Friday 19 August 2011

குள்ளநரிக் கூட்டம் ரத்தம் குடிக்க ...

வரலாற்றில் அடிக்கடி ஏற்படும் சலசலப்பு தான் நம்மவர்கள் இங்கே சொன்ன குற்றசாட்டுகள் எல்லாம்.

முதன் முதலில் ஆங்கிலேயர் காலத்தில் தான் சாதிச்சங்கங்கள் திறம் பட ஆரம்பிக்கப் பட்டு பிரித்தாளும் கொள்கை மூலம் குள்ளநரிக் கூட்டம் ரத்தம் குடிக்க ஆரம்பித்தது. மண்ணின் மைந்தர்களாக, பூலித்தேவன் படையில் ஒண்டி வீரனாக, வென்னிக்காலாடியாக, கட்டபொம்மனின் படையில் வெள்ளையத்தேவனாக, சுந்தரலிங்கமாக பொதுஎதிரியை சாதி பாரமால் எதிர்த்த இந்த மண்ணின் கூட்டம் இன்று சில படித்த முட்டாள்களால் மறுபடியும் துண்டாடப்படுகிறது.

பசும்பொன் ஐயா திரு. உ.முத்துராமலிங்க தேவர் அவர்கள் ஒரு தேசிய தலைவர். ஆன்மீகத்தையும் அரசியலையும் திறம்பட கையாண்டு இரண்டிலும் வெற்றி பெற்ற மாமனிதர். அவ்வையார் சொன்னது போன்ற குற்றம் குறை இல்லா சீர்தமிழர். அரசியல், ஆன்மீகம், தமிழர் பண்பாடு, விஞ்ஞானம், செழிப்பிலும் எளிமை, வீரத்திலும் அடக்கம், எவனுக்கும் அஞ்சாத சிங்கநிகர் குணம், எளியவர்களை மதிக்கும் மனிதத் தன்மை என பல்வேறு குணாதிசயங்களோடு விளங்கிய தீரம் மிக்க தமிழ் மைந்தர் நமது தேவர் திருமகனார்.

http://www.youtube.com/watch?v=PW1AWRfdPew

எத்தனையோ கோடி தமிழர்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும், எல்லோருக்கும் இல்லாத சிறப்பாக முருகன் போல், கருப்பு போல், அய்யனார் போல், ஐயப்பன் போல் உணர்ச்சியோடு, உள்ளார்ந்த ஆன்மீக பலத்தோடு ஒரு அரசியல்வாதிக்கு இவ்வளவு லட்சம் பேர்களால் அஞ்சலி செலுத்தப்படுவது இன்று தேவர் திருமகனாருக்கு மட்டுமே.

ஒரு அருமை தமிழ் மைந்தனை சிறுமை புத்தியோடு குற்றம் சாட்டும் சிறு மதியாளர்கள் கூட்டம் தானாய் அழியும். நல்லவை பேசி நல்லவை வளர்த்து சமுதாயத்திற்கு நல்லது செய்வோர் பணி என்றும் சிறக்கும். அவர் தம் பெருமை எவர் எதிர்த்தாலும் மென்மேலும் கூடும்.

இன்றும் பொருளாதரத்தில் நலிந்த அய்யரும் உண்டு, அய்யங்காரும் உண்டு, ஏன் எல்லா சாதியிலும் தினக்கூலிகள் உண்டு. ஒட்டு மொத்த சமுதாய நலனை முன்னெடுக்காமல், ஆராய்ச்சி அறிவு குன்றிய படிப்பு கொண்ட, சுயநலம் பெருகிய கலி காலத்தில், உழைப்பு குறைந்து, கண்டுபிடிப்புகள் குன்றி, படித்த கூட்டம் மொத்தமும் அடிமையாய் மாறிப் போன ஒரு பேதையர் தமிழ் சமுதாயமான் இன்றைய சமூகத்தில் இது போல் சில கோடாரிக்காம்புகள் இருந்து கொண்டு தான் இருப்பார். பொய்யும் புனைசுருட்டுமாய் இருப்பார். அவரெல்லாம் தானாகவோ அல்லது அடிபட்டோ திருந்துவர்.

முருக பக்தராய், தன்னை முதன்முதலில் விவேகானந்தர் சொற்பொழிவிற்கு அழைத்த செட்டியாரை (தனது சமுதாயம் அதிகம் இருக்கும் தொகுதியில்) நிறுத்தி வெற்றி பெறச்செய்த, குமாரசாமி ராசாவுக்கு தலைமையின் வேண்டுகோளுக்காக பதவியை துச்சமாக எண்ணி விட்டுக் கொடுத்த, திருப்பரங்குன்றத்தில் ராஜாஜியை காந்தியின் ஆதரவுக் கடிதம் கொடுத்தும், இந்திய தேசிய படையையும் நேதாஜியையும் தரக்குறைவாக பேசியவர் என்ற காரணத்தால், குலக்கல்வியை முன்மொழிந்தவர் என்ற குறைபாட்டால், அவருக்கெதிராக காமராஜரை (எவ்வித படை பலமோ, பண பலமோ, ஆட்பலமோ இல்லாதவரை) நிப்பாட்டி அவரை தலைவராக ஆக்கியவர் நமது தேவர் திருமகனார். திரு வல்லத்தரசு அவர்கள் தேவர் திருமகனிடம் "ஒன்று நீங்கள் நில்லுங்கள், அல்லது நமது சமூகத்தில் ஒருவரை தலைவராக நிப்பாட்டுங்கள், ஏன் காமராஜரை நிப்பாட்டவேண்டும்?" என்று கேட்கும் போது "இது கொள்கை சண்டை, சாதிக்கு இடமேது" என்று சொல்லி காமராஜை தலைவராக ஆக்கி அழகுபார்த்தவர் நமது தேவர் திருமகனார் அவர்கள்.
http://picasaweb.google.com/sholagapandian/DQPbJK#slideshow/5551406829025647490

பாரத நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டு, தமிழகத்தில் மட்டும் ஒரு கட்சி (பார்வர்ட் பிளாக்) தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறதே, நேருவின் காங்கிரஸ்-பார்வர்ட் பிளாக் (எதிர்க்கட்சி) இணைப்புக்கு எதிராக ஒருவர் இருக்கிறாரே, தொடர்ந்து காங்கிரசின் கள்ள நோட்டு புழக்கத்தை, கள்ள-மார்க்கெட் வணிகத்தை, தேர்தல் பணப்பட்டுவாடாவை, உலக அரசியலில் இந்தியாவின் தடுமாற்ற கொள்கைகளை ஒருவர் எவ்வித தங்கு தடையும் இல்லாமல் வீரியமாக மக்களுக்கு புரியுமாறு பேசி, ஆளும் கட்சிக்கு ஆட்டத்தை கொடுக்கிறாரே என்று திட்டம் போட்டு "முதுகுளத்தூரில்" மட்டும் கலவரத்தை ஏற்படுத்தி, ஆயுதம் கொடுத்து, மறவர்களை, சேர்வாரை, அவர்களுக்கு துணையாயிருந்த ஒரு பள்ளரை சுட்டுக் கொன்ற கொடுமை நடந்தேறியது தமிழ் மண்ணில். மக்கள் கட்சி மக்களை சுட்டுக் கொன்ற ஒரு கொடுமை நடந்தது நம் சேது பூமியில்.

பச்சை தமிழரும் கடைசி களத்தில் இதற்கு பதிலாக, ஒரு மாணவனிடம் தோற்றார், தான் உருவாக்கிய இந்திரா காந்தியால் ஒதுக்கப்பட்டார், செல்வாக்கும் குறைந்தது, ஜனதா தளம் ஆரம்பித்து அதிலும் தோல்வி என கடைசி காலத்தில் பல்வேறு இன்னல்களை அனுபவத்து தான் பெருந்தலைவர் செய்த தவறுக்கு அவருக்கு கிடைத்த பரிசு. காங்கிரசும் அதன் பெருமையும் குலைந்து போய் இன்று வரை எழமுடியாமல் தவிக்கிறது. அதை பயன்படுத்தி அண்ணா அவர்களும் பசும்பொன் நினைவிடம் சென்று "சிங்கம் போல் இருந்த தேவரை இன்று சவமாக கொடுத்திருக்கிறது இந்த காங்கிரஸ், அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம்' என்று வீரத்தமிழ் பேசி தி.மு.வையும், பிறகு அ.தி.மு.கவையும் தென்னகத்தில் வளர்வதற்கு வழிவகை செய்தார்.

பாரத் திருநாட்டில், உலக வரலாற்றில் ஒரு தலைவருக்கு இவ்வளவு மக்கள் கூடுவது தேவர் திருமகனாருக்கு மட்டும் தான். அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கன் அவர்களுக்கும் கூடுமாம். ஆனால் இவ்வளவு பேர் கிடையாது. இத ஒரு கின்னஸ் சாதனையாக மாற்றும் செயல்களும் நடந்து கொண்டு இருக்கும் வேளையில் இந்த நகைச்சுவை பித்தர்களை எண்ணி நகைக்காமல் இருக்க முடியவில்லை.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் - தமிழ் மறை.

வாழ்க தமிழ்!!!
வளர்க நன்மக்கள் புகழ்!!!
வெல்க மனிதம் என்றும்!!!

No comments:

Post a Comment