Tuesday 13 September 2011

இமானுவேல் சேகரனை கொன்றது யார்?

காந்திஜி அந்நிய துணி எதிர்ப்பை மக்களிடம் கொண்டுசென்ற அதே கால கட்டத்தில் அரிஜன மக்களை ஆலயத்திற்குள் அனுமதி மறுக்கும் உயர் சாதியினர் செயலை கண்டித்து, "அரிஜனங்கள் ஆலய பிரவேசம் செய்ய வேண்டும், அதற்கு தேச பக்தர்கள் வழிவிடவேண்டும்" என்று முழங்கினார். அதனால் இந்தியா முழுவதும் தேச பக்தர்கள் அரிஜன மக்களை ஆலயத்திற்கும் கொண்டு செல்லும் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

மதுரையில் தேசபக்தர் வைத்தியநாதையர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் அரிஜன மக்களை அழைத்துச் செல்ல எண்ணினார். இதனை அறிந்த சனாதனிகள் எதிர்க்க திட்டமிட்டனர். இந்த எதிப்பை சமாளிப்பதற்காக, வைத்தியநாத ஐயர், மதுரை எட்வர்டு ஹாலில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிற்கு திட்டமிட்டார். இந்த கூ
ட்டத்தில் கலந்து கொண்டிருந்த தேவரை இந்த போராட்டம் வெற்றி பெற ஒத்துழைக்க வேண்டினார். பசும்பொன் தேவரும் அதற்கு உறுதியளித்தார்.

இதை அறியாத சனாதனிகள், "மீனாட்சி கோவிலில் தரிசனங்களுடன் நுழைந்தால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும்" என்ற அச்சுறுத்தல் நோட்டிசை வெளியிட்டனர். இதற்கு பதிலாக தேவர், "ஸ்ரீ வைத்தியநாத ஐயர், மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் அரிஜனங்களை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைகிறபோது சனாதனிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ரவுடிகள் கழகம் விளைவிக்கப் போவதாக கேள்விப்படுகிறேன். ஹரிஜனங்களை பயங்கரமான ஆயுதங்களால் தாக்கி, அங்கயற்கண்ணி ஆலயத்தை ரத்தக்கறை படியச் செய்யப்போவதாக எல்லாம் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. சனாதனிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த ரவுடி கும்பலை எச்சரிக்கிறேன். வைத்தியநாத ஐயர் அரிஜனங்களை அழைத்து வருகிறபோது அடியேனும் வருவேன்.ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடிக் கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன்". என்றி துண்டு
ப் பிரசுரம் வெளியிட்டார்.

1939 ஜூலை 8 அன்று அரிஜன மக்களுடன் வைத்தியநாத ஐயர் சென்ற போது, அவருடன் பசும்பொன் தேவரும் சென்றார். ஆலய வாசலில் பசும்பொன் தேவரின் பற்றாளர்கள் எதற்கும் தயார் நிலையில் நின்றார்கள். ஆனால் எதிர்ப்பு தெரிவித்த சனாதனிகளும், அவர்களுடைய ரவுடிகளும் அந்த திசைப்பக்கமே தலை காட்டாமல் தப்பித்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்த அரிஜனங்கள் அங்கயற்கண்ணி மீனாட்சி தொழுது மகிழ்ந்தனர். இந்நிகழ்வின் மூலமே தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக சிங்கமே வந்துவிட்டது என்பதை எதிரிகள் உணர்ந்து கொண்டார்கள்.


1954 மார்ச் மாத்தில், அன்று "சென்னை ராஜதானி" என்று அழைக்கப்பட்ட தமிழக சட்ட மன்றத்தில், " அரிஜன முன்னேற்றம்" பற்றிய விவாதம் நடந்தி. அந்த விவாதத்தில் கலந்து கொண்டு மார்ச் 24 அன்று தேவர் பேசியது கவன
த்தில் கொள்ளத்தக்கது ஆகும். அந்த உரையில்,

"ஆதி காலத்தில் தொழிலின் பேரால் ஜாதி வகுக்கப்பட்டது எனபது தான் தமிழ்ச் சான்றுகளும், சாஸ்திரங்களும் கூறுகின்ற உண்மை. அதற்கு உதாரணம் ஆண்களை அழைக்கின்ற காலத்தில் ஒரே பெயர் பலருக்கு இருக்கிறது என்பதன் காரமமாக, ஒரே பெயருடைய பலரை கூப்பிடும் பொழுது 'இன்ன தேவர்', ' இன்ன செட்டியார்', 'இன்ன ஐயர்' என்று பெயர் வாய்த்த தமிழ் பெரியோர்கள், பெண்களை அழைக்கும் போ
து அந்த பெயரின் கடைசியில் வால் வைத்து கூப்பிடாமல், அதாவது, 'இன்ன பிராமனத்தி', 'இன்ன செட்டிச்சி' என்று கூப்பிடாமல், அனைவரையும், 'இந்த அம்மாள்', 'அந்த அம்மாள்' என்று கூப்பிடுவதுதான் பழக்கமாக இருந்து வருகிறது. இது நீண்ட காலமாக இந்த நாட்டில் அனுஷ்டித்து வருகிற சித்தாந்தமாகும். அப்படி இருக்கும் போது ஆண்களுக்கு மாத்திரம் தொழிலின் பெயரை பின்னால் வைத்து அழைத்து, ஒரே பெயருடைய பல நபர்கள் தொழிலின் பெயரால் வித்தியாசப்படும் பொருட்டு செய்த சகாயமாகும்'. என்றும் மனிதனில் ஏற்ற தாழ்வுகள் இல்லை என்று குறிப்பிட்டு விட்டு, பின்வரும் உதாரணத்தையும் சொல்கிறார்; அடியேனுடைய உடம்பில் இரண்டு கைகள் இருக்கிறது.

ஒன்று வலது கரம்; இது உண்ணவும், என்னுடைய எண்ணத்தை எழுத்து மூலமாக வெளிப்படுததவும் பயன்படுகிறது. இன்னொன்று இடது கரம், உடம்பிலிருந்து வெளிவரும் அசுத்தங்களை அப்புறப்படுத்தி, உடம்பை தூய்மையாக வைத்துக்கொள்ள பயன்படுகிறது.


னால், இறைவனையோ, பெரியவர்களையோ வணங்குகிறபோது, இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்துதான் வணங்க வேண்டும். இதுபோல அனைத்து சமுதாய மக்களும் இரண்டு கைகள் போல இணைந்தால் தான் சமுதாயத்தில் மக்கள் அனைவரும் செம்மையாக வாழ்த்திட முடியும்."

1962 ல் பொதுத் தேர்தல் வந்தது. 14.01.1962 ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் தேவரும் இராஜாஜியும் ஒரே மேடையில் தோன்றினார்கள். "நீண்ட நாட்களாகிவிட்டன அடியேன் உங்களின் ஒருமிப்பு சக்தியில் நின்று பேசி" என்று தனது உறைய ஆரம்பித்த தேவரின் பேச்சில் உதிர்ந்த முத்துக்கள் பின்வருமாறு.


பதவியை நான் நினைத்தவனுமல்ல; அப்படி நினைத்திருந்தால் அது என்னை பொருத்தவரையில் மிக எளிது.


தேசத்திடம் பலனை எதிர் பார்க்கும் கூட்டத்தை சேர்ந்தவனில்லை நான். தேசத்திற்கு இயன்றவரை கொடுத்து சேவை செய்யும் கூட்டத்தைச் சேர்த்தவன் நான்.


நான் யாரையும் எவரையும் எதிரியாக கருதுபவனும் அல்ல. தவறுகளை கண்டிக்கிற என்னை யாரேனும் எதிரியாக பாவித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.


நான் பேசுவது, எழுவது சிந்திப்பது சேவை செய்வது எல்லாமே தேசத்திற்காகவேயன்றி எனக்காக அல்ல.


நியாயத்திற்காக எதிர் நீச்சல் அடிப்பதால் காங்கிரசஸ்காரர்களின் எதிர்ப்பிற்கு நான் ஆளாகி இருக்கிறேன்.


18 ஆயிரம் ஓட்டுகளை மட்டும் கொண்ட என் வகுப்பினர் வாழும் தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டுக்களை வாங்கும் நான் எப்படி வகுப்புவாதியாக இருக்கமுடியும்.


தம்மிடம் உள்ள வகுப்பு வாதத்தை மறைக்க பிறரை வகுப்புவாதி என்று கூறுவோரை மக்கள் தெரிந்து கொள்ளாமல் இல்லை.


எதிர்க்கட்சி என்பது ஜனநாயகத்தின் இரண்டு கண்களில் ஒன்று. இரு கண்களும் சம சக்தியோடு செயல்பட்டாலன்றி ஜனநாகயம் வலிமையோடு நடக்க முடியாது.


உங்கள் தலைவிதியை ஐந்து வருடங்களுக்கு ஒப்புவிக்கும் ஒரு கடமை அல்லவா ஓட்டுபோடுவது. காசுக்காக காத்திருக்காமல் அவரவர் வசதி, சக்திக்கு தக்கவாறு இரண்டோ மூன்றோ எடுத்துப்போய் செலவிட்டு ஓட்டுப்போடுங்கள். அதுதான் நல்ல மக்களுக்கு அடையாளம்.


மேற்கண்டவாறு மணிக்கணக்கில் தனது பேச்சாற்றலால், மக்களின் உளங்களை தன் பால் ஈர்த்த தேவர் அவைகளின் கடைசி பேசும் அதுவே. ஆம் அதன் பின்னர் அந்த மனிதருள் மாணிக்கம் விண்ணகம் செல்லும் வரை எங்கும் பேசவில்லை.


பசும்பொன் தேவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதும், அவருக்கு வாரிசு இல்லை என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் எழுதி வைத்த இனாம் சாசனம் பற்றி எத்தனை பேர் அறிவர்?


1960 ல் புளிச்சிகுளத்தில் தனக்கு சொந்தமான எஸ்டேட்டில் தங்கி இருந்த தேவர், திருச்சுழி பதிவாளரை, தம் இருப்பிடத்திற்கு அழைத்து ஓர் இனாம் சாசனத்தை பதிவு செய்தார். அதில் தன்னுடைய சொத்துக்களை 17 பங்காகப் பிரித்து அவற்றில் ஒரு பாகத்தை தனக்கு வைத்துக்க் கொண்டு மீதி 16 பங்கை 16 பேருக்கு எழுதி வைத்தார்.அதில் பசும்பொன்னை சேர்ந்த அரிஜன வகுப்பில் பிறந்த வீரன், சந்நியாசி, என்ற இருவருக்கும் இரண்டு பாகங்களை ஒதுக்கி பசும்பொன் தேவர் பத்திரப் பதிவு செய்தார். ஆம்! தன்னுடைய சொத்துக்களை அனு
விக்கும் உரிமையில் இரண்டு அரிசனங்களுக்கும் எழுதி வைத்த பெருந்தகையார் பசும்பொன் தேவர்.

பல தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், தேவர் திருமகனாரின் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி இருந்து தங்களது கல்வி உணவு உடை தேவைகளை சிறப்பாக பெற்றிருக்கிறார்கள். தேவர் திருமகனாரின் வீட்டின் சமையல் கூடத்தில் அவருக்கு உணவு படைத்ததவரும் ஒரு தாழ்த்தப்பட்டவரே.  அந்த அளவிற்கு தேவர் திருமகனார் ஏழை எளிய மக்களை நேசித்தவர். தீண்டாமை என்பது நாம் செய்யும் பாவம் என்ற மகாத்மா காந்தியடிகளின் சொல்லுக்கு ஏற்ப, நான் தமிழன், நான் இந்தியன் என்று முழக்கமிட்டவர் தேவர்.


பசும்பொன் தேவர் அரிஜனகள் மீது கொண்டிருந்த அன்பை, அதுவும் பசும்பொன் தேவரை எதிர்த்து அரசியல் நடத்திய காங்கிரஸ் கட்சியில் இருந்த அதுவும் நாடாளுமன்ற உறுப்பினராய் இருந்த ஒருவர் சொல்லுவதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.


1952 ல் பசும்பொன் தேவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது ஆர்.எஸ். ஆறுமுகம் சட்டமன்ற உறுபினராக இருந்தார். 1957 ல் நடந்த தேர்தலின் போது நாடாளுமன்ற இரட்டை தொகுதிக்கு பொதுத் தொகுதியில் பசும்பொன் தேவர் போட்டியிட்டார். தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியில் தேவர் தம் கட்சின் சார்பில் ஒருவரை நிறுத்தினார். பசும்பொன் தேவரை எதிர்த்தும், தாழ்த்தப்பட்டோருக்கான பசும்பொன் தேவரின் வேட்பாளரை எதிர்த்தும், காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தியது. அப்படி தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியில் பசும்பொன் தேவரின் வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் கட்ச்யின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் ஆர்.எஸ். ஆறுமுகம். இந்த ஆறுமுகம் சொல்கிறார்; முதுகுளத்தூரை அடுத்துள்ள தெற்கு காக்கூரில் தேவர் பேசிக்கொண்டு இருந்த போது ஒருவர் வந்து ஒரு துண்டு சீட்டை கொடுத்தார். அதை தேவர் பார்த்துவிட்டு பையில் போட்டுக்கொண்டார்.


மற்றொருவர் இன்னொரு சீட்டைக் கொடுத்தார். படித்துவிட்டு கையில் வைத்துக் கொண்டே பேசினார். கூட்டம் முடியும் நேரத்தில் ஒருவர் எழுந்து, ஆர்.எஸ். ஆறுமுகத்தைப் பற்றி பேசுங்கள் என்றார். தேவர் நிதானமாகக் கூறினார்; 'என்னிடம் கொடுக்கப்பட்ட இரண்டு சீட்டுகளிலும் ஆர்,எஸ் ஆறுமுகத்தை பற்றி பேசுங்கள் என்று தான் இருந்தது. நீங்கள் வற்புறுத்துவதால் நான் அவரைப்பற்றி கூறுகிறேன். நான் ஆர்.எஸ் ஆறுமுகத்தை நன்கு அறிவேன். ஆர்.எஸ் என்றே அவரை அழைப்பேன். அவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்.  நல்லவர்.  நல்ல பண்பாளர். சிறந்த நண்பர். நமது குடும்பர் இனத்தை சேர்ந்தவர். எனது சகோதரனை போன்றவர்' என்று கூறிவிட்டு தனது பேச்சை முடித்துவிட்டு போய்விட்டார். அதுவும் அரிஜன மக்கள் அவரை சூழ்ந்து நின்று கொண்டனர். நான் அவ்வூர் போவதாக திட்டமிட்டு இருந்தேன். அவ்வூர் மக்கள் எனக்காக மாலைகள் வாங்கி வைத்து இருந்தனர். அவற்றை எல்லாம் தேவருக்கே அணிந்து மகிழ்ந்தனர்.


சிறிதுநேரம் கழித்து நான் போனேன். நடந்ததை கூறினார்கள். எனக்கு போட மாலை இல்லையே என்று வருத்தப்பட்டார்கள். ' நீங்கள் வருத்தப்படவேண்டாம். எனக்காக வாங்கிவந்த மாலையை தேவருக்கு அணிவித்ததற்காக நான் ஆனந்தப்படுகிறேன். நான் எதிர் கட்சியிலிருந்தும் என்னை பற்றி அப்படிக் கூறிய அந்த மகானுக்கு மாலை அணிவித்ததே நமக்கு பெருமை' என நான் கூறிக்கொண்டிருந்த போதே, ஒரு தேவர் மாலையோடு ஓடிவந்தார். இது தேவருக்கு போட்ட மாலை. அவரிடமிருந்து தான் நான் வாங்கி வந்தேன். நீங்கள் வந்திருக்கிறீர்கள் . அகவே, உங்களுக்கு அதை சூடுகிறேன்' என்று சூதுவாது இல்லாமல் மாலை போட்டார். நானும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன்.


ஆம்! அரிஜன வகுப்பை சேர்த்த பசும்பொன் தேவரை எதிர்த்து அரசியல் நடத்திய ஆர்.எஸ். ஆறுமுகம் சொல்லிய இந்த நிகழ்விலிருந்து பசும்பொன் தேவரின் சாதி பேதமற்ற உள்ளதை அறியலாம்.


தேவர் திருமகனார் தனது பெயருக்கு ஏற்ற படி தேவர் இனத்திற்கு மட்டும் உரியவர் என்று நினைத்திருந்தனர் சிலர். ஆனால் தேவர் திருமகன் தமிழகத்தின் தங்கம், எல்ல இனத்திற்கும் பொதுவானவர் என்பதை பின்வரும் சம்பவம் விளக்கும்.

இராமநாதபுரத்தில் ஜாதிக்கலவரம் மூண்ட போது மதுரை திலகர் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தேவர் திருமகன் அவர்கள், ஜெயராம் செட்டியார், எம்.எல்.சி. அவர்கள் காரில் கிளம்பிய போது, மதுரை கோரிப்பளையத்தில் வைத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் ஓடிவந்து, நாடெங்கும் கலவரம் மூண்டுவிட்டது, இந்த நேரத்தில் உங்களை கைது செய்தால், விபரீத விளைவுகள் ஏற்படாதா? என்று கேட்டார். அப்போது தேவர், "இது அரசியல் சூழ்ச்சி, இதை புரிந்து கொள்ளாமல் யாரேனும் ஏழை அரிஜன மக்களை துன்புறுத்துவார்களேயானால், அவர்கள் என்னுடைய நெஞ்சைப் பிளந்து இரத்தத்தை குடிப்பதற்க்குச் சமமாகவே கருதுவேன். மேலும் எல்லோரும் அமைதி காக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டு காவல் துறை வேனில் ஏறினார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையின் கீழ் அகில பாரத பார்வர்டு ப்ளாக் கட்சியின் முன்னோடும் பிள்ளையாக விளங்கியவர். அந்த வகையில் அவர் ஒரு தேசியத் தலைவராகத் திகழ்ந்தார். தென் கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் பல்வேறு தொழில்களின் நிமித்தம் வசித்து வந்த தமிழர்கள் பலரும் தேசிய ஆவேசத்துடன் சுபாஷின் இந்திய தேசிய ராணுவத்தில் சேருவதற்குக் காரணமாக இருந்தவர் பசு
ம்பொன் தேவர். அந்த விதத்தில் கிழக்கு ஆசியத் தலைவர் என்கிற தகுதிக்கு உரியவரானவரும்கூட. அவர் மீது தலித்துகளின் விரோதி என்னும் பழியைச் சுமத்தி, இம்மானுவேல் என்கிற கிறிஸ்தவ தலித்தைக் கொலை செய்யத் தூண்டினார் எனக் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தது அன்றைக்கு காமராஜர் தலைமையில் இருந்த தமிழக அரசு. பசும்பொன் தேவர் தண்டனை பெறுவதற்கு ஏற்ப அரசால் வழக்கு ஜோடிக்கப்பட்டது மட்டுமின்றி, முதுகுளத்தூரில் கலவரத்தை அடக்கும் சாக்கில் பல தேவர்களைக் காவல் துறை நிற்கவைத்துச் சுட்டுக்கொன்ற நிகழ்ச்சியும் நடந்தது. தேவர் சமூகத்தின் மீது மிகக் கொடிய அடக்குமுறையும் செலுத்தப்பட்டது. தேவர் தலித் மக்களிடையே பகைமை தோற்றுவிக்கப்பட்டது!

இம்மானுவேல் கிறிஸ்தவச் சர்ச்சுகளால் தூண்டப்பட்டு ஹிந்து தலித்துகள் கிறிஸ்தவர்களாக மதம் மாறவேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கும் ஏவுகணையாகச் செயல்பட்டு, பலிகடாவானவர். பிற்காலத்தில் மீனாட்சிபுரம் இந்து தலித்துகள் முகமதியராக மாற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டதற்கு அது ஒரு முன்னுதாரணம்!


இதன் பின் விளைவாகத்தான் தென் கிழக்கு ஆசியத் தலைவர் என்கிற உயர் தகுதியில் இருந்த பசும்பொன் தேவர் காமராஜர் ஆட்சியால் ஒரு கொலை வழக்குக் குற்றவாளியாகச் சிறைவைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார். ஹிந்து தலித்துகளைத் தூண்டிவிட்டு சங்கடத்தில் ஆழ்த்திப் பிறகு அவர்களை ஒட்டுமொத்தமாகக் கிறிஸ்தவர்களாக மாற்றும் சதித் திட்டத்தை முறியடிக்க முற்பட்டதுதான் பசும்பொன் தேவர் செய்த மாபெரும்
செல்!

தேவர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையிலான ஜாதிக் கலவரமாக அது தடம் புரண்டு வருந்தத்தக்க விளைவுகளை உண்டாக்கிவிட்டது. இந்த அடிப்படை உண்மையை காமராஜர் அரசு சாமர்த்தியமாக மறைத்துவிட்டது. பசும்பொன் தேவர் தேவமாரின் ஜாதித் தலைவராகக் குறுக்கப்பட்டார்.


இவ்வளவுக்கும் காமராஜருக்கு முதல் முதலில் விருதுப்பட்டி என்கிற பிற்கால விருதுநகரின் நகராட்சித் தேர்தலில் நிற்பதற்கான தகுதியை ஏற்படுத்திக் கொடுத்தவரே பசும்பொன் தேவர்தான்! ஒரு ஆட்டை வாங்கி காமராஜர் பெயரில் அதற்காக நகராட்சிக்கு வரி செலுத்தி அப்படியொரு தகுதியை காமராஜர் பெறச் செய்தார், பசும்பொன் தேவர்.


பிற்காலத்தில் காமராஜர் மாநில முதல்வர் பதவியில் அமரும் அளவுக்கு உயர்ந்துவிட்ட நிலையில் பசு
ம்பொன் தேவர் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த நிகழ்ச்சியை மிகவும் அலட்சியமான தொனியில் பகிரங்கப்படுத்தியதைக் காமராஜரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பதிலுக்குப் பசும்பொன் தேவரை வீழ்ச்சியடையச் செய்வதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்; இம்மானுவேல் கொல்ப்பட்டது அவருக்கு வசதியாகப் போயிற்று!

ஒரு தாழ்த்தப்பட்ட அன்பரின் ஐயா பற்றிய காணொளி:

http://www.youtube.com/watch?v=dFLMkY0FLVU

ஆமாம்... இமானுவேல் சேகரனை கொன்றது யார்?


செட்டியார் இனத்தை சேர்ந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட காரணத்தால், அப்பெண்ணின் உறவினர்களின் தூண்டுதலின் பெயரால் மறவர்களால் கொ
ல்ப்பட்டவர்தான் இந்த இமானுவேல்... ஒரு கும்பக்கார பெண்ணிடம் (கரகாட்டம் ஆடுபவர்) தொடுப்பு வைத்திருந்ததாகவும் அதனால் வீட்டில் ஏற்பட்ட பிரச்னைக்காகவும் இம்மானுவேல் சேகரனின் மனைவியே பரமக்குடி காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக புகார் கொடுத்து இருந்திருக்கின்றார். காவல்நிலையப் புகார் ஆவணமாக உள்ளது. உண்மை வரலாற்றை அவர்கள் ஊர் பக்கம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

மேலும் அங்கே இருந்த பிராமிணர் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு அதற்கான தொகை தராமல் தகராறு செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்ததும் பலருக்கு தெரிந்திருக்கின்றது. அவரது அண்ணன் துரைசாமி என்பவர் இமானுவேலுக்கு புகைப்படமே இல்லை, இப்பொழுது இருப்பது வரைந்த படமே என்கிறார். இராணுவத்தில் சேர்ந்திருக்கின்றாரே அந்த புகைப்படம் இருக்குமே என்று நாம் நமக்குள் மட்டுமே கேள்வி கேட்டுக்கொள்ள முடிகிறது. சிலர் அவர் இராணுவத்தில் ஒழுங்கு நட
டிக்கை எடுக்கப்பட்டு வெளியில் வந்தவர் என்றும் உரைக்க கேட்கின்றோம். ஐம்பது ஆண்டுகள் கடந்து திடீரென்று நினைவு நாள் கொண்டாடப்படும் அரசியலும், புது புது வரலாற்று ஆக்கங்களும், அவற்றிற்கு மத சமூக அடையாளங்கள் அடிப்படையில் ஆதரித்து வரவேற்பதும் நமக்கு புரியாமல் இல்லை.

ஆக மொத்தத்தில் காமராஜ் நாடார் விதைத்த காங்கிரஸ்-பார்வர்ட் பிளாக் கட்சி மோதல், மறவர்-பள்ளர் சண்டை என பெயர் சூட்டப்பட்டு சாதி சண்டையாக உருவெடுத்து இன்று தேவர்-தலித் சண்டையாக வளர்ந்து நிற்கிறது. ஒரே மண்ணில் அதுவும் வானம் பார்த்த பூமியில் இன்றும் உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து இருக்கின்ற இரு சமூகங்களின் வாழ்வு திசை மாறி, தொழிற்சாலைகள் எதுவும் இன்றி, கருவேல் மரம் வெட்டி பிழைப்பு நடத்தும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அருகில் உள்ள விருதுநகரும், தூத்துக்குடியும் எப்படி எதனால் முன்னேறியதோ ஆனால் முகவை மாவட்டத்தில் எந்த தொழிலும் அரசால் முன்னெடுக்கப்படவில்லை என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை. சில பல அரசு வேலைகளும், வெளிநாட்டுப் பயணங்களும் இவர்களுக்கு இன்று சாத்தியப்பட்டிருக்கின்றது. ஆனால் ஒற்றுமையைத் தான் காணோம்.


சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவரிடம் ஒரு புகைப்படம் கூட இல்லை என்பது தான் உண்மை. அவரது அண்ணன் துரைச்சாமி என்பவர் தான் "அவனுக்கு ஒரு போட்டோ கூட கிடையாது, இப்போது இருப்பதெல்லாம் அனுமானத்தில் வரைந்தது தான்" என்று கூறியிருக்கின்றார்.  ஒரு புகைப்படம் கூட இல்லாத சமீபத்தில் வாழ்ந்த ஒருவரை தேசியத் தலைவர் என்றும், இராணுவத்தில் பணியாற்றியவர் என்றும், மக்களுக்காக போராடி சிறை சென்றவர் என்றும், பலமுறை போராட்டங்கள் நடத்தியவர் என்றும் கதை கட்டுவதை, புத்தகம் வெளியிடுவது, குருபூஜை கொண்டாடுவது, சமுதாய விடிவெள்ளி என்றழைப்பது, போராளி என்று பரப்புரை செய்வது, தேவர் ஐயாவின் அடைமொழிகளை இவருக்கு சூடி எதிர்ப்பு நிலைப்பாடு எடுப்பது போன்றவற்றை  அறிவிற் சிறந்த சான்றோர் எங்ஙனம் எடுத்துக் கொள்வர் என்பதும் நமக்கு புரியாமல் இல்லை.  அரசியல் சூழ்ச்சிக்கு பலியான முகவை மக்கள் இன்று வரை அதற்கு பலியாடாய் பலியாவதற்கு தற்போது நடந்துள்ள பரமக்குடி கலவரம் ஒரு கொடூரமான எடுத்துக்காட்டு.  வரலாற்றில் சுவடு இல்லை என்பதற்காக உழைக்கும் மக்கள் இப்படி துவேசத்தால் தூண்டப்பட்டு தவறான பாதையில் செல்வது சமூகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கவே காரணமாகும் என்பதில் ஐயமில்லை.


இம்மண்ணின் மைந்தர் என்ற முறையில், மக்களாட்சி அடிப்படையில், ஒட்டு மொத்த நாட்டு முன்னேற்ற அடிப்படையில் எல்லோரும் முன்னேறுவோம்; உண்மை உணர்வோம்; சமூக துவேசம் தவிர்ப்போம்; பிறந்த பொன்னாடும், தகைமைசால்  தாய்மொழியும், சமூக அமைதியையும் காப்போம்!


வாழ்க வளமுடன்!

16 comments:

  1. பசும்பொன் அய்யா தலித்தை கோவிலுக்குள் விட சொன்னாரில்லையா, முதலில் அதை உங்களின் கிராமத்தில் இருந்து தொடங்குங்கள். அடுத்தவன் முதுகை சுரண்டுவதை விடுத்து நீங்கள் முன்னோடியாக தொடங்கி வையுங்கள்.

    ReplyDelete
  2. No matter whether it s urs, or his, it reveals an uncouth mindset. The mind has already set with the thinking that one hand is meant for dirty work only. If it refers to society, the left hand meant for doing dirty jobs is dalits, correct?

    So, u r endorsing varnashradharam which states that certain ppl meant for certain occupations only. Although ppl do different occupations, if they do their assigned occupations, it is dharma that wd please god. So, dalits who shd do their occupations of carrying filth and squalor, the excreta of other human beings, wd please ur god if they do it well - exact words used by Modi.

    So, u say, or ur iconic late leader has said, in a nutshell, the Hindu social segregation of ppl occupation-wise.

    Ur late iconic leader had that coz v can assuage ourselves saying he was from old generations that had long since gone to graves. What abt u? U r very much living now but clinging to the old theory of segregation ?

    Am I correct?

    ReplyDelete
  3. There r so many mges from me. But the rest will follow only on seeing how u receive my mges.

    I am writing in English as I suppose u r receptive to Eng.

    ReplyDelete
  4. திரு குடுகுடுப்பை அவர்களுக்கு,

    உங்களைப் போல் மக்களாட்சி மன்னர்களுக்கு உலகம் முழுமையும் இருந்த நிலஉடமை சமூகமும், அதன் படிநிலைகளும் தெரியாமல் இருக்காது. இன்றும் அது உலகமயமாக்கல் என்ற பெயரில் தொடரும் உலக அரசியலும் புரியாமல் இருக்காது. நல்லதும் அல்லதும் தான் உலகம். நல்ல செயல்கள் தான் முக்கியம் நீங்கள் மேற்சொன்ன வாக்கியம் போல.

    "ஏன் ஒழிக என்று சொல்ல வேண்டும், நல்லவற்றை வாழ்க என்று சொன்னால் அல்லது அதுவாகவே ஒளிந்து தானே போகும்" என்றவர் பசும்பொன் ஐயா.
    "யாரும் எனக்கு எதிரி அல்ல, குற்றங்களை எதிர்க்கும் பொது என்னை எதிரியாக எண்ணிக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல" என்றவர்.

    உங்களின் மனம் திறந்த விமர்சனத்திற்கு நன்றி

    ReplyDelete
  5. திரு காவ்யா அவர்களுக்கு,

    You didn't posted so many messages here & its only two. For your root-heart question the above said explanations may suits. Thanks for your visits and comments.

    ReplyDelete
  6. FYI.

    முதுகுளத்தூரில் காமராஜ் நாடாரால் நடத்தப்பட்ட அரசியல் வெறியாட்டத்தை தவிர வேறு ஏதனும் ஆதாரம் திருவாளருக்கு தெரியுமா? தெரிந்தால் சொல்லவும் ஆதாரத்தோடு.

    தபால் தலை, எந்த தாயுள்ள கொண்ட, தமிழர்களை காத்த, கொலைநிதியால், கருணாகாரரால் அடிக்கப்பட்டது, எதற்காக, எந்த அடிப்படையில் என்பது பெரும்பாலோருக்கு தெரியும். இம்மானுவேலை பற்றிய நூல் முப்பது பக்க நூலாக திரு.வடிவேல் இராவணன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல் பத்து பக்கம் முகவை மாவட்டத்தின் விளக்கங்கள். கடைசி பத்து பக்கம் முதுகுளத்தூர் கலவர நிலைப்பாடுகள். இடை பத்து பக்கங்களில் வெறும் மூன்று பக்கங்கள் மட்டுமே இம்மானுவேலினை பற்றிய குறிப்புகள். அதிலும் அங்கு சென்றார், இங்கு சென்றார், கூட்டம் நடத்தினார் என்று வெறுமனே கொடுக்கப்பட்டுள்ளது. எந்த நாள், எந்த இடம், மொத்தம் கூடியோர் எத்தனை நபர்கள், உடன் கலந்து கொண்டது யார், பேசியது என்ன என்ற எந்தத் தகவலும் அதில் இல்லை. நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் வெறுமனே இருந்துவிட்டு திடீரென்று பரமக்குடி இருப்புப் பாதைக்கு அருகில் குறுகிய அளவு கொண்ட கல்லறைகள் கொண்ட பகுதியில் ஒரு பரப்பை ஆக்கிரமித்து அதில் பலரின் உடல்கள் புகைக்கப்பட்ட இடத்தின் மேல் சதுர கல்லறை கட்டி அதில் விழா நடத்தும் சிலரின் அவசரமும், அரசியலும், வரலாற்று பிழை நடத்தும் பிழைப்புவதிகளையும் யாருக்கும் தெரியாமல் இல்லை, புரியாமலும் இல்லை.

    ///அம்பேத்கார் சிலை ஒவ்வொரு ஆண்டும் மற்றொரு தேசியத் தலைவர்னு இவங்களெ சொல்லிக் கொள்ளும் முத்துராமலிங்கம் குருபூசையின் போது சேதப்படுத்தப்படுகிறது.///
    தென்னாட்டில் இருக்கும் அம்பேத்கர் சிலைகளின் எண்ணிக்கையும் அதில் எந்தனை சேதப்படுத்தப் பட்டது என்ற தகவலையும் தயவு கூர்ந்து கூறினால் நீங்கள் கூறும் கருத்துக்கு பொருள் உண்டு. இல்லையென்றால் இது வெறும் குப்பை தான்.

    நல்லவற்றை பேசி நல்லவை செய்து முன்னேறப் பார்ப்பது மட்டுமே எல்லோருக்கும் நலம் பயக்கும், துவேசத்தையும், இப்படி கலவரத்தையும் செய்வதல்ல. காமாராசரின் அரசியல் பிழை இன்றும் தொடர்வது உண்மையில் வருத்தம் தருகிறது. இறந்து போன, பொறுப்பற்ற அரசியலுக்கு பலியாய் போன எம் மண்ணின் மக்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த வருந்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதிலும் எவனாவது வெட்டி கிண்டல் செய்தால் அவன் பிறப்பின் மூலம் அவ்வளவே என நினைத்துக் கொண்டு அவனுக்கு பதில் சொல்லாமல் இருக்க மட்டுமே என்னால் முடியும். வாழ்க வளமுடன்.


    மேலும் சில தகவல்களுக்கு:

    இமானுவேல் சேகரனை கொன்றது யார்?
    http://pasumponayya.blogspot.com/2011/09/blog-post.html

    - ///முத்துராமலிங்கம் குருபூசையின் போது சேதப்படுத்தப்படுகிறது///
    நான் கேட்டது தென் மாவட்டத்தில், அதுவும் பசும்பொன் தேவரின் குருபூஜையின் போது. நீங்கள் கொடுத்த கூகுல் தேடலில் இடம் பெற்றிருக்கின்ற மதுரையும், கடையமும் வெவ்வேறு கால கட்டத்தில் நடை பெற்றிருக்கிறது. பசும்பொன் ஐயாவின் குருபூஜை போது அல்ல. மேலும் வெறும்குப்பைகளை கிளற எனக்கு ஆர்வம் இல்லை.

    - நான் சொன்னது எனது இரங்கலை கேலி செய்யும் பித்தர்களைப் பற்றியது. புரிந்துகொள்ள முடியவில்லை போலும்..

    ///அதே போல் அவர் ஒரு சாதிய தலைவர் என்பதும் உண்மை. ///அரைகுறைகளை மட்டும் கேட்டு கேட்டு பக்குவம் மாறியிருக்கிறது.
    முழுமையானவற்றை தெளிவானவற்றை விட உண்மைகளை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதையும் படித்து விட்டு சொல்லுங்களேன். என்ன சொல்கிறீர்கள் என்று பார்ப்போம்.

    பசும்பொன் பெருமகனார் மீது காமராஜ் நாடாருக்கு வெறுப்பு தோன்றக் காரணம்
    http://pasumponayya.blogspot.com/2011/08/blog-post.html

    இமானுவேல் சேகரனை கொன்றது யார்?
    http://pasumponayya.blogspot.com/2011/09/blog-post.html
    https://plus.google.com/106792473859447310226/posts/bD5HvDumnbp

    இன்னொன்று

    பலருக்கும் தெரியாத பசும்பொன் தேவர் ஐயாவின் நீதிமன்ற விளக்க உரை
    http://pasumponayya.blogspot.com/2011/07/blog-post.html

    ReplyDelete
  7. Cont.....
    இரா.ச.இமலாதித்தன் நாகப்பட்டினம் - Govi Kannan அண்ணே, யாருக்கும் அறிவுரை கூறலாம். அது மட்டும்தானே இலவசமான ஒன்று :)

    முடிந்தவன் சாதிக்கிறான்; முடியாவதவன் போதிக்கிறான்... ன்னு சொல்லுவாங்க... யார் வேண்டுமானுலும் போதிக்கலாம்.அதை அப்படியே பின்பற்றதான் ஆளு இல்லை.

    நான் சுயம் என்று வேறொரு பஸ்ல சொன்னதன் அர்த்தத்திற்கு சாதியை உள்ளே இழுத்து இருக்கீங்களே இது நியாயமா? :)

    தேவர் சாதியை சார்ந்தவர்களே என் அம்மா/அப்பா/ பெரியப்பா/சித்தப்பா/சித்தி/அத்தை/ மாமன்/மச்சான்/பங்காளியாக இருக்கும்போது அதை துறந்து விட்டு வெளியே போக நான் என்ன உங்களைபோன்ற துறவியா? :)

    நான் என்னமோ, என் சாதியை நான் "ஆண்ட பரம்பரை/ஒசந்த சாதி" என்று சொல்லிக்கொண்டு, மற்றவனையும் உன் சாதியை சொல் யென்று கேட்டமாதிரியாக திரித்து சொல்லி இருப்பதை பார்க்கும்போது சிரிக்காமல் இருக்கமுடியல... :)

    இரா.ச.இமலாதித்தன் நாகப்பட்டினம் - நான் பொதுவாகத்தான் கேட்கிறேன்,

    உன் அப்பன் இப்படித்தான் எங்க அப்பனை செய்தான், அதுக்கு போட்டியாக நானும் உன்னை இப்படித்தான் செய்வேன் ன்னு வீணாக, அடிப்படை அறிவே இல்லாமல் ஒரு இனத்தையே எதிரியாக நினைப்பதால் யாருக்கு லாபம்? அரசியல் வாதிகளை தவிர வேற எந்த சாதிகாரனுக்கும் லாபம் கிடைக்காது. அதை புரியாமல் திமிறி எழும்போது, இரு பக்கமும் அந்த வெறி அதிகமாகவே செய்யும் என்பதை புரிந்துகொள்ளாமல், இணைய புரட்சியாளர்கள் மனம்பிறழ்ந்து மனசுக்கு வந்ததையெல்லாம் எழுதி, ஒரு இனத்திருக்கு இவர்கள் தான் ஒட்டுமொத்த எதிரியென மாயை உருவாக்குவதன் மூலம் என்ன பெரியதாக நடந்துவிடும்? ஒன்ற மட்டும் நடக்கும், நாம் அன்று பார்க்காத சாதி கலவரத்தை இன்று பார்க்கலாம்.

    மீண்டுமொரு சாதிகலவரத்தை உருவாக்கும் வினவு மாதிரியான இணையங்களை தடை செய்தால் தான் அப்பாவி மக்கள் நலமாய் இருக்க முடியும். இங்கே அப்பாவி மக்கள் என்பது, சாதி தாண்டியது..

    Thaniyan pandian - அடிப்படை ஞானம் இல்லாமல் புலம்புவதற்கு என்றுமே முடிவில்லை தான்.
    நமது நாட்டின் விடுதலைக்கு முன் நிலப்பிரபுத்துவ அடிப்படையில் இருந்த போது ஆண்டான் அடிமை முறை இருந்ததை யாரும் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இன்று ஜனநாயக அடிப்படையில் எல்லா மக்களுக்குமான் கல்வி, பொருளாதார, வேலைவாய்ப்புக்கள் அளிக்கப்பட்டு வருகிறது. மக்களாட்சி முறை இருக்கும் நாட்டில் இன்று யாரும் யாரையும் அடிமையாக வைத்திருந்து ஆதிக்கம் செலுத்த முடியாது. காலத்திற்கேற்ற மாற்றங்கள் உலகம் முழுவதும் நிகழ்ந்தவை, நிகழ்கின்றவை. ஆனால் இன்று என்ன நடக்கிறது. ஒட்டு மொத்த தேசத்தையும், இலக்கியத்தையும், மக்களின் பண்பாட்டு வீரியங்களையும், தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவதற்காகவே உருவாக்கப்பட்டது போன்ற விசவிதை தூவப்படுகிறது. அது நீச நீர் ஊற்றி வளர்க்கவும் படுகிறது. எதற்கெடுத்தாலும் ஒரு அடிமை புராணம், கோபம், எல்லாவற்றிக்கும் சாதி, எதற்கும் சாதி, எதிலும் சாதி என்ற மொன்னையான ஒற்றைப்பார்வை. அன்கில்யனின் பிரித்தாளும் கொள்கையும், மண் சாராத நாத்திகமும் இவர்களுக்கு செய்த இந்த மூளைச்சலவையை சரி செய்வது மிகக்கடினம்.

    நல்ல கல்வி, நல்ல வேலை, நல்ல வாழ்க்கை தரம் என்று கிடைத்தாலும் தனது தாழ்வு மனப்பானமையை போக்கிக் கொள்வதற்காக பிறரை குறை சொல்லும், தான் பிறந்த மண்ணை தூற்றும் குணம், இன்னும் இந்த மடையர்களுக்கு போகவில்லை. எதிலும் துவேசம் கொள்வது அழிவுக்கும் பூசலுக்கும் மட்டும் தான் வழிவகுக்கும். இங்கே அன்பு உண்டு, அறிவு உண்டு, மகிழ்ச்சி உண்டு. மானம் உண்டு. மரியாதை உண்டு. எல்லாவற்றையும் கற்பனையின் திறன் கொண்டோ, அல்லது எங்கயோ ஒரு மூலையில் நடப்பதை ஒட்டு மொத்த சமூக அநியாயமாக பரப்புரை செய்வதோ முட்டாள் தனம் தான். அது சமூகப் புரட்சியாக இவர்களுக்குப் படுவது தான் இன்றைய மிகப் பெரிய பிரச்னை.

    இவர்களின் இன்றைய ஒட்டு மொத்த சமூக பங்களிப்பிற்கு முன்னேற்றத்திற்கு தனிமனித வளர்ச்சிக்கு உள்ள நடவடிக்கைகள் என்ன என்ற பார்த்தல் ஏனைய சமூகங்களை போல் மிகக் குறைவு தான். அதை சரி செய்ய எல்லோரும் முன்னெடுக்க வேண்டும்.

    யாரும் இங்கே மற்றோருவர்களை குறை சொல்வதற்கோ, சண்டை இடுவதற்கோ, உயிரை கொல்வதற்கோ பிறக்கவில்லை.இங்கே ஏன் இந்த சண்டை என்பதற்கு காரணம் ஒருவரின் கைது. அதனை ஒட்டிய போராட்டங்கள, வன்முறை, அடிதடி, கண்ணீர் புகை, சாவுகள் எல்லாமே.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Cont.....
    குருபூஜைகள் ஞானிகளுக்கும், பிறருக்காக வாழ்ந்தவர்களுக்காக கொண்டாடப்படுவது.விடுதலை காலகட்டத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும், தேசியக் கட்சியின் தலைவராகவும், நாடு கடந்த மக்களின் விருப்பமிகு தலைவராகவும், ஆன்மீகத்தில் தூய்மை பெற்று ஆசைகள் துறந்து பிறருக்காக வாழ்ந்து தன்னுடைய வாழ்வையே பலருக்கும் முன்னோடியாக வாழ்ந்து மறைந்த ஒரு மகத்தான தலைவரை சாதி என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் அடிப்படையைக் கொண்டு தூற்றுவது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    காமராசரின், காங்கிரஸ்-பார்வர்ட் பிளாக் கட்சியின், ஆளும் கட்சியின் குறைகளை வீரியமாக எடுத்துவைக்கும் உண்மையை உரக்கக் கூறும் ஒரே காரணத்திற்காக முதுகுளத்தூரில் கலவரம் ஏற்படுத்தப்பட்டு, மறவர், சேர்வைக்காரர், இவர்களுக்கு உதவி செய்த ஒரு பள்ளர் என அரசியல் பழி வாங்கப்பட்டு கொல்லப்பட்டனர் என்ற ஒற்றைசார்புடையை அன்றைய அரசியலை புரிந்து கொள்ளக் கூட முடியாத அளவுக்கு அறிவுத் தளம் இன்றும் ஆங்கிலே அரசியல் சார்ந்து இருக்கிறது. என்ற இவ்வளவு பெரிய விளக்கமும் இது ஒன்றுக்காகவே.

    தென்னாட்டவர்கள் வீரியம் மிக்கவர்கள், வங்காளிகள் தீரம் மிக்கவர்கள் என முதன் முதலில் தன கோட்டைகளை அமைந்த சென்னையிலும், கல்கத்தாவிலும் நமது நாட்டின் தலைநகரை வைக்காமல் அவனுக்கு என்றென்றும் விசுவாசமாக இருக்கும் மக்கள் கூட்டம் இருக்கும் இடத்தில நமது நாட்டின் தலைநகரை வடநாட்டில் வைத்தான். பன்மொழி வித்தகர் அப்பாதுரையார் அன்றே தனது நூலில் இதை பதிந்துள்ளார். இது போல பல செய்திகள் நமது வரலாற்றில் புதைந்து இருக்கிறது.

    நல்லதுவும் அல்லதுவும் தான் இந்த உலகம். இந்த தமிழ் சமூகத்திற்கு முக்குலத்தோர் காவலர்களாகவும், தமிழ் வளர்த்த சான்றோர்களாகவும், இன்றும் ஏனைய மதத்தினரை மதித்தாலும் மதம் மாறமால் எம் மண்ணின் பண்பாடு காக்கும் மைந்தர்களாகவும், இன்றும் பலரின் ஜாதி துவேசத்திற்கு பலியாகாமல் கட்டுப்பாட்டோடு நிகழ்கால பிரச்சனைகளை எதிர்கொண்டு மேலும் முன்னேறும் விதத்தை யோசிக்கும் பலரை கொண்டும் இருப்பது மட்டுமே எனக்கு எனது சமூகத்தின் மேல் என்னை பெருமை கொள்ள வைக்கிறது. அதற்காகத் தான் என்னால் இவ்வளவு தூரம் விளக்கம் கொடுக்கவும் முடிகிறது.

    பிற சக சமூத்தினரை தூற்றும் எண்ணம் பசும்பொன் தேவர் ஐயாவின் வாழ்க்கையினை படித்த பிறகு என்னிடம் முற்றிலும் நீங்கியது உண்மை. அவரது வாழ்வு தூயதுறவியின், வேர் கொண்ட கூட்டத்தின் வீரியமான்அரசியலுக்குச் சொந்தமானது. எனக்கு அவரது வாழ்வு தெளிவு தான் கொடுத்திருக்கிறது. துவேசத்தை அல்ல. ஒரு தூய தமிழரின், பசும்பொன் ஐயா அவர்களின் வாழ்வினை போற்றுவோம். சிலருக்கு போற்ற முடியாவிட்டாலும் தூற்றாமல் இருக்கலாம்.

    நல்லவை போற்றுவோம். நல்லவை செய்வோம். நல்லவை தானாய் நடக்கும்.

    வாழ்க வளமுடன்.

    Thaniyan pandian - சில இடங்களில் குறைகளை அழுத்தமாக சொல்லும் பொருட்டு சில வார்த்தைகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனதல்ல. எல்லோரும் இம்மண்ணின் மைந்தர்கள் தான். எல்லோரும் ஒரு நாள் இறக்கப் போவதும் உறுதி தான்.

    நல்லவைகள் சிந்தித்து நல்லவைகள் செய்து நம் எதிர்கால சந்ததிகளின் நல்வாழ்விற்கு வழி வகுப்போம். அதற்கு இன்றே அடித்தளம் அமைப்போம்.

    ReplyDelete
  10. Cont.....
    Thaniyan pandian - நண்பருக்கு,
    சுபாஷ் அவர்களின் தலைமையில் இருந்த பார்வர்ட் ப்ளாக் கட்சியில் பல சாணார் இன மக்கள் இருந்திருக்கிறார்கள். கடந்த காலத்தில் காமராசருக்கு உதவியவரும் பசும்பொன் ஐயா தான். உடுப்பும், உண்டியும் இருக்க இடமும் கொடுத்த நாம் இன்று அவர்களாலேயே துன்பத்திற்கு உள்ளாகிறோம் என்ற காமராசர் பற்றி பின்னாளில் பசும்பொன் தேவர் ஐயா சொல்லியிருப்பதும் வரலாறு படித்தால் புரியும். உதவி என்று வரும் போது ஆன்மீகத்தில், தேசியத்தில் ஜாதி இல்லை. தவறு என்று வரும் போது அதில் அனைத்தும் பார்க்காது சாணார் மக்களுக்கான கொள்ளை வியாபாரத்தையும், கல்விகூட-அரசு திட்டத்திற்கான சுயநல (பெர்மிட்) அரசியலையும், நாடும் மாநிலமும் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் போது இவர்களுக்கு தெரியாமல் கோயம்பத்தூர் கிருஷ்ணன் கையில் புத்தம் புதிய ரூபாய் நோட்டடிக்கும் இத்தாலி அச்சு இயந்திரம் எப்படி வந்தது என்றும், ரசியாவை மேற்கோள் கொண்டு ஐந்தாண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போது ஐந்நூறு கோடிக்கு திட்டம் தீட்டினால் மேலும் ஐந்நூறு கோடிகள் கள்ள நோட்டாக அடித்து விநியோகம் செய்யும் தேச துரோகம் எதனால் என்றும், விருதுநகர் வியாபாரி நாராயணசாமி நாடாருக்கு எப்படி ஐந்து லட்சம் கள்ள நோட்டு கிடைத்தது என்பது போன்ற பசும்பொன் தேவர் ஐயாவின் பல்வேறு கேள்விகளின் எதிரொலியை தமிழக சட்டமன்ற பதிவேடுகளிலும் நீங்கள் பார்க்க முடியும்.

    மறவர்கள் முன்பு சானார் வீடுகளில் உண்பதில்லை. அதை கமுதி பகுதியில் ஆரம்பித்து வைத்தவர் பசும்பொன் தேவர் ஐயா அவர்கள். ஐயாவின் வீட்டில் தோட்டத்தில் காடுகரைகளில் வேலை செய்தவர்கள் எல்லாம் குடும்ப இனத்தவர்கள். சுற்றுபயணத்தின் காவேரிப்பாக்கம் சென்றால் அவர் தங்குவது மாரி என்ற தாழ்த்தபட்டவர் வீட்டில் தான். முப்பத்தி இரண்டரை சிற்றூர்களுக்கு சொந்தமானவர் கடைசி வரை இரண்டு கதராடைகளோடு தான் சுற்றுபயணம் செய்து காங்கிரஸ் வளர்த்தார். பின்பு நாடு நலம்பெற முற்போக்கு கட்சிக்கு ஊக்கம் கொடுத்தார். அவர் எதிர்த்து சாணர்களை அல்ல. சாதி போர்வையில் காமராசர் செய்த அக்கிரமங்களை.

    மேலும் சில தகவல்களுக்கு:
    பசும்பொன் பெருமகனார் மீது காமராஜ் நாடாருக்கு வெறுப்பு தோன்றக் காரணம்
    http://pasumponayya.blogspot.com/2011/08/blog-post.html

    Thaniyan pandian - சுயநல மனித வாழ்வில் பிறருக்காக வாழ்கின்ற பெரியவர்களை வணங்குவது தமிழர் பண்பாடு. வீரத்தின் அடிப்படையில் கருப்பசாமி, முனியசாமி, அய்யனார், சுடலைமாடன், மதுரை வீரன் என இம்மண்ணின் காவலர்களை தெய்வமாக குல தெய்வமாக வழங்குவது தமிழர் பண்பாடு. நடுகல் நட்டு வீரத்தை போற்றியது இந்த மண். கொலைகளுக்கு விழா எடுத்து கொண்டாடுவதில்லை. ஆனால் கலைஎடுப்பதர்க்கு இம்மண்ணில் மதிப்பு உண்டு. இயல்பான வாழ்வு வாழ்ந்து செத்துப்போன யாருக்கும் பல லட்சம் பேர் சேர்ந்து விழா கொண்டாடுவதில்லை. இந்த அடிப்படை கூட பல பேருக்கு தெரியாமல் போல் புலம்புவது ஒன்றும் வியப்பில்லை. அவர்களின் நிலைப்பாடு அது.

    யாரும் யாருடைய விழாவினை கொண்டாடும் பொது துப்பாக்கியில் சுட்டுக் கொல்லமாட்டார்கள். கலவரம், தாக்குதல், சமூக ஒழுங்கு அமைதிக்கு பாதகம் விளையும் போது செய்யும் அடாவடி செயல்களை அடக்கவே கடைசி கட்டமாக காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்துவது சாதாரண மக்களுக்கு கூட தெரியும். இதில் எந்த இனமும் விதிவிலக்கல்ல. இறந்து போனதை யாரும் கொண்டாட முடியாது. ஆனால் இறப்பை தவிர்த்திருக்கலாம் சரியான ஒழுக்கமான போராட்டம் மூலம்.

    ReplyDelete
  11. kavya,

    your question is itself nonsense..

    If i declare, that all those who clean toilets in your house are dalits, all those who clean sewages in your street are dalits, and all those who clean your streets are dalits, then you are the worst oppressor whom i can accuse and prosecute..

    The problem is NOT in jaathis, but in the way, the jaathis are classified..

    People like you, who employ dalits to build your houses, to paint your houses, and to clean your toilets, convenient accuse others..

    see my blog post on the same issue..
    http://psenthilraja.wordpress.com/2009/09/21/dalits-and-menial-jobs-who-forced-them/

    would be glad to expose the shallowness of your argument

    ReplyDelete
  12. அருமையான பதிவுகள் தனியன்.. தவரின் வாழ்க்கை சரிதங்களை புத்தகமாக வெளியிட்டு, பல தரப்பு மக்களிடமும் சேர்க்க வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.. அதுவே, இன்றைய முக்குலத்தோருக்கு ஒரு வழிகாட்டுதலாக அமையும்.. காந்தி நேரு பொன்ற போலிகளின் சரித்திரங்களை பாடமாக வைத்து, இரண்டு மூன்று தலைமுறையினரை 23ஆம் புலிகேசியாக்கிவிட்டனர்.. நமக்கு தேவை உண்மையை உலகுக்கு சொல்ல ஒரு உக்கிர புத்திரன்..

    ReplyDelete
  13. Dear Inquiring Mind,

    Your article is really trustworthy and praiseworthy too. Its me had debate with one of Atheist friend about this on one entire night of the day. I've told him that all the current social structures and its duties are evolved and got new dimension enormously in the recent (time)past only.

    Western countries invented machines to do low grade jobs but here we still using humans for that. The rich Tamil culture and Indian tradition towards human being and livelihood is mostly questioned and wrongly noted by western writers & their politicians and its badly followed by these so-called present democratic anti-social guys too. They totally hide the well fabricated episode of our history and its real rotten face. what to do, their stance is like that only. Poor guys! Poor Stuffs!

    Thanks for your comments and views...

    ReplyDelete
  14. http://thevarkural.blogspot.com/b/post-preview?token=k54jHTMBAAA.QHGa2xhl01ELSiTHpAo2Dg.HVfl126RA_dipbV56J-j5A&postId=7477912544976627325&type=POST

    ReplyDelete
  15. dont use the words for us HARIJAN,THALITH,SC,

    TELL AS KUDUMBAMAAR

    ReplyDelete