகள் எல்லாம் காமராஜ் நாடார் படிக்காதவராக இருந்தாலும், தனது இன மக்களுக்கு அனுசரணையாகவும், கூடுதல் பற்றுதலுடனும் இருந்தார் என்பதற்கு சான்றாகவும், பசும்பொன் பெருமகனாருக்கு எதிராக செயல்பட தூண்டிய காரணிகள் என்பதுவும் வெள்ளிடைமலை.

Thursday, 14 July 2011

பலருக்கும் தெரியாத பசும்பொன் தேவர் ஐயாவின் நீதிமன்ற விளக்க உரை

முக்குலத்தோர் தொடர்பான எந்தவொரு நிகழ்விலும் ஐயா பசும்பொன் திரு. உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களை பற்றி தவறாக அரைகுறையாக எழுதாமல் பேசாமல் சிலரால் இருக்க முடிவதில்லை.

இங்கே வில்லூர் பிரச்னை பற்றி பல்வேறு கருத்து பரிமாற்றங்களைத் தாண்டி எப்பொழுதும் போல் பசும்பொன் ஐயா பற்றி அவதூறு தொடங்குகிறது. அனைத்து நிலைகளிலும் சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்து, நாம் போற்றும் பசும்பொன் ஐயாவை தூற்றுவதை முதன்முதற் கடமையாக கொண்டு நம் சக சமூக மக்கள் அதை அடிப்படைப் பணியாக தொடர்வதை கண்டிப்பதோடும், அதை சரியான விதத்தில் அணுகும் ஒரு சமூக கடமையாகவும் நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கறது.

அடிப்படை உண்மைகளை முக்குலத்தோர் பற்றி, அவர்தம் போற்றுதலுக்குரிய செய்திகள் பற்றி, பசும்பொன் ஐயா பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றி பக்குவமாக நாம் எடுத்துக் கூறுவதன் மூலம், நமக்கு சிலர் ஏற்படுத்தும் அவப்பெயர்களை உடனடியாக தவிர்க்க முடியும்.

இவர்களை திருத்தமுடியாது, எவனாவது ஒருவன் எழுதிக் கொண்டே இருப்பான் என்று சாதாரணமாக அப்பதிவுகளை விட்டுவிட முடியாது. அப்படி விட்டுவிடுவது, இன்றைய படித்த கூட்டம் நம்மை பற்றி, நம் சமூக அமைப்பை பற்றி ஒரு தவாறான சிந்தனைக்கு உள்ளாவதற்கு எளிதில் வழி வகுத்து விடும் என்று எண்ண
ஓட்டத்தின் அடிப்படையில் நாமும் நம் உணர்வுப் பதிவுகளை பதிந்தோம். அவற்றை நம் உறவினர்களுக்கு தெரிவிப்பதற்காக இங்கே பதிகிறோம்

பலருக்கும் தெரியாத பசும்பொன் தேவர் ஐயாவின் நீதிமன்ற விளக்க உரை:

சி.எம்.பணிக்கர், அடிசனல் ஜில்லா மாஜிஸ்திரேட், இராமநாதபுரம் ஜில்லா; தேவர் மீது சர்க்கார் சாட்டிய மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு தேவர், சென்னை சர்க்கார் நியமித்த அட்வைசரி போர்டு முன் அளித்த பதிலைப் பின்வரும் பக்கங்களில் விரிவாகக் காண்போம்.

நான் எனது பகிரங்க சொற்பொழிவுகளாலும், என்னைப் பின்பற்றுவோர் மூலம் இரகசிய ஏற்பாடுகளாலும் வகுப்புணர்ச்சியைத் தூண்டி விட்டு, பலாத்காரச் செயல்களுக்கு வழி செய்ததாக அரசாங்கம் குற்றம் சாட்டி இருக்கிறது. துரதிருஷ்டவசமாக முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஏற்பட்ட சம்பவங்களுக்கும், அதன் அடிப்படையில் எனது சொற்பொழிவுகளையும், நடவடிக்கைகளையும் இணைத்துக் கொண்டதற்கும் உள்ள பின்னணியை விளக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பின்னணியை விளக்குமுன், என் மீது சாட்டியுள்ள குற்றங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவைகளைப் பற்றிய வரையில் என் சம்பந்தம் எதுவுமே இல்லை என்பதையும் போர்டுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வருடம் மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் பார்லிமெண்ட் ஸ்தானத்திற்கும் நான் போட்டியிட்டேன். அவ்விரு ஸ்தானங்களுக்கும் மக்கள் பெருவாரியான ஓட்டுக்களால் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். பார்லிமெண்ட் ஸ்தானத்திற்கு 39 ஆயிரமும் வாக்குகளும், சட்டசபை ஸ்தானத்திற்கு 23 ஆயிரம் வாக்குகளும் அதிகமாகப் பெற்று நான் ஜெயித்தேன். இந்த இரட்டை வெற்றியின் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் பார்லிமெண்ட் ஸ்தானத்தை நான் வைத்துக்கொண்டு, முதுகுளத்தூர் சட்டமன்ற ஸ்தானத்தை நான் ராஜினாமா செய்தேன். நான் காங்கிரஸ் கட்சிக்கு உறுதிமிக்கதொரு எதிர்ப்பாளன். அதிகாரம் வகிக்கின்ற காங்கிரஸ் கட்சியிலிருந்து நான் 1946ல் விலகினேன். சமுதாய விடுதலைக்காகவும் சுதந்திர லட்சியத்திற்காகவும் போரிட்டு, பல துன்பங்களுக்கு ஆட்பட்டு தவித்த பலநூறாயிரம் மக்களின் உயிர்க் கொள்கையை, அதிகாரம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி கையாளவில்லை. காட்டிக் கொடுக்கவே துணிந்து விட்டது என்பதை உணர்ந்தேன். அதனால், அக்கட்சியிலிருந்து விலகினேன்.

அதன் பிறகு நடந்த தேர்தலில்களில் காங்கிரஸ் கட்சிக்குப் படுதோல்வியும் எனக்கு மாபெரும் வெற்றியும் கண்டு வருகிறது. எவ்வித ஆதரவையும் பெற முடியாத காங்கிரஸ்காரர்கள் தலைமையில் உள்ளவர்கள் உட்பட, சமீபத்தில் இடைத்தேர்தலில் என் ஆதரவு பெற்ற சசிவர்ணத்தேவரை முறியடிக்க சகல முயற்சிகளையும் செய்து பார்த்தார்கள். இம்மாதிரி, நான் நிறுத்திய அபேட்சகரைத தோற்கடிக்க காங்கிரஸ்காரர்கள் தீவிர ஏற்பாடுகள் செய்வதையோ, தமக்குச் சாதகமாகப் பேசுவதையோ எவரும் மறுக்க முடியாது; மறுக்கக் கூடாது. அது அவரவர் உரிமை, ஜனநாயகத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தத்தம் கட்சி ஜெயிக்கப் பாடுபடத்தான் செய்வார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இகாங்கிரஸின் பொறுப்பு வாய்ந்த தலைவர்களும், அரசாங்கத் தரப்பினரும் வாக்காளர்கள பயமுறுத்திப் பேசுவதிலும், மறவர்களுக்கு எதிராக அரிஜனங்களைத் துhண்டி விட்டு, வகுப்பு உணர்ச்சியை வளர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு விட்டார்கள். சசிவர்ணத்தேவர் வெற்றி பெற்றால், பெரும் துன்பத்துக்கு ஆளாக நேரும்”. என்று எனது ஆதரவாளர்களிடம் பயமுறுத்தி பேசி வந்திருக்கிறார்கள். அந்த பயமுறத்தலில் உள்நாட்டு மந்திரி பக்தவச்சலத்தின் பேச்சின் மூலம் உச்சிக்கே போய்விட்டது.

முதுகுளத்தூர் தொகுதியில் பல இடங்களில் ஜூன் 25-ஆம் தேதி பக்தவச்சலம் பொதுக் கூட்டங்களில் வாக்காளர்கள் பயந்து, குலை நடுங்கும்படியான முறையில் பேசியுள்ளார். மறவர் அல்லாத மைனாரிட்டி மக்கள் பெரும் துன்பப்படுவதாகவும், இதை எல்லாம் அடக்கி ஒடுக்கும் காலம் நெருங்கி விட்டதென்றும் பேசிய திரு. பக்தவச்சலம், சர்க்காரை கிருஷ்ண பரமாத்வாகவும், என்னைச் சிசுபாலனாகவும் வர்ணித்து காலத்துக்காக அமைதியாக இருந்த கிருஷ்ண பரமாத்மா, காலம் வந்தவுடன், தனது சக்ராயுதத்தால் சிசுபாலனை வதைத்தது மாதிரி, சர்க்காரும் என்னை வதைக்கும் என்று பேசியிருக்கிறார். அவர் பேசிய விபரம் பத்திரிக்கைகளிலும் வெளியாகி இருக்கிறது. இதனைப் பலரும் நன்கு தெரிந்து இருப்பார்கள். மேலும் அவர் என்னைத் தோற்கடித்து, எனது செல்வாக்கைக் குறைத்துவிடக் காலம் வந்து விட்டதென்றும், என்னைத் தோற்கடிப்பதற்காகப் பெரிய போலீஸ் படையை முழு அளவுக்கும் உபயோகிக்க முடிவு செய்து விட்டதாகவும் சவால் விடுத்துப் பேசியிருக்கிறார். அவரது பேச்சிலிருந்து அவர் தரப்பினால் விளைந்த நிகழ்ச்சிகளுக்கு என்னைப் பொறுப்பாக்கி இருக்கிறார்கள். மந்திரி பக்தவத்சலம் பேசிய பேச்சுக்களைப் பற்றி நான் கேள்விப்பட்டு, அவர் பேசியது உண்மைதானா? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ‘இந்து’ பத்திரிகை நிருபரிடம் மந்திரியின் பேச்சுக்குறிப்பு ஒன்று கேட்டேன். ‘இந்து’ நிருபரின் செய்தி இந்து பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது. அதன் நகல் ஒன்றை இத்துடன் போர்டின் பார்வைக்காக இணைத்து இருக்கிறேன்.

மந்திரியின் பேச்சிலிருந்து என் மீதும், நான் பிறந்த ஜாதியின் மீதும் வேண்டுமென்றே எவ்வளவு மோசமான முறையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்பதையும் ஜாதிவெறி எவ்வளவு பயங்கரமாகத் தூண்டிவிடப் பட்டிருக்கிறது? என்பதையும் குறிப்பாக, போலீஸ் பொறுப்பில் உள்ள உள்நாட்டு மந்திரியிடமிருந்த அந்த ஜாதித்துவேஷம் எவ்வளவு பக்குவமாய் அனல்கட்டி இருக்கிறது? என்பதையும் யூகித்துக் கொள்ளலாம்.மந்திரியின் பேச்சுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு வந்திருப்பதாய் உணர்ந்து, ஜுன் 27ல் திருச்சுழியில் நடந்த கூட்டத்தில் அதற்கு நான் பதிலளித்தேன். எனது திருச்சுழிப் பேச்சின் சுருக்கம் ஜுன் 28ம் தேதி தினமணி பேப்பரில் வெளியாகி இருக்கிறது. அந்த நகலையும் இணைத்திருக்கிறேன். “எதிர்தரப்பினரின் கோபமூட்டும் பேச்சுக்களில் ஆத்திரப்பட்டு, எவரும் எந்தச் செயல்களிலும், இறங்கிவிடவேண்டாம்” எவர் எதை எந்த முறையில் எந்த அளவுக்குப் பேசினாலும், மக்கள் அனைவரும் அமைதியாகவும், ஐக்கியமாகவும் இருக்க வேண்டுகிறேன். ஆத்திரம் வேண்டாம்” என்று எல்லா மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துத் திருச்சுழியில் பேசினேன். ஜுலை 1ல் வாக்கெடுப்பு நடந்தது. மக்கள் மறுபடியும் வாக்களிக்க வந்தனர். முந்திய மாதிரியே எனது அரசியல் கட்சிக்கு அமோகமான ஆதரவைத் தந்தார்கள். 24 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் சசிவர்ணத் தேவருக்கு வெற்றியைக் கொடுத்தார்கள். முந்திய பொதுத் தேர்தலில் நான் பெற்ற வாக்குகளைவிட, இந்த இடைத்தேர்தலில் சசிவர்ணத்தேவர் பெற்ற வாக்குகள் அதிகம், மூன்று தேர்தலிலும் கிடைத்த ஓட்டு விபரப் பட்டியலையும் இதோடு இணைத்துள்ளேன். தேர்தல் முடிந்து வெற்றி தோல்வி வெளிவந்தது. இதன்பிறகு, தேர்தலுக்கு முன் திரு.பக்தவத்சலம் விதைத்த பயமுறுத்தல்கள் தளிர்த்து காய்த்துப் பழமாக ஆரம்பித்து விட்டது. அதன் மூலம் உருவாகிக் கொண்டிருந்த பயங்கரத்தை உணர்ந்தார்.

12-7-1957ல் கமுதியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் மீண்டுமொரு முறை அமைதியாக இருக்கும்படி மக்களுக்கு, “எந்த வகையிலும் அமைதி இழந்து விடாதீர்கள், அமைதியோடு இருங்கள். வகுப்பு நெறி எந்த ரூபத்தில் வந்து மோதினாலும், அதில் சிக்கி விடாதீர்கள். எது வந்தாலும் அமைதியை இழந்து விடக்கூடாது” என்று கரங்குவித்து வேண்டிக்கொண்டேன். ஜூலை மாதத்தில் வெளிப்பகுதியினரின் தூண்டுதல் மீதும், போலிஸ் பாதுகாப்போடும் அரிஜனங்களால் முதுகுளத்தூர் தொகுதியில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அச்சம்பவகள் அத்தனையும் எனது ஆதராவாளர்களை அலைகழித்து, தொல்லை கொடுத்தவைகள் ஆகும். அந்த நிலைமை முற்றிக் கொண்டு போவதைக் கண்ட எனது சகா சகிவர்ணத்தேவர், இராமநாதபுரம் ரெவின்யூ டிவிஷனல் ஆபிசரைச் சந்தித்து, அப்பகுதியில் உள்ள எல்லாக் கட்சி தலைவர்களையும் கூட்டி நிலைமை மேலும் மோசமாவதைத் தடுத்து, சாதி பிளவு உணர்ச்சிளை அகற்றி, ஐக்கியப்படுத்தி, சமாதானத்தை நிலை நாட்டுவதற்கான வகையில் ஒரு திட்டம் தயாரிக்கும்படி கோரி இருந்தார். நிலைமை கட்டுங்ககடங்காமல் வளருவதை அதிகாரிகளிடம் அறிவித்த பிறகும், நெருக்கடி நிலைமை கொஞ்சமும் தளராமல், அதன் போக்கில் ஓங்கி, மோசமான முடிவை எட்டிக் கொண்டிருந்திருக்கிறது, நிலைமையின் மோசத்தை விவரித்து எனது ஆதரவாளர்கள் அனுப்பிய மனுக்கள் ஏராளம். அமைதிக்கு, அதிகாரத் தலைப்பில் இருந்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனது ஆதரவாளர்கள் தம்மை நோக்கிச் சூழ்ந்து வரும் நெருக்கடிகள், நிலைமைகளை விவரித்து, அதிகாரிகளுக்கு அவ்வப்போது அனுப்பிய மனுக்கள் தேதி வாரியாக இதோடு சேர்ந்து வைக்கப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 2-ல் சசிவர்ணத் தேவரும் மேலும் எனது தரப்பைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் ஐவரும், ஜில்லா கலெக்டரைச் சந்தித்து “நெருக்கடி நிலைமை முற்றுகிறது. நாடார் வகுப்பைச் சேர்ந்த வியாபாரிகள், போலிஸ் அதிகாரிகள் சிலரின் ஜாடையான ஆதரவோடு, ஏழை அரிஜனங்களுக்குப் பணம் கொடுத்து, எனது ஆதரவாளர்களைத் தாக்கும்படி துhண்டிவிட்டு வருகிறார்கள்” என்று அறிவித்திருக்கிறார்கள்.

அதோடு அந்த ஆறு எம்.ஏ. க்களும் கமுதி இன்ஸ்பெக்டர், முதுளத்தூர், கடலாடி, நரிக்குடி, கமுதி இன்ஸ்பெக்டர் குறிப்பிட்டு குற்றம் சாட்டி, அவர்களை அப்பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்கு விரைவில் மாற்றும்படி கலெக்டரை வேண்டியிருக்கிறnர்கள். இதே விவரங்கள் டி.எஸ்.பி. முன்னிலையிலும் வைக்கப்பட்டுள்ளன. தூண்டி விட்டுக் கலகத்தை மூட்டும் நிலைமை நிமிடத்துக்கு நிமிடம் வளருகிறது என்று, இவ்வளவு தூரம் எடுத்து விளக்கியும் கூட, செப்டம்பர் 10-ஆம் தேதி வரை அதிகாரிகள் தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நேரடியாக, முறையிடப்படும் அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை. ஆனால், கலெக்டர் எல்லாத் தரப்புத் பிரதிநிதிகள் அடங்கிய சமாதான மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனாலும் நிலைமையை மேலும் வளர விடாமல் தடுப்பதற்கான அருமையான காலமெல்லாம் வீணாக்கப்பட்டு விட்டது. இதனால் நெருக்கடி நிலைமை நாளுக்கு நாள் முதிர்ந்து கொண்டே போய் விட்டது.

செப்டம்பர் 9 ல் நான் டெல்லியில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாளில் நடைபெற்ற சமாதான மாநாட்டில் கலந்து கொண்டேன். சமாதானமாகவும் அமைதியாகவும் எல்லா இன மக்களும் இருக்கும்படி விடுக்கப்பட்ட வேண்டுகோளில் கையொப்பமிட்டேன். சமாதான மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான திரு இமானுவேல் என்பவர் 11 ம் தேதி தாக்கப்பட்டுக் கொலையுண்டிருக்கிறார்.

இந்தச் சம்பவத்திற்கு என்னைப் பொறுப்பாளி ஆக்கியிருக்கிறார்கள். முதுகுளத்தூர் தொகுதிக்கு 15 மைல் அப்பாலும், என் சொந்த கிராமமான பசும்பொன்னுக்கு 30 மைல் தள்ளியும் உள்ள பரமக்குடியில் அன்று நடந்த சம்பத்திற்கு நான் பொறுப்பாளியாக்கப் பட்டிருக்கிறேன், என்பதைக் குறிப்பாக போர்டின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அன்றைய தினத்தில் நான் அங்கு போனதுமில்லை. 13 ம் தேதி எனது முதுகுளத்தூர் தொகுதிக்கு அப்பால், உள்ள பரமக்குடி தொகுதியைச் சேர்ந்த, அருங்குளத்தில் மறவர்களுக்கும் அரிஜனங்களுக்குமிடையே கடுமையான கலகம் நடந்திருக்கிறது. 14ம் தேதி கீழத்தூவல் கிராமத்தில் மிருகத்தனமான ரீதியில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்து, ஐந்து மறவர்கள் துடிககத் துடிக்கக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பிறகு செப்டம்பர் 16ஆம் தேதி தான் முதன்முதலாய் முதுகுளத்தூர் பகுதிக்கு கலவரம் வருகிறது. நாடார்கள் தூண்டுதலாலும், போலிசாரின் உதவியாலும் அரிஜனங்கள் அணிவகுத்துப் போய் நான்கு மறவர்களைக் கொன்றிருக்கிறார்கள். மறவர்கள் திருப்பித் தாக்கி, இரண்டு அரிஜனங்களைக் கொன்று, அந்த தாக்குதலை விரட்டி அடித்திருக்கிறார்கள். 17 ம் தேதி போலிசாரின் கொலைப்படலம் முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த கீரந்தைக்கு இரண்டாவது தடவையாக வந்து, எனது ஆதரவாளர்களான ஒரு அரிஜன் உட்பட ஏழு பேர்களை கொன்று விட்டனர். பகிரங்கமான இவ்வளவு குரூரமான முறையில் தூண்டிவிடப்பட்ட சம்பவங்கள், பல இடங்களிலும் நடந்து கொண்டு வருகையில், ஒரு தரப்பில் மட்டும் அடக்க நிலை சாத்தியமா? காங்கிரஸ் சர்க்காரும் நாடார் வியாபாரிகளும் சேர்ந்து மறவர்களுக்கு விரோதமான உணர்ச்சிளைக் கிளறி விடும் தங்கள் வேலையைச் சரிவரச் செய்து, அச்செயல் குரூரம் அடைந்து, தமது உயிரையே பறிக்க வந்த நிலையில், சில பகுதி மறவர்கள் தங்கள் பதட்டத்தை அடக்க முடியாமல், திருப்பி தாக்கியது தவிர்க்கக் கூடியதல்ல.

இந்தக் குழப்ப நிலையில் சமாதானக்குழு ஒன்று உதயமாயிற்று. காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியைச் சேர்ந்த திரு. சா. கணேசன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. ராமமூர்த்தி இராமநாதபுரம் சேதுபதி, தமிழரசுக் கழகத்தை சேர்ந்த ம.பொ. சிவஞானம் ஆகியோர். இக்குழுவினர் செப்டம்பர் 21ம் தேதி மதுரைக்கு வந்து, அன்று பிற்பகல் என்னைச் சந்தித்தனர்.சமாதானக் குழுவிற்கு எனது முழு ஒத்துழைப்பைத் தருவதாகவும், சமாதானத்தை நிலைக்கப் பண்ணுவதில் நான் எல்லோரையும் விட அதிக அக்கறையாக இயங்குகிறேன் என்றும் அக்குழுவினரிடம் வாக்களித்தேன். ஆரம்பத்தில் சமாதானத்திற்கு வாக்களித்து, ஒத்துழைப்பதாய் வாக்களித்த காங்கிரஸ் தலைவர்கள், பிறகு அவ்வக்குறுதியை நழுவ விட்டார்கள்.

திரு. ம.பொ. சிவஞானம் கிராமணியார் எனது சமாதான ஆர்வத்தையும், அதற்காக நான் ஒத்துழைக்க உடன்பட்ட உண்மை பூர்வமான என் மனப்பாங்கையும் விவரித்து விடுத்த அறிக்கையின் பிரதியை இத்துடன் இணைத்திருகிறன். அது செப்டம்பர் 25 ம் தேதி இந்து பத்திரிக்கையிலும் வெளியாகி இருக்கிறது. செப்டம்பர் 19 ம் தேதி முதுல் 25 ம்தேதி வரை கீழத்தூவல் துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் மீது ஸ்ரீவெங்கடஸ்வரன் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை, அரசாங்கம் தன்னை அச்சம்பவங்களில் சம்பந்தப்படாத மாதிரி காட்டி, தன்னை மறைத்துக் கொள்வதந்காகச் செய்து கொண்ட ஏற்பாடேயன்றி, உண்மை நிலையை விளங்கிக் கொண்டு, நியாயம் வழங்குவதற்காக அல்ல என்று கண்டதும் அவ்விசாரணையை அன்று மட்டும் மறுக்கவில்லை. இன்றும் கூடத்தான் மறுக்கிறேன். எவ்வித மேலாதிக்கம் இல்லாத, சுதந்திரமான நீதி விசாரணை ஹைகோர்ட் அல்லது சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் மூலம் நடத்தப்பட்ட வேண்டும் என்பதிலும், அதைத் தவிர வேறு வகையான அரசாங்க விசாரணை எதுவும் பயன் தராது என்பதிலும் எனது உறுதி அன்று மட்டுமல்ல, இன்றும் அதே தான்.

அதிகாரத்தில் இருக்கிற சர்க்கார், குறிப்பாக, முதல் மந்திரியும், உள்நாட்டு மந்திரியும் இந்தச் சவாலில் உட்பட்டிருப்பதால், அவர்களால் ஏற்பாடு செய்யப்படும் மேலாதிக்கத்திற்கு அடங்கிய எந்த விசாரணையும் நீதியைப் பிரதிபலிக்காது என்பதே எனது நோக்கம் அன்றும் இன்றும் இத்தகைய அவசர விசாரணை கூட உண்மையை விளங்கிக் கொள்ள ஒரு வாய்ப்பளித்து விசாரணை விபரம் பத்திரிக்கையில் வெளிவந்தது. அதன் மூலம், போலிசாரின் கொடுமைகள் எவ்வளவு தூரம் மேலோங்கி இருக்கிறது? என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சாட்சி சொல்ல வந்தவர்கள் போலிசாரின் பயங்கரத்திற்கு எவ்வளவு தூரம் ஆட்பட்டு இருக்கிறார்கள்? என்பதையும் விசாரணை மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்தச் சமயத்திலெல்லாம் மேலும் கலகநிலை வளராமல் தடுத்து, சமாதானத்தை நிலை நாட்டுவதில், அதர கட்சிப் பிரதிநிதிகளோடு, நான் முழு முயற்சியில் ஈடுபட்டு இருந்தேன். எங்களது இடைவிடாத முயற்சியின் பயனாகத்தான் அமைதி சாத்தியம் ஆயிற்று.

கலெக்டரும் மதுரை டி.எஸ்.பி.யும் இந்த அமைதி நிலையைப் பற்றி (செப்-28 வரை) பத்திரிக்கைகளுக்குச் செய்தி கொடுத்துள்ளனர்.அதே நாள் மாலை, அதாவது செப்டம்பர் 28-ம் தேதி காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியின் தொடக்க விழாக் கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில் தொடக்க விழாவில் நான் கிட்ட தட்ட இரண்டரை மணி நேரம் பேசினேன். எனது அந்தச் சொற்பொழிவில், இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் படிப்படியான முன்னேற்றத்தை விபரமாக எடுத்துக் கூறினேன். பழைய காங்கிரஸ்காரர்கள் அதை விட்டு விலகியதற்கான காரணத்தையும், காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி உதயமான விபரத்தையும் ஒரு புதுக் கட்சி தோன்றித் தீரவேண்டிய அவசியத்தையும் விளக்கினேன்.

என்னுடைய நீண்ட நேரப் பேச்சில் முதுகுளத்தூர் பிராந்தியத்தில் நடைபெற்ற சம்பவத்தை விளக்குவதற்காக அரைமணி நேரப் பேச்சில் சமாதானத்தையும் சகல இன மக்களின் அமைதியையும் தான் அழுத்தமாக நான் வலியுறுத்தினேன். அதோடு, சர்க்காரின் ஜாதி துவேஷ வளர்ப்புக் கொள்கையையும் எல்லா இன மக்களிடமும் நான் பெற்றுள்ள மரியாதையையும், ஆதரவையும் ஜாதி துவேஷத்தின் மூலம் அழித்துவிடக் கையாண்டு வரும் வழிமுறைகளையும் பச்சை பச்சையாக ஒன்று விடாமல், ஆதாரத்தோடு விளக்கினேன். ஆனால் நான் சச்சரவை விரும்பவில்லை. சமாதானத்தையும் அமைதியையுமே விரும்புகிறேன். அதற்காகவே இரவு பகல் ஓயாமல் பாடுபடுகிறேன். துன்புறுத்தப்பப்பட்ட மக்கள், தங்கள் இன்னல்களைக் களைந்து கொள்ளச் சட்டத்தில் வசதி இருக்கிறது. எவ்விதத் துன்பம், எவரால் கொடுக்கப்பட்டாலும், அதற்கு மாற்று வழி சட்டப் பாதையேயன்றி சண்டை அல்ல என்பதே எனது குறி. பலாத்கார செயல்களே கூடாது என்பதில் எனக்குள்ள அழுத்தமான அக்கறையை பலதடவை நான் மெய்ப்படுத்தி இருக்கிறேன். அன்றைய கூட்டத்திலும் வற்புறுத்திப் பேசினேன். அப்பேச்சின் சுருக்கம் செய்திப் பத்திரிகைகளில் வெளி வந்திருக்கிறது. அந்த நகல் பிரதிகளும் இத்தோடு இணைத்திருக்கிறேன். பல ஆயிரம் மக்களுக்கு முன், காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியின் பூர்வாங்க மாநாட்டைத் திறந்து வைத்து, நீண்ட பெரும் பிரசங்கத்தைச் செய்து முடித்த அரை மணி நேரத்தில், என்னிடம் தடுப்புக் காவல் சட்டப்படி சிறைப்படுத்தும் உத்தரவு கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டேன். சென்னைக்குக் கூட்டி வந்தார்கள். மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளேன்.

நடப்புகளின் பின்னணி இதுவாக இருக்கையில், என்னைச் சிறைப்படுத்த ஏதேனும் நியாய சம்மதம் இருக்க முடியுமா?சமாதான சாத்தியத்திலும், எல்லா இன மக்களின் ஐக்கியத்திலும் எனக்கு இதரரை விட அதிக கவனம் உண்டு. சாதி வெறியைக் கிளறிவிட்டோ, கலவரத்தைத் தூண்டிவிட்டோ நாட்டின் பாதுகாப்புக்குக் கேடு விளைவிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. அதிலும் முதுகுளுத்தூர் பிராந்திய ஜன ஒற்றுமையில் எனக்கு அக்கறை அதிகம். ஏனெனில், கடந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்குப் படுதோல்வியைக் கொடுத்த தொகுதி அது.

மேலும், இந்த இடத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். நான் தேவர் மரபைச் சேர்ந்தவன். எனது சகாவன சசிவர்ணத் தேவரும் ஒரு தேவர். நானும் அமோக வாக்குகளால் ஜெயித்தேன். சசிவர்ணத் தேவரும் அதே மாதிரி ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தார். ஆனால், நாங்கள் வெற்றி பெற்றது எங்கள் தேவர் மரபினரின் ஓட்டுக்களால் மட்டுமல்ல; இதர மக்களின் வாக்குகளாலும் தான். முதுகுளத்தூர் தொகுதி வாக்காளர்களில் தேவர் ஓட்டுக்கள் 35 ஆயிரம் தான். அரிஜன வாக்குகள் 45 ஆயிரம். இதர இனத்தாரின் வாக்குகள் 90 ஆயிரத்துக்குமேல். மார்ச் மாதம் நடந்த தேர்தலில் நான் பெற்ற ஓட்டுக்கள் 55,333. எனக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ் அபேட்சகர் பெற்ற ஓட்டு 32,767. ஜுலையில் நடந்த இடைத்தேர்தலில் சசிவர்ணத்தேவர் பெற்ற வாக்குகள் 56,657. காங்கிரஸ் அபேட்சகர் பெற்ற வாக்குகள் 32,875. இவ்வளவு ஏற்ற தாழ்வான வாக்கு வித்தியாசம் இருக்கையில், சகல இன மக்களும், என்னையும், எனது சகாக்களையும் அபிமானத்தோடு ஆதரித்துத் தமது வாக்குகளைப் போடும் நிலையில், நான் வகுப்புக் கலவரத்தைத் தூண்டி விட்டுத் திட்டமிடுவதிலும், சட்ட விரோதச் செயல்களுக்குத் தூபமிடுவதிலும் நாட்டங்காட்டினால், அது அரசியல் தற்கொலைக்கு ஒப்பாகும் என்பதை சாதாரண பொது அறிவுள்ளவன் கூடப் புரிந்து கொண்டு விடுவது எளிது.

ஸ்ரீபக்தவச்சலம் அவ்வளவு பயங்கரமாகப் பேசியும், காங்கிரஸ் தலைவர்கள் இழிவான பிரச்சாரத்தைச் செய்தும், சர்க்காரின் மூலம் பல சகிக்கவியலாத தொல்லைகள் கொடுத்தும், என் தொகுதி மக்களை ஜனநாயக வழியிலிருந்து பிரிக்கவோ, என்னிடமும், நான் சார்ந்துள்ள அரசியல் கட்சியிடமிருந்து அவர்களின் அபிமானத்தையும், ஆதரவையும் உதற வைக்கவோ முடியவில்லை என்பது வெளிப்படை. ஆகவே தான் ஆகஸ்ட் மாதத்திலும் செப்டம்பர் மாதத்திலும் நெருக்கடி நிலை என் தொகுதியில் உருவானதை அறிந்து சசிவர்ணத் தேவரும் பிறரும் அடுத்தடுத்து அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், அம்முறையீடு அத்தனையும் அதிகாரிகளால் அலட்சியப்படுத்தப்பட்டு விட்டன. எனக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களை எவ்வளவு குரூரமாகக் கொடுமைப்படுத்தியும் கூட, அவர்களின் அபிமானத்தையும் உறுதியையும் கலைக்க முடியவில்லை. முடியாது எனக் கண்ட அரசாங்கம், என்னைப் பிடித்தாலாவது அம்மக்களின் மனதைத் திகில்படுத்தி நடுநடுங்க வைக்கலாம் என்று திட்டமிட்டு, அந்தத் திட்டத்தின்படி, என்னைச் சிறைப்படுத்தியிருக்கிறதே தவிர, என்னைச் சிறைப்படுத்துவதற்கான உண்மைக் காரணங்களோ, நியாயமோ கொஞ்சமும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் என்னைத் தடுப்புக்காவல் சட்டத்தில் சிக்க வைத்திருப்பதற்குக் காரணம், எனக்குள்ள அரசியல் செல்வாக்கை ஒழிக்க, அதிகாரத்தில் இருக்கிற கட்சி, செய்த சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான். அதே சதியின் விளைவுதான் முதுகுளத்தூரில் நடைபெற்ற வேதனைமிக்க சம்பவங்கள். இதைத் தவிர நாட்டின் பாதுகாப்புக்கும், சட்டம் ஒழுங்கு பரிபாலிப்பிற்கும் என்னைச் சிறைப்படுத்தி இருப்பதற்கும் சம்பந்தமே இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதலாவது பாராவுக்கு எனது விளக்கம் அகில இந்திய ரீதியில் பலாத்காரப் போராட்டம் நடத்தப் போவதாக நான் பயமுறுத்திப் பேசினேன் என்று கூறப்பட்டிருப்பதில் உண்மை இல்லை. ஆனால், நம்முடைய சர்க்காரின் காமன் வெல்த் உறவு தொடர்பு குறித்த வெளிநாட்டுக் கொள்கையைக் காரசாரமாக விமர்சித்திருக்கிறேன். காமன்வெல்த் உறவை விட்டு ஆறு மாதங்களுக்குள் விலகாவிடில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக நான் மதுரைப் பொதுக்கூட்டத்தில் பிரகடனித்தேன் என்று சர்க்கார் குற்றஞ்சாட்டுகிறது.

அதாவது நான் மதுரையில் அவ்வாறு பேசியதாக அரசாங்கம் குறிப்பிடுகிற தேதி 1956 மே மாதம் 12ம் தேதி. முதுகுளத்தூர் சம்பவம் நடந்தது 1957 செப்டம்பரில். இதற்கிடையில் உள்ள இடைவெளி 16 மாதங்கள்.16 மாதங்களுக்க முன் நான் பேசியதாகச் சொல்லப்படும் ஒரு விஷயத்தை, 16 மாதங்கள் சென்றபின் நடந்த மற்றொரு சம்பவத்தோடு பிணைத்து, அதுதான் கைதாவதற்குக் காரணம் ஆனது எப்படி சாத்தியமாயிற்று? என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நடவடிக்கையில் இருக்கும் ஒரு அரசியல் ஊழியன் நான். இந்த முறையில் சாதாரணமாக நான் மாதம் சுமார் 10 கூட்டங்கள் வரை சொற்பொழிவாற்றி வருகின்றேன். தேர்தல் காலத்தில் நாள் ஒன்றுக்குப் பத்துக்கூட்டம் வரை பேசி இருக்கிறேன்.இந்தப் பதினாறு மாத கால அவகாசத்தில், நான் பேசிய கூட்டங்கள் ஏராளமாக இருக்கும். ஆனால், நான் பயமுறுத்திப் பேசியதாக சர்க்கார் சொல்வது ஐந்து கூட்டங்களைத்தான். இதிலிருந்தே சர்க்காரின் குற்றச்சாட்டுக்களில் உள்ள பலவீனம் தெரிகிறது.

மேலும், நான் மதுரையில் பயமுறுத்திப் பேசியதாக சர்க்கார் கூறுகிற 1956 மே 12க்கும், முதுகுளத்தூர் சம்பவம் நடந்த 1957 செப்டம்பருக்கும் இடையில் எவ்விதச் சம்பவங்களும் நடைபெறவில்லை என்பது இந்த இடத்துக்கு அதிக முக்கியம். 2வது பாராவுக்கு விளக்கம்இது முழுக்க முழுக்கப் பொய். பணக்கார நாடார் வியாபாரிகளின் முறைக்கொவ்வாத வியாபாரப் போக்கையும், சாதாரண இன மக்களையும் விட்டுத் தனித்தியங்கும் பழக்கத்தையும் மட்டும்தான் கண்டித்துப் பேசினேன். அதோடு நாடார்களில் அத்தகைய செயல்களை மாற்ற, மற்ற பொதுமக்கள் முனைய வேண்டும் என்றும் பேசினேன். அரிஜனங்கள் வகுப்புணர்ச்சித் தூண்டுதலுக்கு ஆட்பட்டு, பொறாமைப்பட்டோரின் கருவியாகி விட வேண்டாம் என்று, அரிஜனங்களையும், சர்க்காரின் தயவையும், உதவியையும் பெற்று வகுப்புக் கலவரத்துக்கு அடியிடும் பணக்கார நாடார்களையும் எச்சரித்தேன். என்னுடைய இந்தப் பேச்சு, மறவர்களால் தாக்கப்படுவதற்கு அரிஜனங்களை இலக்காகிற்று என்று சொல்வது அறிவீனமாகும்.

1957 மே, ஜுன் மாதங்களில் வகுப்புக் கலவரம் நடந்ததாக எவரும் புகார் பண்ணவில்லை. வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. ஆகவே, 1957 ஏப்ரல் 17ல் நான் பேசியதன் மூலம் அரிஜனங்கள், மறவர்களின் தாக்குதலுக்கு இலக்கானார்கள் என்று கூறுவதில் பொருளே இல்லை. எனது கைதுக்கு அந்தப் பேச்சையும் ஒரு காரணமாகக் காட்டப்படும் அறிக்கை சுத்தச் சூன்யமாகவே காண்கிறது. குறிப்பாக இக்குற்றச்சாட்டு, வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட பொய்மை நிறைந்ததாகும்.

3வது பாராவுக்கு விளக்கம் 1957ல் ஜுன் 14ல் அபிராமத்தில், கலவரத்திற்குத் தூண்டப்படும் நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்டு விடாமல், அமைதியாக இருக்கும்படி மக்களுக்கு முன்னறிவிப்பு செய்தேன். போலீசைப் பயமுறுத்தி பேசியதாகக் கூறுவது சிறிதும் உண்மைக்கு ஒட்டாது.

4வது பாராவுக்கு விளக்கம் 1957 ஜுலை 10ல் திருப்புவனம் புதூரில் பேசினேன். ஜுன் 27ல் திருச்சுழியில் பேசிய மாதிரிதான் திருப்புவனம் புதூரில் பேசினேன். திரு பக்தவத்சலம் பேசியது போன்று காங்கிரஸ்காரர்கள் கலவரத்தை உண்டாக்கும் தோரணையில் பேசிவரும் பேச்சுக்களை வெளிப்படுத்தி விமர்சனமும் செய்தேன். முதுகுளத்தூரில் மூன்றாவது உலகப் போரை ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னேன் என்று கூறப்பட்டிருப்பது பெருத்த அபத்தமாகும்; அதிவேகமானதும்கூட. சமாதான மாநாட்டில் அரிஜனங்களின் பிரதிநிதியாகப் பேச வந்திருப்பவர் திரு. இமானுவேல். ஆனால், முதுகுளத்தூர் தொகுதிக்குச் சட்டபூர்வமான மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. வேறொருவர் இருக்கிறார். அதனால், இத்தொகுதியின் அரிஜனங்களுக்காக பிரதிநிதித்துவம் வகித்துப் பேசுவதற்கு, இத்தொகுதி எம்.எல்.ஏ. தான் அதிகாரபூர்வமானவர் என்று தான் நான் சொன்னேன். இதைத் தவிர ஒரு அரிஜன் எனக்கு முன் சமமாகப் பேசுவதால், என் கௌரவம் குறைந்து விட்டதென்று நான் கூறவேயில்லை. எனது தொகுதியில் திரு. பெருமாள் என்ற அரிஜன் ஒருவரை என்னோடு சமமாக ரிசர்வ் ஸ்தானத்திற்கு நிறுத்தி ஜெயிக்க வைத்த நான், சமாதான மாநாட்டில் ஒரு அரிஜன் எனக்கு முன் பேசியதைக் கேவலமாகக் கருதி, என்னவோ சொன்னேன் என்று குறிப்பிடுவது குழந்தைத்தனமும் மதியீனமுமாகும்.

அதோடு, மற்றொன்றையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். அதாவது, ஜாதி அமைதியையும், சமாதானத்தையும் வேண்டி, நானும் எனது சகாவான முதுகுளத்தூர் தொகுதி சட்டசபை உறுப்பினரும் கையெழுத்திட்ட அறிக்கை வெளியிடப்படவேயில்லை. திரு இமானுவேல் தாக்கப்பட்டதற்கு என் மீது பொறுப்பைச் சுமத்தும் நோக்கத்தோடு அறிக்கை பகிரங்கப் படுத்தப்படாமலேயே மறைக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீவெங்கடேஸ்வரன் விசாரணையின் போதும், நான் இனத் துவேஷத்தைத் தூண்டி விட்டேன் என்றோ, திரு இமானுவேல் மீது பகையுணர்ச்சிப் பட்டிருந்ததாகவோ, எந்தச் சாட்சியும் கூறவில்லை. இந்த நிலைமையில் அருவருக்கத்தக்கத் தக்க பல குற்றச்சாட்டுகள் என் மீது தவறாகச் சாட்டியிருக்கிறார்கள். இதெல்லாம், போர்டாரின் கருத்து என்மீது தவறாகப் படரட்டும் என்பதற்காகவே. துரதிருஷ்டவசமாக அச்சம்பவம் குறித்துக்காட்டப்பட்டுள்ள எல்லாமுமே உண்மைக்குப் புறம்பானவை. குற்றச்சாட்டு அறிக்கையில் கூறப்பட்டிருப்பது மாதிரி, சமாதான மாநாடு முடிந்ததும் இமானுவேல் பற்றி நான் கூறவே இல்லை; அப்படிக் கூறவும் மாட்டேன். அம்மாதிரி நினைப்பதற்கே இழிவான அச்செயலை நான் புரியத் திட்டமிட்டிருந்தால், அதைப் பலபேர் முன்னிலையில் பறையடிப்பதற்கு நான் முட்டாள் அல்ல. இமானுவேல் மரணத்திற்கும், இக்கலவரங்களுக்கும் சம்பந்தமேயில்லை. இக்கலவரச் சம்பவங்களோடு சேராத வேறு பல காரணங்கள் அதைச் சுற்றி நிற்கின்றன. அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அதைப்பற்றி இதற்குமேல் அதிகம் விவரிக்காமல் விடுகிறேன்.

செப்டம்பர் 16ல் வடக்கம்பட்டி கூட்டத்தில் நான் பேசியதாகக் குறிப்பிடப்பதும் மோசமான பொய். காங்கிரஸ் தலைவர்களின் தவறான போக்காலும், போலீசாரைத் தங்கள் கெட்ட எண்ணத்திற்குப் பயன்படுத்துவதாலும், அவர்களது நோக்கம் ஈடேறாது என்று எச்சரித்தேனே தவிர, நிலைமையை அடக்க சர்க்கார் பலாத்கார நடவடிக்கையில் இறங்கினால், அதே செயல் மூலம் பதிலளிக்கப்படும் என்று நான் குறிப்பிடவேயில்லை. மேலும் இந்த நாட்டில் தருமத்தை நிலைநாட்டுவதற்காக மக்கள் ஆயுதம் ஏந்தும்படியோ, உள்நாட்டுப் போராட்டத்தை ஆரம்பிக்கும்படியோ நான் பேசவேயில்லை. அதற்கு மாறாக, வகுப்பு ஐக்கியத்தையும் சமாதான வாழ்வையும் வற்புறுத்தினேன். அதோடு கடுமையான அடக்கு முறையை நடத்தியும் கூட, பிரிட்டிஷ் சர்க்கார் இப்பகுதி மக்களைப் பயமுறுத்தி தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இயலவில்லை என்பதை, காங்கிரஸ் சர்க்காருக்கு நினைவுறுத்தி, அத்தகைய மக்களை அனாவசியமான அடக்குமுறையின் மூலம் அதிரச் செய்துவிட காங்கிரஸ் முயன்றால், பலன், பிரிட்டிஷ் சர்க்கார் பெற்றதாகத் தான் இருக்கமுடியும் என்று எச்சரிக்கவும் செய்தேன். இந்த அளவுக்கு கூட அரசியல் ரீதியில் பேசுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை கிடையாதா?

வடக்கம்பட்டியில் செப்டம்பர் 16ல் நான் பேசிய பிறகு, கொலை, கொள்ளை, தீ வைப்புகள் நடந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. அந்தச் சம்பவங்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், அச்சம்பவங்களை முன்னர் நான் குறிப்பிட்ட பகுதியில், இருக்கும் போலீஸ் அதிகாரிகளின் செயலால் விளைந்தவை என்று தான் கூறுவேன். அந்த அதிகாரிகளை அந்த இடத்தில் இருந்த மாற்ற வேண்டுமென்று ஆரம்பத்திலேயே எனது தரப்பிலே மேலதிகாரிகளுக்குத் தெரிவித்தும் எதுவும் செய்யாமல் விட்டு விட்டதால், அந்தச் சம்பவங்களுக்கு அந்த போலீஸ் அதிகாரியைத் தவிர வேறு எவரும் காரணமாயிருக்க முடியாது. பொதுவாக, இச்சம்பவங்களின் ஆரம்பமும் முடிவும் ஏழு நாட்கள் தான் செப்டம்பர் 14லிருந்து 20க்குள் நிலைமை ஓய்ந்து விட்டது. இதை கலெக்டரும் டி.எஸ்.பியுமே ஒப்புக்கொண்டு அறிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் நான் செப்டம்பர் 28ம் தேதி, அதாவது நிலைமை ஓய்ந்து சமாதானம் சாத்தியமான எட்டு நாட்கள் கழித்து, சிறைப்படுத்தப்படுகின்றேன். 20ம் தேதி நடந்த சம்பவங்களுக்காக 28ம் தேதி நான் சிறைப்பட எப்படி நியாய சம்மதம்? கிடைத்ததோ தெரியவில்லை. “கலவரம் ஓய்ந்து எட்டு நாட்களான பிறகு, சமாதானம் வந்து விட்டது” என்று அதிகாரிகளே அறிக்கை வெளியிட்டபிறகு, என்னிடம் தடுப்புக் காவல் சட்டத்தை நீட்டினால், அதில் நியாயச் சார்பு ஒரு ஓரத்திலாவது ஒட்டியிருக்கமுடியுமா? ஒரு போதும் முடியாது.

தமிழ்நாடு பத்திரிகையின் பிரதிநிதியோடு நான் பேசுகையில், சர்க்காரோடு சண்டையிடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியதாகக் குறிப்பிட்டு இருப்பதற்கு அடிப்படையே இல்லை. நான் சொல்லியதே வேறு. அந்தச் செய்தியில் தேதி குறிக்கப்படாது போயினும் 24ம் தேதி நான் அந்தப் பத்திரிகைப் பிரதிநிதியுடன் பேசும்போது குறிப்பிட்ட விபரம் மேற்படி பத்திரிகையில் 25ம் தேதி வெளிவந்திருக்கிறது. அதன் நகலை இத்தோடு இணைத்துள்ளேன். அதுவே, அந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லும்.எவ்விதத் தொடர்புமற்ற முறையில் எங்கோ இருக்கிற எனது சொந்தக் குராமத்தில் உள்ள எனது வீட்டிற்குச் சென்று, எனது வீட்டுப் பணியாளர்களைக் கைது செய்து இருப்பதன் மூலம், அரசாங்கம் என்னைக் கோபப்படுத்த முனைகிறது என்ற விபரத்தை அந்தப் பத்திரிக்கை நறுக்கின் மூலம் எவரும் புரிந்து கொள்ளலாம்.

ஸ்ரீவெங்கடேஸ்வரனின் விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுது, அரிஜனங்களை அச்சுறுத்துவதற்காக நான் கட்டிட வாயிலில் காத்திருக்கவில்லை. அவ்விசாரணையில் கலந்துகொள்ள நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஆயினும் சசிவர்ணத் தேவர் உட்பட என் நண்பர்கள், அதில் கலந்து கொள்ள விரும்பினார்கள். 19ம் தேதி நான் அவர்களுடன் மோட்டார் காரில் பரமக்குடிக்குப் போனேன். விசாரணை நடந்த இடத்திற்கு என் நண்பர்கள் சென்றார்கள். நான் அரை மணி நேரம் மற்றொரு நண்பரின் வருகைக்காக அங்கு காரில் காத்திருந்தேன். 21ம் தேதி ஐந்தே நிமிடம் அங்கு காரில் ஒரு நண்பருக்காகக் காத்திருந்தேன். 22,23,24 தேதிகளில் நான் அந்த இடத்திற்கே போகவில்லை. 23ம் தேதி நான் பரமக்குடியில் இருக்கவில்லை. மகாளய அமாவாசைக்காக ராமேஸ்வரம் கோவிலில் சொற்பொழிவும் ஆற்றினேன்.கடைசியாகச் சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துமே, பொய்யானவை என்பது, அடிஷனல் ஜில்லா மாஜிஸ்திரேட்டுக்கும் சர்க்காருக்குமே நன்கு தெரியுமென்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரை நான் சமாதானத்திற்காக ஒவ்வொரு மூச்சையும் செலவிட்டு இருக்கிறேன் என்பதைச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன். செப்டம்பர் 10ல் கலெக்டர் கூட்டிய சமாதான மாநாட்டில் தயாரிக்கப்பட்ட சமாதான வேண்டுகோளில் நான் கையெழுத்துப் போட்டு இருக்கிறேன். டில்லிக்குச் செல்லும் முன், வகுப்புணர்ச்சிக்கு இடம் கொடுத்து சமாதானத்தைக் குலைத்து விட வேண்டாமென்று வேண்டியிருக்கிறேன். டில்லியில் இருந்து திரும்பி வந்த பின்னரும், தொடர்ந்து சமாதானத்துக்காக வேண்டுகோள் விடுத்து, அதற்காகப் பாடுபட்டும் வந்திருக்கிறேன். செப்டம்பர் 21ல் மதுரை வந்த சமாதானக் குழுவினர்க்கு பூரண ஒத்துழைப்பையும் தர சம்மதம் தெரிவித்திருக்கிறேன். ஆனால், காங்கிரஸ்காரர்கள் முதலில் உடன்பட்டு, பிறகு உதறி விட்டனர்.

நான் கைதாவதற்கு சற்று முன்பு மதுரையில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் பேசிய நான், “பலாத்காரத்தில் யார் ஈடுபட்டாலும் எனது இதயத்தைப் பிளந்து அதிலிருந்து சொட்டும் உதிரத்தைக் குடித்த பாவியாவார்கள்” என்று நெஞ்சுருக வேண்டிக் கொண்டேன். நான் விரும்புவது சமாதானமே என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் காட்ட முடியுமா? சமாதானத்தை விரும்பும் ஒருவன் இதைவிட மேலான உண்மையான வேண்டுகோளை விடுக்க முடியுமா? ஒரு சமாதான வேண்டுகோளை இதைவிட உறுதியான வார்த்தைகளால் கோர்த்து விடுக்கத்தான் முடியுமா? சமாதானத்திற்காக முன்நிற்கும் ஒருவன் தனது எண்ணத்தை இதைவிட வேறு முறையில் எப்படித்தான் வெளிப்படுத்துவது? காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியின் பூர்வாங்க மாநாட்டை மதுரையில் செப்டம்பர் 28ல் தொடங்கி வைத்து நான் பேசிய பேச்சு முழுவதும் டேப்-ரிக்கார்டு செய்யப்பட்டு இருக்கிறது. அதில் முதுகுளத்தூர் சம்பவம் பற்றி நான் பேசிய பகுதியை மட்டும் திரும்ப வைத்துக்கேட்டால், சமாதானத்தில் எனக்குள்ள உறுதி திட்டவட்டமாகப் புலப்படும். அந்த டேப்-ரிக்கார்டைத் திரும்ப வைத்துக் கேட்கும்படி போர்டரைக் கேட்டுக்கொள்கிறேன்.

என்னைச் சிறைப்படுத்தியது சரிதான் என்று போர்டார் நம்புவதற்காக, கௌரவமற்ற முறையிலும், நியாயமற்ற முறையிலும் வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தான் அத்தனையும். என் மீது பல குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன. குற்றம் சாட்டியவர்களைக் குறுக்கு விசாரணை செய்து, எனது நிலைமைகளைத் தெளிவுபடுத்தும் வாய்ப்பும் எனக்குத் தரவில்லை. குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்புக் கிடைத்தால், என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அந்தரங்கத்தை வெளிப்படுத்துவேன். அத்தகைய வாய்ப்பு இல்லாத சிரமத்தில் நான் இருப்பதைப் போர்டார் புரிந்துகொள்ளலாம்.

சமாதானமாக இருக்கும்படி நான் வேண்டுகோளே விடுக்கவில்லை என்பது என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் ஒன்று. இது எவ்வளவு மோசமான, உண்மையை மூடி முத்திரை வைத்த பொய்யான குற்றச்சாட்டு என்பதை நான் விளக்கத் தேவை இல்லை. ஆனால், இது ஒன்றை வைத்தே என்மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் ஒருதலைத் தன்மையை அளவிட்டு விடலாம். மற்றும் எனது பேச்சுக்களைக் காரணம் காட்டி சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குச் சரியான ஆதாரத்தைச் சர்க்காரும் கொடுக்கவில்லை. குறுக்கு விசாரணை செய்யும் சந்தர்ப்பமும் எனக்குத் தரப்படவில்லை. எனவே, நான் சமாதானத்திற்காக உண்மையான வேண்டுகோள் விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பொய் பொய் பொய் பொய் என்ற ஒரு தரம் அல்ல; நூறு தரம் சொல்கிறேன். சொல்லுவதற்கான ஆதாரங்களை மேலே நான் தெளிவாக விளக்கியிருக்கிறேன். நான் விவரித்துள்ள அவ்வளவும் ஆதாரபூர்வமானவை. அவைகளுக்குரிய முக்கியத்துவம் அளிக்கும்படி போர்டாரை வேண்டுகிறேன்.

நான் பின்னாலிருந்து கொண்டு தேவர்களைப் பலவந்த நடவடிக்கைகளுக்குத் தூண்டி விட்டேன் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இவ்வாறு குற்றம் சாட்டப்படுவது எளிது. ஆனால் அதை நிருபிப்பது கடினம். காட்டுத்தனமான இக்குற்றச்சாட்டில், ஒரு பகுதியாவது உண்மையென்று நிரூபிக்க, மிகச்சிறயதொரு ஆதாரத்தையாவது எடுத்துக்காட்டும்படி அரசாங்கத்தை அறைகூவுகின்றேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் விடுத்துள்ள சமாதானக் கோரிக்கைகளும், எடுத்துள்ள சமாதான நடவடிக்கைகளும் அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை நியாயத்தின் முன்னே நெருங்க விடா. எனவே, என்னைச் சிறைப்படுத்தியிருப்பதற்குச் சரியான காரணம் கொஞ்சமும் இல்லை. நான் எனது சுதந்திரத்தை, மேலும் வகுப்புக் கலவரத்தை வளர்ப்பதற்கும், நாட்டின் பாதுகாப்புக்குப் பாதகம் விளைவிப்பதற்கும் பயன்படுத்துவேன் என்று கூறப்படுவதில் பொருள் இல்லை; அதற்கான ஆதாரங்களும் காட்டப்படவில்லை. முதுகுளத்தூர் பிராந்தியத்தில் சர்க்கார் செய்துவரும் அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவைகளை மூடி மறைத்துக் கொள்ளவும், சர்க்கார் புரியும் மோசமான அரசியலை எதிர்ப்பவர்களில் நான் முக்கியமானவனாக இயங்கி வருவதால் என்னை அலைக்கழிக்கவும் தான் சர்க்கார் என்னை இந்தச் சட்டத்தால் வளைத்திருக்கிறது. முதுகுளத்தூர் பிராந்தியத்தில் கலக்கத்தைத் தூண்டிவிட்டது; அதன் மூலம் வேதனை மிக்க விளைவுகள் ஏற்பட்டது ஆகிய குற்றங்களுக்கு சர்க்காரும் குறிப்பாக முதன் மந்திரியும், உள்நாட்டு மந்திரியும்தான் பொறுப்பு என்று நிச்சயமாக உறுதியாகக் குற்றம் சாட்டுகிறேன். சர்க்காரும் குறிப்பாக முதல் மந்திரியும் உள் நாட்டு மந்திரியும் இந்தக் குரூரமான சம்பவங்களை உண்டாக்கியது எனது அரசியல் செல்வாக்கை அழிக்கவே என்பதையும் அறுதியிட்டுக் கூறிக்கொள்கிறேன். எனது குற்றச்சாட்டுக்கள் அத்தனைக்கும் போலீஸ் புரிந்த அக்கிரமச் செயல்களுக்கும் நீதிபதி விசாரணை நடத்தும்படி வலியுறுத்தி இருக்கிறேன்.

பொது மக்களும், பிரபலம் வாய்ந்த ஆங்கிலம் தமிழ் தினசரி, வாரப் பத்திரிகைகளும் குறிப்பாக இந்து இந்தியன் எக்ஸ்பிரஸ், மெயில் போன்ற பத்திரிகைகள் அரசாங்கக் கொள்கையை வன்மையாகக் கண்டித்து எழுதி இருக்கின்றன. இவ்வகையில் அரசாங்கம் புரியும் செயல்களையும் கொள்கைகளையும் பலமாகக் கண்டிப்பதில் நான் மிக முக்கியமாக இருப்பதால்தான், அரசாங்கம் என்னைச் சிறைப்பிடித்து இருக்கிறதேயன்றி, ஒழுங்கை நிலைநாட்டவோ, நாட்டுப் பாதுகாப்பிற்கோ அல்ல. தமது நோக்கம் போல் எதையும் முரட்டுத்தனமாகச் செய்வதற்கு இடைஞ்சல் படுத்தும் வகையில், நாடெங்கும் எதிரொலி செய்யும் எனது கண்டனக் குரலைக் கேட்காமல் செய்ய சர்க்கார் கொண்ட ஏற்பாடுதான் எனது சிறைவாசம். இதோடு, சர்க்கார், முதுகுளத்தூர் தொகுதி மக்களுக்குச் செய்த அக்கிரமங்களையும், ஒழுங்கீனங்களையும் வெளியாருக்கும், நியாயத்திற்கும் இலேசாகக் காட்டித் தன்னைத் தப்புவித்துக் கொள்ளத்தான், நிலைமை கட்டுக்கடங்கி அமைதி நிலவுகையில் அரசாங்கம் என் மீது சிறைவாச உத்திரவைச் செலுத்தியதற்கு மற்றொரு காரணம். முதுகுளத்தூர் சம்பவங்களுக்கு என்னையே பொறுப்பாக்கிக் காட்டிவிடலாம் என்ற கெட்ட நோக்கில், சர்க்கார் என்னைச் சிறைப்பிடித்து இருக்கிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. எனவே, என்மீது சாட்டியுள்ளவை அத்தனையும் நியாயத்திற்கு விரோதமானவை என்று போர்டாருக்கு அறிவித்துக்கொள்கிறேன்.

என்னை நேரடியாக விசாரிக்கும்படியும், 28.9.1957ல் நான் மதுரையில் பேசிய பேச்சின் டேப்-ரிக்கார்டைத் திரும்ப போர்டுக்கு முன் வைத்துக்காட்ட வாய்ப்பளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன். என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் என்னைச் சாராதவை. நான் குற்றம் புரிந்தவனுமல்ல; புரிபவனும் அல்ல. ஆகவே, என்னைச் சிறைப்படுத்தி வைப்பதற்குரிய ஆதாரங்கள் போதவில்லை என்று அறிக்கை விடும்படி அட்வைசரி போர்டாரைக் கேட்டுக்கொள்கிறேன்”. என்று தேவர் தனது பதிலை முடித்தார். தேவர் கொடுத்த பதிலுக்கு எந்தவிதப் பதிலையும் அரசாங்கம் கொடுக்கவில்லை.

பின்னர் இமானுவேல் கொலை வழக்கில் முதல் எதிரியாகத் தேவரைச் சேர்த்து, சென்னைச் சிறையிலிருந்து புதுக்கோட்டை சிறைக்கு மாற்றிக் காவலில் வைத்தனர். இமானுவேல் கொலை வழக்கு விசாரணைக்கு கீழ்க்கோட்டும் மேல் கோர்ட்டும் விசேஷக் கோர்ட்டுகளாக அமைக்கப்பட்டு புதுக்கோட்டையிலேயே விசாரணை நடைபெற்று வந்தது. தமிழ்நாடெங்கும், தேவரை விடுதலை செய்யக்கோரி ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடந்தன. மக்களிடையே வெகுஜன எழுச்சி ஏற்பட்டது. அதே சமயம் தேவரை விடுவிக்கக் கோரி ஆலயங்களில் வழிபாடுகள், பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

தேவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில் எந்த மந்திரியும், முதலமைச்சர் உட்பட தென்பாண்டி மண்டலத்திற்குள் நுழைய முடியாத அளவுக்கு, தேவருக்கு ஆதரவான எழுச்சி மக்களிடையே வலுப்பெற்று நின்றது.

தேவர் மீதான கொலை வழக்கு விசாரணை புதுக்கோட்டையில் சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்றது. தேவரை விசாரிக்க, முழு நேர நீதி மன்றம் பனிரெண்டு நாட்கள் தனியாகச் செயல்பட்டது. முப்பத்தேழு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். விசாரணை முடிந்து தீர்ப்புக் கூறும் நாள் அறிவிக்கப்பட்டிருந்தது.

1959 ஆண்டு ஜனவரி மாதம் 6 ம் தேதி இரவு. தங்களது தங்கத் தலைவன் எப்போது விடுதலை ஆவார்? என்று மிகுந்த பேராவலுடன் இரண்டு ஆண்டுகள் காத்துக் கொண்டிருந்த மக்கள் புதுக்கோட்டையில் குவியத் தொடங்கி விட்டனர். சென்னை, சேலம், கோவை, திருச்சி, தஞ்சை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து கார்களிலும், பஸ்களிலும், ரயில்களிலும் புதக்கோட்டைக்கு மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்துச் சென்று கொண்டிருந்தது. புதுக் கோட்டை நகரமே மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. எங்கும் தேவர் விடுதலை பற்றியப் பேச்சு. தேவரைக் காண அனைவரும் ஏக்கப் பெரு மூச்சு. மாசற்ற தங்கத்தை, பசும்பொன் சிங்கத்தை, மூதறிவு மிகுந்த முத்துராமலிங்கத்தை, தன்னகத்தே தெய்வமாகப் போற்றிடும் தென்னகத்து நேதாஜியைப் பார்க்க வேண்டும் என்ற இதயத்துடிப்பு அனைவரிடமும் இருந்தது. அதே சமயம், ஏதாவது விபரீதத் தீர்ப்பு வந்து விட்டால், என்ன ஆவது? என்ற திகில் கூடி இருந்த அனைவரிடத்திலும் குடி கொண்டிருந்தது. வைகறைப் பொழுது எப்பொழுது விடியும்? என இரவெல்லாம் ஆயிரக்கணக்கான தாய்மார்களும் உறங்காமலே கண் விழித்திருந்தனர். பொழுது புலர்ந்தது கடலென திரண்டிருந்த மக்கள் மனதில் மகிழ்ச்சி ஒரு பக்கம் அதிர்ச்சி ஒரு பக்கம் குடி கொண்டிருந்தது. தீர்ப்புச் சொல்லும் நாள் 1959 ஜனவரி 7 ம் தேதி வந்து விட்டது. இனித் தீர்ப்புச் சொல்லும் நேரத்தை அலைகடலெனத் திரண்டிருந்த மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். சரியாக காலை 11 மணி. நீதிபதி அனந்த நாராயணன் வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். என்ன சொல்லப் போகிறாரோ? என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நீதிபதியின் அறிவிப்பு அவர்களை ஏமாற்றம் அடையச் செய்து விட்டது. ஏன் அப்படிபட்ட நிலைமை ஏற்பட்டது?

சரியாகப் பதினோரு மணிக்கு வந்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்த நீதிபதி, சில நிமிட நேரம் கழிந்தவுடன், பிற்பகல் 2 மணிக்குத் தீர்ப்பு என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். பெருத்த ஆர்வத்திலும் எதிர்பார்ப்பிலும் இருந்த அந்த மக்களை நீதிபதியின் அறிவிப்பு ஏமாற்றத்துக்கு உள்ளாக்கத்தானே செய்யும்? மீண்டும் நீதிபதி சரியாக 2 மணிக்கு நீதிமன்றத்திற்க வந்து அமர்ந்தார். 50 பக்கங்கள் கொண்ட தனது தீர்ப்பைப் படித்தார்.

“தேவர் மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இமானுவேல் கொலைக்கும் தேவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று யூகிப்பதற்குக் கூட சாட்சியம் இல்லை. எனவே தேவரை விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கிறேன்” என்று நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களான குருசாமித் தேவர், காட்டுச்சாமித் தேவர், முனியசாமித் தேவர், சடையாண்டித் தேவர், பெரியசாமித் தேவர் ஆகியோரை சந்தேகத்தின் பலனை அளித்து விடுதலை செய்தார் நீதிபதி. இதர மூன்று பேர்களான அங்குசாமித் தேவர், பேயன் முனியாண்டித் தேவர், தவசித் தேவர் ஆகியோர் கொலைக் குற்றவாளிகளே என்று தீர்மானித்து, ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி.

‘தேவர் விடுதலை’ என்ற சொல்லைக் கேட்டதும் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சி வெள்ளத்தில் நீந்தினர். ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.தேவர் விடுதலை அடைந்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்து, மக்களுக்குக் காட்சி தந்ததும், மக்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, ஆரவாரம் செய்து, கோஷங்கள் எழுப்பிக் கரவொலி செய்தனர். தேவருக்கு பலர் பெரும்பெரும் மாலைகளை அணிவிக்க வந்தனர். ஆனால், தேவரோ, “முழு வெற்றிக்குப் பிறகே மகிழ்ச்சி கொள்ள வேண்டும். மாலைகள் எதுவும் அணிவிக்க வேண்டாம். எல்லாம் இறைவன் திருவருள்படி நடக்கும். எனவே மாலைகளை ஆண்டவனுக்கு அணியுங்கள். என் பொருட்டு இத்தனை ஆர்வத்தோடு கூடிய அனைவருக்கும் நன்றி. அமைதியாகக் கலைந்து செல்க” என்று கேட்டுக்கொண்டார்.

விடுதலை ஆனதும் தேவர் முக்கிய தலைவர்களுடன் புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவில், பிரஹதாம்பாள் கோயில், ஐயனார் கோவில் முதலிய ஆலயங்களில் வழிபட்ட பிறகு, இரவு 8 மணிக்கு ஆடுதுறைக்குப் புறப்பட்டார். அங்கு தேவரின் குடும்ப குருநாதரான ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள் சமாதியில் அஞ்சலி செலுத்தி வணங்கினார். ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள், தேவர் விடுதலை ஆவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை சிறைக்கு வந்து தேவரைப் பார்த்தார். அப்போது தேவர் சுவாமிகளைப் பார்த்து, “சுவாமி உங்களைப் போன்ற மகான்களின் பாதம் சிறையிலே படலாமா?” என்று கேட்டார்.அதற்கு சுவாமிகள், “உங்களைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். நீங்கள் விடுதலை ஆவிர்கள். ஆனால், அப்போது நான் இருக்க மாட்டேன். அதனால் தான் இப்போது வந்தேன்” என்று கூறினார். அதுபோலவே தேவர் விடுதலை ஆனபோது சுவாமிகள் சமாதியாகி விட்டார். அதனால்தான் விடுதலை ஆனதும் ஆடுதுறைக்குப் போய் சுவாமிகளின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார் தேவர். ஆடுதுறையிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட தேவருக்குப் பிரம்மாண்டமான வரவேற்புக் கொடுக்கப்பட்டது.

பிறகு, ஜனவரி 23ம் நாள் நேதாஜி பிறந்த தினத்தன்று, சென்னையில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டார் தேவர். அன்று மதுரையில் பார்வர்ட் பிளாக் கட்சியினரும், ஜனநாயகக் காங்கிரஸ் கட்சியினரும் ஏற்பாடு செய்திருந்த நேதாஜி பிறந்த நாள் கூட்டத்தில் தேவர் கலந்து கொண்டு பேசினார். அரசியல் விரோதத்திற்காகத் தன்மீது போடப்பட்ட கொலை வழக்கு பற்றியும், தனது செல்வாக்கை அழிக்க, தன்னைப் பின்பற்றும் மக்கள் மீது ஏவி விடப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்தும், கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டிற்க நீதி விசாரணை வேண்டுமென்றும் வலியுறுத்திப் பேசினார். எல்லா இடங்களிலும் எழுச்சி மிக்க வரவேற்பைப் பெற்ற வண்ணம் தமிழகம் முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல லட்சம் மக்களைச் சந்தித்தார் தேவர். 8.2.1959 ஆம் நாள் சென்னையில் ஜனநாயக காங்கிரஸ் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேவர், காங்கிரஸ் கட்சியின் அலங்கோல ஆட்சியைப் பற்றியும், அதனால் மக்கள் படும் கஷ்டங்களைப் பற்றியும் விரிவாக எடுத்துப் பேசினார். சென்னைப் பொதுக்கூட்டத்தில் பேசி முடித்ததும், சென்னையில் சில தினங்கள் தங்கி விட்டு பாராளுமன்றத்தில் பேசவதற்காகத் தேவர் டில்லி சென்றார். 1957ல் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேவர், முதுகுளத்தூர் கலவரம், பின்னர் கைது என்று சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் பாராளுமன்றத்தில் பேச வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. 1959 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ராஷ்டிரபதி உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு தேவர் 17.2.1959ல் பேசினார். ஆளும் அரசின் போக்கு பற்றியும், வெளிநாட்டுப் பிரச்சினைகள் குறித்தும், மக்கள் வாழ்நிலை குறித்தும் தேவர் விரிவாகப் பேசினார்.இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் 18.2.59ம் தேதி டெல்லி பதிப்பு தேவரின் உரை பற்றி எழுதியதாவது. “பாராளுமன்றத்தில் அன்று கடைசிப் பேச்சாளரான தேவர், தமது தீவிர மிக்க பேச்சின் மூலம் சபையின் முழுக்கவனத்தையும் தம்பால் குவிய வைத்து விட்டார் தேவரின் வெண்கலக்குரல் பாராளுமன்றத்தை ஈர்த்தது”

அறிவுசார் தமிழர்கள், தேவர் சொன்ன மேற்கூறியவற்றை புரிந்து கொள்வர் என்பது எம் எண்ணம்.அதை தவிர்த்து வேறு ஜாதி காழ்ப்புணர்வோடு சில புண்ணாக்குகள் சமூக துவேசத்தை எழுப்பினால், அது அவர்களின் முட்டாள்தனத்தை, தான்தோன்றித் தனத்தை, ஜாதி துவேசத்தை முன்னிறுத்த மட்டுமே என்பதையும் நம்மவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் .

தமிழனாக உலகின் மிகப் பெரிய காரியங்களை, அறிவு சார் ஊற்றுக்களை, இலக்கியங்களை,சமூக ஒழுங்கை, வளமையான தேசத்தை, உலகம் கொள்ளையடிக்க ஆசைப்பட்ட பெற்றிருந்த நாம்
இப்படி *ஜாதி அடிப்படையில் பிரிந்து சண்டை இட அந்த ஆங்கிலேயனும், பிற்கால காங்கிரஸ்காரனும், பகுத்தறிவு போர்வையில் இருந்த குள்ளநரி கூட்டங்களும் தான் காரணம்* . எல்லோரும் இம்மண்ணின் மைந்தர் என்ற முறையில் கிடைக்கும் வாய்ப்புகளையும் வசதிகளையும் நம் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவோம், துவேசத்திற்கும் கனவாய்ப்போன கடந்த காலத்திற்காகவும் அல்ல. வாழ்க வளமுடன்!!!